Tuesday, September 30, 2014

GRANT OF DEARNESS RELIEF TO CENTRAL GOVERNMENT PENSIONERS/FAMILY PENSIONERS - REVISED RATE EFFECTIVE FROM 1.7.2014. (

COM. T. NETHAJI SUBASH , DIVISIONAL SECRETARY, SALEM EAST DN. RETIRING FROM SERVICE TODAY !


நம்முடைய  அன்பிற்கினிய  தோழரும் , தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநில உதவித் தலைவரும், சேலம் கிழக்கு கோட்டத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தின் செயலருமான 


தோழர். T. நேதாஜி சுபாஷ்  அவர்கள் 


30.09.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார்.  தனது  பணிக்காலத்தில்  தன்னை முழுவதுமாக தொழிற்சங்க இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட ஒரு சிறந்த தோழர். நேதாஜி அவர்கள். அவர் அரசுப் பணி  நிறைவு பெறும் இந்நாளில்  அவர் எல்லா நலனும் வளமும் பெற்று அவரது பணி  நிறைவுக் காலம் சிறப்பாக அமைந்திட  தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் அவரை மனதார வாழ்த்துகிறது.


Monday, September 29, 2014

HUMANITARIAN APPROACH OF PMG, CCR SRI. MERVIN ALEXANDER

PMGG , CCR  அவர்களின் மனிதாபிமானம் 

கடந்த வெள்ளியன்று  செங்கல்பட்டு கோட்ட கண்காணிப்பாளர் திரு. லோகநாதன் அவர்கள் HEART ATTACK  ஏற்பட்டு  GLOBAL HOSPITAL இல் சேர்க்கப் பட்டுள்ளதாகவும் உடன் அவருக்கு ANGIOPLASTY  செய்திட வேண்டும் என்றும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றும்  மருத்துவர்கள் அறிவித்ததாக நம்முடைய  தோழர். G . ராமமுர்த்தி (செங்கை கோட்டச் செயலர்  மற்றும் M.E.)  நம்முடைய மாநிலச் செயலரிடம்  வெள்ளி மாலை 04.00 மணியளவில் தெரிவித்தார். 

அதற்கான  மருத்துவமனை மற்றும் மருத்துவ செலவு சுமார் ரூ. 2,00,000/-  தேவைப்படும் என்றும் எனவே உடன் மருத்துவ முன்பணம்  பெறுவதற்கான உத்திரவு பெற  மண்டல அலுவலகம் வந்துள்ளதாகவும்  நம்மிடம் தெரிவித்தார்.  ஆனால் அந்த நேரத்தில் நம்முடைய PMG, CCR  அவர்கள்  CHIEF  PMG மற்றும்    நமது வட்டத்திற்கு வருகை புரிந்துள்ள  நம்முடைய அஞ்சல் வாரிய உறுப்பினர் அவர்களுடன் CAMP  சென்றுள்ளதாகவும்  அவரை உடன் தொடர்பு கொள்ள இயலாது என்றும் மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார்கள் .  

வேறு வழியிலாமல் நம்முடைய மாநிலச் செயலர் அவர்கள்,   பிரச்சினையின் அவசர மற்றும் அவசியம் கருதி கை பேசியில்   PMG CCR அவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால்  அவரது CELL கிடைக்க வில்லை. எனவே நிலைமையை விளக்கி  உடன் மருத்துவ முன்பணம் வழங்கப் பட்டால் மட்டுமே  ஒரு உயிர் காக்கப்படும் என்றும் அதற்கான உரிய உத்திரவு அடுத்த நிலை அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தி மூலம்  PMG CCR  அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த  அடுத்த 10 நிமிடத்தில் ,  அத்துணை  TIGHT SCHEDULE  க்கு இடையிலும் நம்முடைய PMG CCR அவர்களால் உடன் பாதிக்கப் பட்ட  SP செங்கல்பட்டு அவர்களுக்கு மருத்துவ முன் பணம் வழங்கிட  உத்திரவு மண்டல நிர்வாகத்திற்கு அளிக்கப் பட்டது. 

