Thursday, April 26, 2012

ORDERS ISSUED BY DTE TO FILL UP ALL VACANT C.O./M.O./HPMAN/STG PMAN POSTS

அன்புத் தோழர்களே  வணக்கம் !

நிரப்பப் படாமல் உள்ள அனைத்து HEAD POSTMAN/ SORTING POSTMAN/ MAIL OVERSEER/ CASH OVERSEER  பதவிகளையும் உடன் நிரப்பிட வேண்டும் என்று 
நமது துறை முதல்வர்  உத்திரவிட்டுள்ளார் .  இதன் மூலம்  பல கோட்டங்களில்  நிரப்பப் படாமல் உள்ள தபால் காரர்  பதவிகள் அனைத்தும் RESULTANT ஆக நிரப்பப் பட  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  எதிர் வரும்  தபால்காரர் தேர்வில்GDS  ஊழியர்கள் தேர்வு பெற  நிறைய  காலியிடங்கள் கிடைக்கும் .DG  உத்திரவினைப் பார்க்க  கீழே ' கிளிக்' செய்யவும் .
  


https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeM2dad2V1dlJGcTA

Wednesday, April 25, 2012

CONFIRMATION EXAM SCRAPPED- CLARIFICATORY ORDERS FROM DTE

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !

கடந்த பிப்ரவரி மாதம் P.A. RECTT RULES  மாற்றப் பட்டு  அதில்  CONFIRMATION EXAMINATION  நீக்கப் பட்ட விபரத்தை உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.

ஆனால்  TAMIL NADU CIRCLE   உள்ளிட்ட சில CIRCLE  களில்  CONFIRMATION
EXAM  நீக்கப் படவில்லை என்றும்,  PROBATIONARY PERIOD  முடிந்தபிறகு
DPC மூலம்  CONFIRMATION  அளிக்க வேண்டும்  என்பதான உத்திரவே 
இது    என்றும்    கூடவே    CONFIRMATION EXAM ம்  எழுதிட வேண்டும்
என்றும்   புதிய விளக்கம் அளித்தார்கள்.  

எனவே இந்த பிரச்சினையை நமது அகில இந்திய பொதுச் செயலருக்கு நமது மாநிலச் சங்கத்தின் மூலம் எடுத்திருந்தோம். அவரும் 
இது குறித்து DG  அவர்களுக்கு கடிதம் எழுதி , அதன் நகல் BHARATHIYA POST 
பத்திரிகையிலும்  பிரசுரமாகியுள்ளது.  

தற்போது DG  அலுவலகத்தில் இருந்து இதற்கான விளக்க ஆணை
அளிக்கப் பட்டுள்ளது .  இதன் மூலம் CONFIRMATION EXAM  நீக்கப் பட்டது
உறுதி செய்யப் பட்டுள்ளது.

DG  அலுவலக விளக்க ஆணையைப் பார்க்க கீழே ' க்ளிக்' செய்யவும்.

BI-MONTHLY MEETING WITH THE PMG , CR

மத்திய மண்டல கோட்ட/கிளைச் செயலர்களுக்கு  இனிய வணக்கம் !
கீழே இந்த இருமாதப் பேட்டிக்கான பிரச்சினைகள் அளிக்கப்பட விபரம்
கொடுத்துள்ளோம்.

மேலும் கடந்த 17.02.2012  அன்று நடைபெற்ற இருமாதங்களுக்கு ஒரு
முறையான பேட்டிக்கு  அளிக்கப்பட பிரச்சினைகளின் விபரமும்
உங்கள் நினைவுக்காக கீழே அளித்துள்ளோம்.

ஏற்கனவே கடந்த BMM  முடிந்தவுடன் அந்த MINUTES  நகல் உங்களுக்கு
XEROX  எடுத்து அனுப்பியுள்ளோம்.  அதில்  பழைய SUBJECTS மற்றும் புது 
SUBJECTS  களுக்கு அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுத்திட
அனுப்பப் பட்டுள்ளதாக பதில் PMG அவர்களால் அளிக்கப் பட்டுள்ளதை 
நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். 

