Saturday, September 4, 2010

SERVICE DISCHARGE BENEFIT SCHEME FOR GDS

ஜி டி எஸ் ஊழியருக்கான புதிய பென்ஷன் திட்டம் ...நமது 13 .7 .10  STRIKE வெற்றி.  ௦ ௦
1 பழைய ஊழியர் ஏற்கனவே உள்ள சிவேரன்ஸ்   திட்டம் அல்லது      புதிய பென்ஷன் திட்டம் - இரண்டில் ஒன்றில் சேரலாம்.


2 . 1 .1 .2011 முதல்   பணியில் சேரும் ஊழியருக்கு இது கட்டாயமாக
      அமல் படுத்தப்படும் .


3.   ஊழியர் தரப்பில் எந்த பிடித்தமும் கிடையாது . இலாக்கா தரப்பில்       இருந்து ரூ .200      மாதா மாதம் போடப்படும்.


4 . ஒரு வருட சேவை முடிந்திருந்தாலே இதில் சேரலாம்.


5 . 1 .1 .2011 அன்று 3  வருடத்திற்குள் ஓய்வு பெறும்    பணிக்காலம் உள்ளவர்கள் இதில் சேர  முடியாது.


6 .   ஏற்கனவே பணியில்உள்ளவர்கள் இதில் சேர்ந்தால்  அவர்களுக்கு சேரும்     தேதி வரை உரிய சிவேரன்ஸ் தொகை , வருடத்திற்கு ரூ. 1500 
 வீதம்  இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்படும்.


7 .   பணியில் உள்ள ஊழியர் பதவி உயர்வு பெற்று இலாக்கா ஊழியர்     ஆனால் , அவர்களது  சிவியரன்ஸ்   அமௌன்ட் இல்   சேர்ந்துள்ள தொகை ,
    இலாக்கா  ஊழியருக்கான பென்ஷன் திட்டத்தில்  ஊழியர் கணக்கில் சேர்க்கப்படும் .


8 . பணி ஓய்வு பெறும் பொது  ஊழியர் கணக்கில் உள்ள தொகையில் 60 % ஊழியர் எடுத்துக்கொள்ளலாம் . மீதமுள்ள 40௦%  இன்சூரன்ஸ் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


9 . புதிய பென்ஷன் திட்டத்தில் சேருவதர்க்கான விண்ணப்பங்கள்
     15 .9 .10  தேதிக்குள்    அளிக்க வேண்டும்.


10 . அப்படி அளிக்க  வில்லை   என்றால் அந்த ஊழியர் பழைய சிவேரன்ஸ் திட்டத்தில்     உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும்.


11 .  ஒரு முறை அளிக்கப்பட ஏற்பு மனு  மறு முறை மாற்றப்படமாட்டது.


12 . ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ  டிஸ்மிஸ்  செய்யப்பட்டாலோ  அவர்களுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது.


   வாழ்த்துக்களுடன் .....ஜெ . ராமமூர்த்தி   மாநில செயலர்