அதன் மீது உடன் DPS  CCR  அவர்களும் செயல்பட்டு , A.O. அவர்களிடம்   ESTIMATE  மற்றும் விண்ணப்பம் அளிக்கப் பட்டு அதன் மீது  நடவடிக்கை எடுக்கப் பட்டு மாலை 06.30 மணியளவில்   80%   மருத்துவ முன்பணம் அளித்திட உரிய உத்திரவும் அளிக்கப் பட்டது. இரண்டு மணி நேரத்தில் அனைத்தும்  வேகமாக நடைபெற்று,  மறுநாள்  பாதிக்கப் பட்ட திரு. லோகநாதன் அவர்களுக்கு  ANGIOPLASTY யும்  விரைவாக  செய்யப்பட்டு இன்று அவர் நலமுடன் உள்ளதாக  நம்முடைய  செங்கை கோட்டச் செயலர் மற்றும் மாநிலச் சங்க அமைப்புச் செயலர்  தோழர். G .  ராமமுர்த்தி  நம்மிடம் தெரிவித்தார்.  செங்கை SP அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று  பணிக்குத் திரும்ப நம்முடைய நெஞ்சு நிறை வாழ்த்துக்கள் !

தொழிற் சங்க ரீதியாக  செங்கை SP அவர்கள்  மீது, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணிக்கு வர அவர் உத்திரவிடுகிறார் என்று நாம் ஏற்கவே PMG அவர்களிடம் புகார் செய்து அதன் மீது நடவடிக்கை கோரியது , ஊழியர் பிரச்சினை சார்ந்த  விஷயம். ஆனால் எந்த ஒரு மனிதர் பாதிக்கப் பட்டாலும் உடன் ஓடிச் சென்று உதவுவது என்பது  நமது சங்கத்திற்கே உரிய  நல்ல பண்பு ஆகும். பிரச்சினைகளை  மனதில் கொள்ளாமல் , எந்தவித காழ்ப்புணர்ச்சியும், இன்றி செங்கை  SP அவர்களுடன் தொடர்ந்து  அருகில் இருந்து , அவருக்கு உரிய சிகிச்சை அளித்திட  உறுதுணை புரிந்த  நம் செங்கை  தோழர் G . ராமமூர்த்தி அவர்களும்  அனைவரின் பாராட்டுதல்களுக்கும்  உரியவரே !

PMG, CCR  அவர்கள்  இப்படி மனிதாபிமானத்துடன், உடன் உத்திரவுகள் வழங்குவது என்பது , இது முதல் முறையல்ல. ஏற்கவே  நங்கநல்லூர்  POSTMASTER  அவர்களின் மகன் விபத்தில் அடிபட்டு  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதும் , நம்முடைய அஞ்சல் நான்கின்  DY . CIRCLE  SECRETARY  தோழர். பத்மநாபன் அவர்கள்  HEART  ATTACK  இல் பாதிக்கப் பட்ட போதும் விரைந்து நடவடிக்கை எடுத்த   PMG CCR  திரு. மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களின் மனிதாபிமானத்தை நாம் ஏற்கனவே  நன்கு உணர்ந்திருக்கிறோம். 

நிச்சயம் அவரது இந்த செயல்கள்  நம் அனைவரின்  பாராட்டுதலுக்கும் உரியது ஆகும் . அவர் இதனை எதிர்பார்த்து செய்வதில்லை என்றாலும் , இப்படி நல்ல எண்ணத்துடன் செயல்படும் மனிதாபிமானம் மிக்க உயர் அதிகாரிகளை பார்ப்பதே அபூர்வமாக உள்ள இந்த காலத்தில் , இப்படிப் பட்டஒரு அதிகாரியின் நற்செயலை நாம் பாராட்டாவிட்டால் நாம் நிச்சயம்  தவறு செய்தவர்கள் ஆவோம் .   நம்முடைய நெஞ்சார்ந்த  பாராட்டுக்களும்  நன்றிகளும்   அவருக்கு உரித்தாகட்டும்!  உடன் செயல்பட்டு உதவிய DPS  CCR  திரு. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும்      
 A .O .CCR  அவர்களுக்கும்  நம் நன்றிகள் ! இந்த நிலை என்றும் தொடரட்டும்!   நல்லவை  என்றும் நடக்கட்டும் !  என மனமார வாழ்த்துவோம். !