ஆனால் இதுவரை , அதில் எந்த எந்தபிரச்சினைகள் தீர்க்கப் பட்டுள்ளன ?
எந்த எந்த பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை ?  என்பது குறித்து எவரிடமிருந்தும் இது நாள் வரை பதில் வரவில்லை. 

 எனவே  உடன் இது குறித்து மாநிலச் சங்கத்திற்கு தாங்கள்  E-MAIL அனுப்பினால் , தீராத பிரச்சினைகள் குறித்து மீண்டும் PMG  அவர்களுடன் பேசிட உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  பதில் ஏதும் இல்லை எனில்  பிரச்சினை தீர்ந்ததாக எடுத்துக் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம் . உங்கள் பதிலை எதிர் பார்க்கிறோம்.

நன்றி !

No.P3/BMM                                                                                                         dt. 21.04.2012

To
The Postmaster General,                                                                                   THRO     E-MAIL.
Central Region,
Trichirappalli 620 001.

Sir,
                      Sub: Bi-monthly meeting with the PMG, CR  notified to be held  on 27.04.2012.
                                                                                                                ….
The  undermentioned items are proposed to be taken up for discussions during the bi-monthly meeting with the PMG, CR  scheduled to be held on 27.04.2012. The same may kindly be entertained..

1.       Request for restoration of the various justified GDS SV posts , which were  orally  redeployed  by the  subordinate authorities against the orders of the Directorate,  since the  resultant stamp vending work now attached to MPCM counters is added  with the work load heavily at the counters and  hampering the public services badly.

2.       Request for recall of the  officials those who are on deputation from Divisions with RPLI/ PLI sections at R.O.,  P&T Dispensary and R.O. as assured in the RJCM meeting minutes by the CPMG, TN,  to  meet out  the shortage of  staff at operative ends otherwise outsourced agents may  be permitted  to compensate  the  work, with equal number in lieu thereof.

3.       Request for retention of the post of Accountant IV at Trichy HPO  since voluminous work attached with that branch such as Railways/Postal Family pension conversions, settlement of LTA cases, transfer of pension cases both inward/outward, Revision of pension/DA to BSNL, processing of  pre-2006 pension cases,  processing of CDA pension etc. etc. are  held up  resulting in undue delay and  inviting  enormous complaints.

The following office bearers will be attending the meeting. Necessary arrangements may kindly be made for granting special CL and  relief to them.

1.       Sri. J. Ramamurthy, Circle Secretary & PA, Tiruvallikeni SO, Chenna 600 005.
2.       Sri. A. Manoharan, Regional Secretary & PA, Vridhachalam HO 606 001.

With regards,
SD/-……..
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.
............................................................................................

No.P3/BMM                                                                                                                  dt.13.02.2012

To
The Postmaster General,
Central Region,
Trichirappalli 620001.

Sir,         
                       Sub: Bi-monthly meeting with the PMG, CR notified to be held on 17.02.2012-Reg.
                                                                                                ---
The following  items  are proposed to be taken up for discussions  during the bi-monthly meeting  to be held on 17.02.2012. The same may kindly be entertained.

1.       Re-opening of  item  No.2/2011 . The reply given on 17.10.2011 meeting,  was not implemented.  Even alternate arrangements were not made to  meet the various duties of unprovided work hours, as mentioned  therein,  for which  staff have been drawn from sanctioned establishments, besides  to  manage  heavy shortages.  Staff  met with untold sufferings due to engaging  in various un-normed  business  activities, extended business hours, shortage,  power cut, inadequate infrastructure  etc. etc.

2.       Re-opening of  item No.4/2011, since  the matter is already  taken up in the RJCM meeting on 24.08.2011 and  the CPMG, TN replied that instructions were given  to all Region to implement the  orders of Directorate.