பாண்டிச்சேரி  கோட்ட  FR 17 A  பிரச்சினை 

பாண்டிச்சேரி கோட்டத்தில்  டிசம்பர் 2013 இல் மூன்று நாட்கள் தலமட்ட 
அளவில் வேலை நிறுத்தம் செய்ததற்காக அந்தக் கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளர் அவர்களால் நிறைய தோழர்களுக்கு FR 17 A  வழங்கப்பட்டு  அதன்மீது அவர்கள்  அளித்த மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில் அவர்கள்  காலதாமதமாக மாநிலச் சங்கத்தை  அணுகினார்கள் என்பதும் , 

இருந்தபோதிலும் இது குறித்து  நம் அஞ்சல் மூன்று  மாநிலச்  செயலர்  அவர்கள்  பாண்டி அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு  செயலர்களை அழைத்துச் சென்று CPMG  மற்றும் PMG CCR  அவர்களை தொடர்ந்து சந்தித்துப் பேசிய விபரங்களும்  ஏற்கனவே  இந்த வலைத்தளத்தில் நாம் தெரிவித்திருந்தோம். 

அதன் மீது  தற்போது  உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு  எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த  ஏழு தபால்கார தோழர்களுக்கு  FR 17 A  யில் இருந்து விலக்களித்து  அவர்கள் தேர்வு எழுத  PMG CCR  அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பது  மகிழ்ச்சியான செய்தியாகும்.  

ஆனால்  ஏற்கனவே  LGO  விண்ணப்பங்கள்  DTE  மூலம்  CMC  க்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் , இந்த உத்திரவு இந்த ஆண்டில் நடைமுறைப் படுத்த இயலுமா என்பது  கேள்விக்குறியே ! 

எனினும் அதற்கான முயற்சிகளை  அகில இந்திய சங்கங்கள் மூலம் நாம் எடுத்துள்ளோம்.  இந்த உத்திரவினை அளித்து  ஏழு தபால்கார இளம் தோழர்களுக்கு  பதவி உயர்வு பெற வாய்ப்புகளை ஏற்படுத்திக்  கொடுத்த  PMG CCR  அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி  உரித்தாகும். !

ANOHER CHANCE GIVEN FOR ABSENTEES TO APPEAR FOR COMPUTER SKILL TEST IN TAMILNADU.. THANKS TO COM. KRISHNAN, RESPECTED DPS HQ AND CHIEF PMG, TN.

நன்றி !  நன்றி !!

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

கடந்த சனியன்று மாலை சுமார் 06.00 மணியளவில்  மாநிலச் சங்கத்திற்கு பல தோழர்களிடமிருந்து  ஒரு புகார் வந்தது . அதாவது தமிழக முதல்வர் அவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக தமிழகமெங்கும்  பேருந்துகள்  நிறுத்தப்பட்டன. ஞாயிறு அன்று P.A. தேர்வுக்கு  ஏற்கனவே  COMPUTER  SKILL  டெஸ்ட் அறிவிக்கப் பட்டிருந்தது உங்களுக்குத் தெரியும்.  உரிய TRANSPORT  வசதி இல்லாதால் தொலை தூரங்களில் இருந்து  COMPUTER  SKILL TEST  தேர்வுக்கு , குறிப்பாக கோவைக்கு  பயணம் செய்ய இயலாததால் அந்த தேர்வினை தள்ளி வைக்கவேண்டும் என்பதே இந்த புகாரின் சாரம் ஆகும்,

எனவே உடனடியாக இரவு 07.00 மணியளவில் நம் மாநிலச் செயலர்  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இதன் மீது ஆவன நடவடிக்கை வேண்டினார்.  இந்த தேர்வு  DIRECTORATE  மூலம்  அறிவிக்கப்  பட்டிருப்பதாலும்  தேர்வை  CMC  என்ற தனியார் நிறுவனம் நடத்துவதாலும்  மாநில நிர்வாகத்தால் உடன்  நேரடி நடவடிக்கை  எடுக்க இயலாதென்பதை  தெரிவித்தார்.  

இருந்த போதிலும் இந்த பிரச்சினை குறித்து  CPMG அவர்கள் கவனத்திற்கும்  DDG  ESTT  அவர்கள் கவனத்திற்கும் உடன் கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்தார். அதன்படியே  இரவு நேரத்தில்  DTE  இன்  உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு  தேர்வினை ரத்து செய்யுமாறும் இல்லையென்றால்   ABSENTEE  களுக்கு வேறு ஒரு நாளில்  தேர்வு எழுதிட அனுமதிக்குமாறும் வேண்டியதாக நம்மிடம் இரவு 09.00 மணிக்கு தெரிவித்தார்.

இதே நேரத்தில் நம் மாநிலச் செயலர்  மதுராவில் இருந்த நம்முடைய  சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச்  செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையில்  உடன் கவனம் செலுத்துமாறு வேண்டினார். அவரும் ஒரு மணி நேரத்தில்  நிச்சயம் பதில் அளிப்பதாக உறுதி அளித்தார். இதன் படியே  தோழர். கிருஷ்ணன் அவர்கள்  MEMBER  HR  அவர்களையும் DDG  ESTT  அவர்களையும்  தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையைத் தீர்த்திட வேண்டினார்.  

இதன் படியே இரவு 10.30 மணியளவில்  மீண்டும்  நம் மாநிலச் செயலரிடம் தோழர் கிருஷ்ணன் அவர்கள் , பிரச்சினையைத் தீர்த்திட உரிய உத்திரவு CMC க்கு  அளிக்கப் பட்டுள்ளதாகவும்  அதன் மீது மாநில நிர்வாகத்திடம் பேசி நிலைமையை தெரிவிக்குமாறும்  நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார். 

இரவு 10.45 க்கு நம் மாநிலச் செயலர்  அவர்கள்  நம்முடைய DPS  HQ  அவர்களிடம் இந்த DEVELOPMENT  ஐத் தெரிவித்து ஆவன மேற்கொள்ள வேண்டினார்.  அந்த இரவு நேரத்திலும்  உடன்  நடவடிக்கை எடுப்பதாக  DPS  HQ  அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்.  மேலும் இந்த செய்தி நம்முடைய  சங்கத்தின் முக்கியமான நிர்வாகிகளுக்கு இரவு 11.00 மணியளவில் நம்முடைய மாநிலச் செயலரால்  SMS  மூலம்  தேர்விக்கப் பட்டது .

அதன்படியே  தேர்வில் கலந்துகொள்ள ஞாயிறு ஆண்டு வந்திருந்த சுமார் 350 பேருக்கு தேர்வு நடத்தியும் ,  வர இயலாமல் ABSENT  ஆன சுமார் 150 பேருக்கு மீண்டும் 30.09.2014 அன்று தேர்வு நடத்திட அறிவிப்பும் வெளியிடப் பட்டதாக இன்று நம் மாநிலச் செயலரிடம்  DPS HQ  திரு . கோவிந்தராஜன் அவர்கள் தெரிவித்தார். அதன்படியே  தேர்வுக்கான வலைத்தளத்தில் அதிகார பூர்வமாக இந்த  அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன் நகலை கீழே பார்க்கவும் :-


Update as on September 28, 2014

IMPORTANT: For Candidates of Paper II (Computer Skill Test) at Tamil Nadu Postal Circle, who could not appear in the exam sessions on 28 September 2014 at the Coimbatore exam venue, have opportunity to appear on September 30, 2014 on First cum First Serve basis at the same exam venue in the morning sessions beginning 0900hrs. Same Admit Card will be valid.

இரவு நேரமான போதிலும் , விடுமுறை தினமானபோதிலும் , நம்முடைய கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு , ABSENTEE  களுக்கு  தேர்வு எழுதிட மேலும் ஒரு CHANCE  பெற்றிட DIRECTORATE  இல் உள்ள உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு  ஏற்பாடுகள் செய்த  நம்முடைய  DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களின் மனிதாபிமான மிக்க செயல் பாராட்டுக் குரியது.   அவருக்கும் அவரது செயலுக்கு  உரிய உத்திரவு தந்த நம்முடைய CHIEF  PMG திரு. T. முர்த்தி அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாகவும் நம் மாநிலச் சங்கத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றி !

எந்த நேரத்தில் தொடர்பு கொண்டாலும், எங்கே இருந்த போதிலும் உடன்  டெல்லியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதற்கான ஆவன நடவாடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல்  உடன்  நமக்கு உரிய பதிலையும் பெற்றுத்தந்த நம்முடைய சம்மேளன முன்னாள் மாபொதுச்  செயலர்  தோழர். M  கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றி என்றென்றும் உரித்தாகும் ! 

தேர்வில் கலந்துகொள்ள இயலாமல் விடுபட்ட  தோழர்கள் மீண்டும் மகிழ்வுடன் தேர்வு எழுதிடவும்  வெற்றி வாய்ப்பைப் பெற்றிடவும்  நம் மாநிலச் சங்கத்தின்  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தியை பார்த்திடாத  தோழர்கள் எவரேனும்   உங்கள் பகுதியில் இருப்பின் தயவு செய்து  அவர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்திட வேண்டுகிறோம்!    நன்றி !.