New items:-
1.       Non implementation of  orders of Directorate /C.O. by the  Divisional heads on various issues years- to-gether  For  eg.
a)      Non drawal of enhanced rate of daily allowance (food charges)
 in respect of TA claims of officials for the period from 01-01-2012 to
 31-07-2012.  Food charges to be enhanced by 25% on grant of dearness
  allowance above 50%  with  effect t from  01-01-2012.

b)      Non grant of  MACP and other benefits to the RRR candidates appointed after  the
Judgement of  Honble Supreme Court of India.
c)       Non payment of  Honoraria for  drawal of  arrears to GDS  on Natarajamurthy Committee recommendations.
d)      Non payment of  Honoraria for drawal of pension arrears on pay commission recommendations
e)      Stepping up of the pay of the promotee seniors with direct recruited juniors appointed  on or after 1.1.2006 as per  Dte. Orders dt. 05.01.2011.
f)       Non revision of FSC   though ordered on 02.12.2010.
g)      Non  supply of APAR  to the  officials  in  the prescribed  period  to prefer any appeal  as per  the  orders  dt. 14.5.2009 &  13.04.2010

                  h)     Non grant of  advance of TA or non allowing of  TA to the  newly recruited 
P.A.s  in connection with undergoing  induction training after the date of  their appointment.

2.       Non functioning  of  UPS ,  printers, batteries in various  offices throughout the
Region  and non  supply of  Laser printers to take  print outs,  of  large volume of
EMOs.
UPS  and printers almost in 80% offices of Central  Region are not in working  condition.  Despite reminders   AMC  for UPS and Printers are not attending faults. Because of UPS  failure customers could not attend  the office and transactions not done during the business hours. This is mainly because of 8 hours TNEB power cut on daily basis.  Staff  in total  computerized office are tortured to give data and other information through email.  In the mean time more and more offices are identified as EMO centre and they are authorized and ordered to take print of  EMOs without providing Laser printers. It is much difficult and time consuming to take print out  of EMO in ordinary dot matrix printers.  Eg.  Vedaraniyam, various Pos in  Mayiladuturai, Trichy, Thanjavur Dns.

3.       Request  for arranging  bank drawings in all towns, where  the branches of  any Bank  is available, since   the  funding  to   S.O.s   is highly at  risk due to  heavy payments  
to  the tune  of  lakhs of rupees on IMT,OAP MOs etc.  eg. In Mayiladuturai  , Vriddhachalam, cuddalore etc.

ANSWER KEY FOR LGO EXAMINATION FOR P.A./S.A. HELD ON 16.10.2011

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

கடந்த 16.10.2012 அன்று நடந்த LGO  TO P.A./S.A. 
தேர்வில், தேர்வு நடத்திய CMC , NOIDA  நிறுவனத்தால் 
அளிக்கப்பட 'விடைப்  பட்டியல்'  (ANSWER KEYS) கீழே
அளித்துள்ளோம்.  தேர்வு எழுதியவர்களுக்கு தங்கள்
மதிப்பெண்ணில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இதனை
சரிபார்த்துக் கொள்ளலாம் !. 

 'ANSWER KEY'  வெளியிட  வேண்டி
நம் மாநிலச் சங்கம் கோரியபடி , 
வெளியிட்ட நமது CPMG  அவர்களுக்கு நம் நன்றி !.

மாநில அஞ்சல் நிர்வாகத்தின்
'OPENNESS - TRANSPARENCY'  நிலைபாட்டிற்கு நம்
அஞ்சல் மூன்றின் பாராட்டுக்கள் !.

விடைப் பட்டியல் பெறுவதற்கு கீழே 'கிளிக்'  செய்யவும் .

Tuesday, April 24, 2012

CIRCLE UNION LETTER TO PMG, CCR ON CONTRIBUTORY NEGLIGENCE RECOVERY AT CENTRAL DIVISION

சென்னை மத்திய கோட்டத்தில் தன்னிச்சையாக நிறுத்தப்பட்ட DA ARREARS  மற்றும் FEB.2006 TO JUNE 2006  க்கு வழங்க வேண்டிய Increment நிலுவைத் தொகை ஆகியவற்றை உடன் வழங்கக் கோரி PMG, CCR  அவர்களுக்கு மாநிலச் சங்கம் அனுப்பிய FAX  மற்றும்   E-MAIL  கடித நகல்.


No.P3/2-11/Chennai City Central                                                                              dt. 24.04.2012
 
To                                                                                                                     THRO  E -MAIL /FAX
Shir. M.S. Ramanujan, IPS,
 Postmaster General,
Chennai  City Region,
Chennai 600 002.

Sir,
                       Sub: Stoppage of  DA arrears and  arrears on  drawal of increment between between
                               Feb. 2006 to June 2006 at Chennai City Central Division – Request to release the
                               Same- Reg.
                                                                               ……….