CAT Hyderabad order in OA 56/2014 - RTP Services to count for MACPs

A LETTER ADDRESSED BY A SOCIAL ACTIVIST IN COMMON INTEREST

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கீழே காணும் கடிதம் நமது மாநிலச் சங்கத்திற்கு EMAIL   மூலம் அனுப்பப் பட்டுள்ளது.  கடிதத்தை எழுதியவர் ஒரு முன்னாள் முது நிலைக் கண்காணிப்பாளர் மட்டுமல்ல  ஒரு சமூக சிந்தனையாளரும் கூட. அவர்  பணி  நிறைவு பெற்று கிட்டத்தட்ட 14 ஆண்டுகள்  கடந்த பின்னரும் கூட , பாதிக்கப் பட்ட தோழர்களுக்காக நீதிமன்ற வழக்குகளை நடத்துவதில்  இன்றுவரை உதவியாக இருப்பவர். எந்தவித பணப்பயனும் எதிர்பாராமல் , பல வழக்குகளில் வெற்றிகள் பெற்று எண்ணற்ற தோழர்களுக்கு மறுவாழ்வு  அளித்திருப்பவர். அவரது கருத்துக்கள் நம் மாநிலச் சங்கத்தின் மூலம்  நமது அகில இந்திய சங்கம், NFPE  மற்றும் CONFEDERATION தலைமைகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
N. R. SATHYAMURTHY,
1H V.I.P. NAGAR,
KONDUR,
CUDDALORE 607006                                          04142—291556===26.9.2014

DEAR SIR,

                         I am a great admirer of Mr. Narendra Modi but I strongly feel that it is not necessary, fair or wise to cancel the holiday on 2nd October declared and observed in commemoration of the Father of the Nation. Denotifying the holiday will be tantamount to withdrawing the respect associated with declaring the day as a national holiday.  One would have thought many times to cancel the holiday for a religious festival .  

                       For the purpose of taking the “cleanliness pledge” the staff need not be deprived of the holiday. The national and other holidays are utilized by the employees for attending to other essential items of domestic work. The proposed deprivation will be keenly felt in the families where both the spouses are employed. The pledge can be conveniently and comfortably taken on a usual working day. It will meet the ends of satisfaction, if the employees put in their best during the allotted working hours.  The sense of devotion to duty should be encouraged by appeals and not by order and force.  It is not expedient to rub the employees on the wrong side.

               The cleanliness campaign is quite laudable and one wishes that it becomes a great success and is equally  devoid of any even a minor grouse from any source.

                        This is written, more in the interest of Nation and Mr. Modi than in the limited interests of the employees.

                                                                                               YOURS TRULY,        

                                                                                      N. R. SATHYAMURTHY.

PAPANASAM AND PALANI BRANCH CONFERENCES HELD ON 28.09.2014

பாபநாசம் அஞ்சல் மூன்று கிளை மாநாடு 

பாபநாசம் அஞ்சல் மூன்று கிளையின் 17 ஆவது ஈராண்டு மாநாடு கடந்த 28.09.2014 அன்று பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் அதன் கிளைத் தலைவர் தோழர் V . ஸ்ரீராம் அவர்கள் தலைமையில், கிளைச் செயலர் தோழர். J . குண சீலன் அவர்கள் வரவேற்புரையாற்ற,   சிறப்பாக  நடைபெற்றது. 

மாநாட்டில் மாநிலச் சங்கத்தின் உதவி  நிதிச் செயலரும், குடந்தை அஞ்சல் மூன்று கோட்டச் செயலருமான தோழர். R . பெருமாள்,  தஞ்சல் அஞ்சல் மூன்று  கோட்டத்  தலைவர் தோழர். M . ராஜேந்திரன், கோட்டச் செயலர் தோழர். S . செல்வகுமார், நிதிச் செயலர் தோழர். மணி,  மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் கோட்டத்  தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன், கோட்டச் செயலர் தோழர். K .  துரை , நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

கிளைச் சங்க மாநாட்டில் கீழ்க் காணும் நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தலைவர் :                 தோழர். J . குணசீலன் ,  SPM , அய்யம்பேட்டை S .O .
கிளைச் செயலர் : தோழர். D.R  லெனின் , P .A ., அய்யம்பேட்டை  S .O .
நிதிச் செயலர் :       தோழர். V .S. சரவணன் , P .A ., பாபநாசம் HO  

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=====================================================================