It is reported from the staff working at Chennai City Central  Division that the  DA arrears and  arrears drawn on  the increment  between Feb. 2006 to June 2006  were orally ordered to be  stopped  to many  officials abruptly, without effecting payment .

While enquiring with the authorities concerned, it is replied that  the same  was ordered on the  plea that the stoppage  is due to contributory  negligence factor, to those officials worked at Royapettah PO, where  multiple frauds  occurred to the tune of  lakhs  in  SB sector.

In this connection,  our Circle Union is to bring forth  the  following to your kind notice and for taking appropriate action as deem fit.

i)                    No official  is  issued with any show cause notice  , so as to allow them to explain  their part in any such fraud  as a subsidiary offender.

ii)                  No official is allowed  to go through the records pertaining to  which  any of the lapses involved in their part , as a subsidiary offender.

iii)                No official is given with any reasonable opportunity to explain his cause in this connection.

iv)                No action is taken against the principle offender, so as to recover the  huge loss to the  public  as well as to the Department ,  through any Revenue authorities , and to confiscate  his  properties in lieu thereof.

v)                  No sub ordinate officers/inspecting authorities,  are stopped with payment of such arrears, on whose part there are many lapses  in this case , leading with  committing of  such a huge frauds  with a  larger time frame and only the clerical staff are  hacked with, as a scapegoat.

vi)                As per Rule 106 of P&T Man. Vol. III , any recovery can be  imposed only when it is established, and in  this case it was not done.

vii)              As per  Rule 107 of P&T Man.Vol. III ,  the disc. Authority should  correctly assess in a realistic manner the contributory negligence, and while determining any  omission or lapses on the  loss considered and the extenuating circumstances in which  the duties were performed by the official, shall be given due weight,  but  nothing has been done in this case.

viii)            The  procedures as laid down  in  P.O. Savings Bank Manual Volume  I , under Rule 9 (1), 31 (2) (iii), 48 (ii), 92 (2) and 120 (6) were not followed in this case, and  the action is only arbitrary exercise of powers , without  following any  rules  and only hasty.

Hence,  our Circle Union  is bringing this matter to the kind  personal notice of  the PMG, CCR and requests  his personal and immediate intervention, so as  to  release the arrears amount which were  now withheld  and  payment effected forthwith.


With regards,

Sd/-
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

Monday, April 23, 2012

WEB SITE LAUNCHED FOR TN GDS UNION

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

புதிதாய் துவங்கிய  நமது  சகோதரச் சங்கமான AIPEU GDS(NFPE)  தமிழ்
மாநிலச் சங்கத்திற்கு தனியே ஒரு வலைத் தளம் துவங்கப் பட்டுள்ளது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம் அஞ்சல் மூன்று சங்கம் போலவே , அனைத்து விதமான
செய்திகளையும் தாங்கி வரும் வலைத் தளமாக அது
இருக்கும் .

நீங்கள் தினமும் இந்த வலைத் தளத்தை பார்த்து, படித்து,
GDS  ஊழியர்களையும் படிக்கச் செய்து , அவர்களையும்
அறிவு பூர்வமாக செயல்பட வைத்து , நம் NFPE  GDS  சங்கத்தை
மிகவும் வலுவான, ஆற்றல் மிக்க,  அறிவுபூர்வமான தோழர்களின்
அமைப்பாக மாற்ற வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

வலைத் தள முகவரி :-

                                               www.aipeugdstn.blogspot.com

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் -GDS (NFPE) வளர
நம் அஞ்சல் மூன்று சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அறிவைத் தேடி.......... பகுதி - 6

அறிவைத் தேடுவோம் !                                   அடுத்த தலைமுறை வளர்ப்போம் !

                          
அறிவைத் தேடி .......... பகுதி - 6
1.      An official is deputed to one office and he is drawing Daily Allowance for 180 days. Thereafter he has not been paid with any TA/DA. Is it correct?
Ø  As per SR 116, the transfer grant is admissible only if change of residence is involved. After 180 days, he can claim T.A bill by changing his residence to the newly posted station. But daily allowance as if temporary transfer will be entitled only up to 180 days.