பழனி  அஞ்சல் மூன்று கிளை மாநாடு 

பழனி  அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின் 27ஆவது கிளை மாநாடு  கடந்த 28.09.2014 அன்று  பழனி தலைமை அஞ்சலகத்தில்  அதன் தலைவர் M . கோபாலக்ருஷ்ணன் தலைமையில்  செயலர் தோழர். ASM . ராஜ்குமார் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கிளைச் சங்க மாநாட்டில் கீழ்க் காணும் நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

தலைவர் :                 தோழர். M . கோபாலகிருஷ்ணன்,  PRI (P ), பழனி HO 
கிளைச் செயலர் : தோழர்.  K . சுப்பிரமணியன் , TRR , பழனி HO .
நிதிச் செயலர் :       தோழியர். K . கீதாமணி , P .A ., நரிக்கல்பட்டி S .O .

தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
=====================================================================

DIAMOND JUBILEE CELEBRATIONS OF NFPE AT CHENNAI CITY SOUTH DIVISION ON 24.09.2014 A GRAND SUCCESS !

தென் சென்னை அஞ்சல் மூன்று  மற்றும் அஞ்சல் நான்கு கோட்டச் சங்கங்களின் சார்பாக நமது சம்மேளனத்தின் வைர விழா கருத்தரங்கு நிகழ்ச்சி கடந்த 24.09.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் துவங்கி சென்னை  புனித தாமஸ் மலை  தலைமை அஞ்சலகத்தில் (ST. THOMAS MOUNT)  வெகு சிறப்பாக நடைபெற்றது. 

வைர விழா நிகழ்வுக்கு அஞ்சல்மூன்றின்  கோட்டத் தலைவர் தோழர் வாசுதேவன் அவர்களும் அஞ்சல் நான்கின் கோட்டத் தலைவர்  தோழர். ராஜன் அவர்களும் கூட்டுத் தலைமையேற்று நடத்தினர்.  அஞ்சல்மூன்றின் கோட்டச் செயலர் தோழர் . ராஜேந்திரன் அவர்கள் மற்றும் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர். பார்த்தசாரதி அவர்கள் இருவரும்  முன்னிலை வகிக்க , தென் சென்னை கோட்ட மகிளா  கமிட்டியின் கன்வீனர் தோழியர். நாகலட்சுமி அவர்கள்  இனிய வரவேற்புரையாற்றினார். 

வைர விழா நிகழ்வில்  தென் சென்னை கோட்டத்தின்  ஒய்வு பெற்ற சங்க முன்னோடிகள் அனைவரும்  வரவழைக்கப் பட்டு  தலைவர்கள் மூலம் சால்வை  அணிவிக்கப் பட்டு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டு கௌரவிக்கப் பட்ட நிகழ்வு மிகவும் சிறப்பாக  அமைந்தது.

விழா நிகழ்வில்  நமது சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர் K . R  . அவர்கள்  நமது அஞ்சல் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில்  நமது சம்மேளனத்தின் தியாக வரலாற்றை எடுத்துரைத்தார். 
.
நமது  அஞ்சல் மூன்று அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். 
N .S . அவர்கள் இலாக்காவின் இன்றைய நிலையையும் நாம் எதிர் கொள்ள வேண்டிய  சவால்கள் மற்றும் தொழிற் சங்கத்தின் கடமை குறித்து சிறப்புரையாற்றினார்.  

நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் K .V .S . அவர்கள்  ஏழாவது ஊதியக் குழு முன் நாம் வைத்துள்ள கோரிக்கை மனு குறித்தும் அதனை நிறைவேற்றிட நாம் மேற்கொள்ள வேண்டிய  போராட்டங்கள் குறித்தும் தெளிவாக சிறப்பான உரையை நமக்கு அளித்தார். 

மற்றும்  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். ரவிச்சந்திரன், GDS  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் , அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் உதவித் தலைவரும் தென் சென்னை கோட்டச் சங்க முன்னாள் உதவித் தலைவருமான தோழர். வெங்கட்ராமன் , சென்னை GPO அஞ்சல் மூன்று செயலர் தோழர். முரளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

NFPE  வைர விழா நிகழ்வு வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் தென் சென்னை கோட்டத்தில் நடைபெற்றது என்றால் அது மிகையாகாது.  இரவு உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் அனைத்தையும்   மிகச் சிறப்பாகச் செய்திருந்த  அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். N . ராஜேந்திரன் , அஞ்சல் நான்கு கோட்டச் செயலர் தோழர். பார்த்தசாரதி மற்றும்  தென் சென்னை கோட்டத்தின் அனைத்து தோழர்களுக்கும் மாநிலன்ச் சங்கத்தின் வாழ்த்துக்களையும்   நன்றியையும்  அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

விழா நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே தருகிறோம்.


















CONFEDERATION DECLARES NEXT PROGRAMME OF ACTION

TWO HOURS MASS SQUATTING OF NOT LESS THAN 3000 EMPLOYEES AT EACH STATE CAPITAL AT A CENTRALLY LOCATED IMPORTANT PLACE ON 18.11.2014

MODI GOVERNMENT IS TOTALLY NEGATIVE AND AGGRESSIVE TOWARDS CENTRAL GOVERNMENT EMPLOYEES

No DA Merger, No Interim Relief, No Inclusion of GDS Under 7th CPC, No relaxation of Compassionate Appointment condition, No withdrawal of New Pension Scheme, No Filling up of Posts, No Removal of Bonus Ceiling, No Assurance Regarding 01.01.2014 Date of Effect of 7thCPC, No Regularisation of GDS and Casual Labour, For Each Demand the reply is NO, NO, NO, NO………………

NO DIFFERENCE BETWEEN NDA AND UPA GOVERNEMENT LET US PREPARE FOR A MAJOR INDUSTRIAL ACTION

Dear Comrades,

Confederation National Secretariat met at New Delhi on 26.09.2014, under the Presidentship of Com. K. K. N. Kutty, National President. Com. S. K. Vyas Ji, Advisor was also present. After detailed deliberations on all agenda items, the following decisions are taken.

1.      Decided to further intensify the campaign and agitational programmes against the Governments attitude towards the legitimate demands of the Central Government Employees. It is decided to organize two hours MASS SQUATING of not less than 3000 Central Government employees on 18th November 2014, at a centrally located important place at all the state capitals. Effort should be made to ensure maximum participation of Lady comrades in the programme. Next phase of action will be decided after successful implementation of the above programme.
2.      Decided to explore the possibility of joint action with Railways (AIRF) and Defence (AIDEF) culminating in strike.

3.      Decided to participate and implement all the decisions taken in the National convention of workers organised by Central Trade Unions on 15.09.2014.
4.      Decided to organize Two days All India Trade Union workshop of Confederation at Bangalore on 2015 January 3rd and 4th. Total number of delegates will be limited to 200. COC Karnataka has agreed to host the Trade Union workshop.
5.      Decided to grant affiliation to the following two organizations.
(1)   Forest Survey of India Employees Association
(2)   Nehru Yuvak Kendra Sanghathan (NYKS) workers Welfare Association.
6.      Decided to organize Dharna in front of all Government of India Presses and Stationery offices and also in front of Government Medical stores Depot to protest against the proposed move to close down these offices. In front of Government of India Presses Dharna will be organised by Confederation on 27th October 2014 and in front of Government Medical Stores Depot dharna will be organised on 30th October 2014.
7.      Financial position of the Confederation was presented by Financial Secretary Com. Vrigu Bhattacharjee. CHQ is running with a ‘NIL’ balance. Unless and until all the affiliated Unions/Associations voluntarily clear all pending dues it will be very difficult to run the CHQ. It is decided that Financial Secretary shall issue notice to all affiliated organizations to clear the pending dues.
8.      National Secretariat calls upon all Central Government employees and also the affiliated organisatons and state COCs to make the 18th October programme a thundering success.

(M. Krishnan)
Secretary General
Confederation

MAKE IT A GRAND SUCCESS - MOBILISE FOR MARCH TO PARLIAMENT BY JCA

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
IST FLOOR, NORTH AVENUE POST OFFICE, BUILDING NEW DELHI-110001

No PF/o1 (e)/2014                                                                 Dated 26th September 2014

CIRCULAR
To

            All General Secretaries/Office bearers (NFPE)
            All Circle/Divisional/Branch Secretaries

20000 POSTAL & RMS EMPLOYEES INCLUDING GDS WILL PARTICIPATE IN THE PARLIAMENT MARCH ON 4TH DECEMBER 2014

            A meeting of Postal JCA consisting NFPE & FNPO was held at NFPE office New Delhi on 25.09.2014 which was attended by the leaders and General Secretaries of both Federations. Com. M. Krishnan, Ex-Secretary General, NFPE also attended the meeting. A review of agitational programmes was taken and action on Charter of Demands was discussed in the meeting and following decisions were taken:

            1.         The Department has informed that it will send reply on the Memorandum & Charter of Demands submitted by JCA within a week. After             receipt of reply from the Department JCA will meet again and will decide further course of action.

2.         It was decided that the Postal JCA will organize a massive Parliament March on 4thDecember, 2014. 20000 Postal employees will be mobilized to participate in the Parliament March. The quota was allotted 15000 to NFPE and 5000 to FNPO. Respective Federations will make accommodation arrangements for their members. Central Trade Unions are conducting Parliament March on 5th December 2014.
           
            3.         In the Parliament March Central Trade Union leaders will be invited.

NFPE FEDERAL SECRETARIAT MEETING

                        Just after JCA meeting Federal Secretariat Meting of NFPE was held at NFPE office New Delhi. Available NFPE CHQ Office Bearers and General Secretaries participated in the meeting. Com. M. Krishnan, Ex-Secretary General, NFPE also attended. The following decisions were taken in Federal Secretariat:

            1.         Decisions of Postal JCA were endorsed.

            2.         The quota of participation in Parliament March to be held on 4th            December 2014 was allotted as under:

                        P-3                              -          4000              
                        P-IV                             -           4000
                        R-III                              -           1500              
                        R-4                              -            700
                        Admn.                         -             200              
                        Postal Account          -             300
                        SBCO                         -             100              
                        GDS (NFPE)             -          5000

            All General Secretaries are requested to allot the quota to each Circle and ensure participation as per quota allotted.

            Accommodation to the participants will be arranged by the respective unions.


            All General Secretaries are requested to issue separate circular and send to Circle and Branch Unions directing them to participate in Parliament March as per quota allotted to them and it should be given wide publicity to make the Parliament March a grand success.

Please instruct all Circle/Divisional/Branch Secretaries to book the travel tickets of participants well in advance i.e.; from 3rd October onwards.


Yours Comradely,


(R. N. Parashar)
Secretary General

MARCH TO PARLIAMENT ON 4TH DECEMBER 2014 FOR JCA DEMANDS... PLEASE BOOK TICKETS IN ADVANCE !

NFPE - FNPO
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
1st Floor, North Avenue Post office Building, New Delhi – 110001
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
T-24, Atul Grove Road. New Delhi – 110001

No. JCA/AGTN/2014                                                                                              Dated – 26.09.2014


POSTAL JCA DECIDES TO INTENSIFY THE STRUGGLE FURTHER
20000 Postal & RMS Employees Including Gramin Dak Sevaks will March Towards Parliament on 04.12.2014

A meeting of the Postal Joint Council of Action (PJCA) was held at New Delhi on 25.09.2014 under the Presidentship of Shri D. Theagarajan, Secretary General, FNPO. General Secretaries and Other leaders of all affiliated unions of NFPE & FNPO attended the meeting. Com. M. Krishnan, Ex-Secretary General, NFPE was also present. Com. R. N. Parashar, Secretary General, NFPE placed the review report regarding the implementation of the phased programmes of action of JCA conducted so far. After detailed delebrations the following decisions are taken.

1. Secretary, Department of Posts, has informed that it will furnish the item-wise reply to the demands raised in the charter of demands to the PJCA shortly. After receipt of reply from the Department, the JCA will meet again and future course of action will be decided.

2. It was decided to organize as massive Parliament march on 4th December 2014 (04.12.2014 Thursday) demanding immediate settlement of Charter of demands. More than 20000 Postal & RMS employees including Gramin Dak Sevaks will be mobilized in the March to Parliament (Date changed from 10.12.2014 to 04.12.2014 as the Central Trade Unions are organizing Parliament March on 05.12.2014).

3. It is further decided that NFPE will mobilize 15000 employees and FNPO will mobilize 5000 in the Parliament March.

4. It is decided to invite all Central Trade Union leaders to address the Parliament march on 04.12.2014.

DELHI CHALO

MAKE THE PARLIAMENT MARCH A HISTORIC SUCCESS
START MOBILIZATION NOW ONWARDS

Dear friends and comrades,

NFPE & FNPO calls upon all Circle/Divisional/Branch Unions to start intensive campaign and mobilization at all levels to make the Parliament March a historic success. Let us prepare for an indefinite strike if Government refuses to settle our legitimate demands.



           D. Theagarajan                                                            R. N. Parashar                                    
          Secretary General                                                       Secretary General