2.      An official, after completing full tenure is transferred to another station at request. Whether he is entitled to claim TA/DA for his transfer?
Ø  The Department vide its letter dt. 18.12.95 clarified that officials transferred after completion of full tenure to the place of their choice will be entitled for TA and transit. This is effective from 18.12.95.

3.      If there is no change of residence, whether TA is entitled?
Ø  No. only one day joining time will be allowed.

4.      Whether an official who completed tenure and posted to another station as per his choice is entitled for joining time?
Ø  In fact no joining time is admissible for transfers at own request. But in cases of transfers at request after completion of full tenures, the joining time is entitled.
(DG (P) 17-3/94 – FAP dt. 18.12.95)

5.      Whether the officials retired can claim TA bills their settlement after retirement?
Ø  TA/DA is admissible to all regular employees having not less than 10 years service on their retirement and they can claim all entitlement as on transfer including composite transfer grant, and carriage of personal effects.
They can claim the facility to them and their family from the last station of duty to either declared home town or to any other place where they wish to settle. This should be availed within one year from the date of retirement.
                அன்புடன் உங்களுக்காக ...................J.R. , மாநிலச் செயலர்.. 
                                                                                     தினம் தொடர்வோம் ....................

(உங்கள் விமரிசனங்களை  நீங்கள்  கீழே அளிக்கலாம் .................
                                                                                அடுத்த தோழருக்கும்   இதனைத் தெரிவிக்கலாம் .....) 

AIPEU GDS NFPE REGIONAL MEET AT CENTRAL REGION

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE)  இன் மத்திய மண்டல கலந்தாய்வுக் கூட்டம் 22.04.2012 அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் பாபநாசம்  தங்கமுத்து மாரியம்மன் திருமண  மண்டபத்தில் AIPEU GDS NFPE
மாநிலச் சங்க பொறுப்பாளர்களால் கூட்டப்பட்டது.

கூட்டத்திற்கு தோழர். பட்டுக்கோட்டை இளங்கோவன் தலைமையேற்க ,
புதுகை கோட்டச் செயலர்  தோழர். ஜானகிராமன் வரவேற்புரையாற்றினார்.

AIPEU GDS NFPE  சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச் செயலரும் தமிழ் மாநில சங்கப் பொறுப்பாளருமான தோழர். R.  தனராஜ் அவர்கள்
எழுச்சியுடன் தொடக்க உரையாற்றினார்.

அவர் தனது உரையில் மகாதேவையா  தலைமையிலான அகில இந்திய சங்கத்தின் தன்னிச்சையான போக்கு குறித்தும் ,  NFPE அமைப்பில் இருந்து விலகி ,  அகில இந்திய  மட்டத்தில் எந்த  ஒருஊழியர் பிரச்சினையையும்  தீர்க்க இயலாமல் அவர் உள்ள சூழ்   நிலையையும் , அப்பாவி GDS  ஊழியர் பணம்கோடிக்கணக்கில் கொள்ளை போனதையும் குறித்து 
விளக்கமாக உரையாற்றினார். மேலும் மாநிலச் சங்கம் ஒய்வு பெற்ற 
ஒரு சிலரது கட்டுப்பாட்டில் இயங்கும் அடிமைக் கூடமாக  உள்ளதையும்  சுட்டிக் காட்டினார்.  

தொடர்ந்து அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் மத்திய மண்டலச் செயலர் தோழர். A.  மனோகரன் அவர்கள் தற்போதுள்ள  GDS  மாநிலச்
சங்கத்தின் செயல் படாத தன்மையையும் ,  GDS ஊழியர்கள்  தாங்கொணாத
பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதையும் சுட்டிக் காட்டினார்.

ஸ்ரீரங்கம், திருச்சி ,பாபநாசம் , மன்னார்குடி, திருத்துறைபூண்டி,
கும்பகோணம் , புதுக் கோட்டை, பட்டுக்கோட்டை ,மயிலாடுதுறை,
சீர்காழி , நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ,விருத்தாசலம் உள்ளிட்ட 
கோட்ட/ கிளைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட GDS சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தது , கலந்தாய்வுக்
கூட்டத்தை உற்சாகப் படுத்தியது.

திருச்சி கோட்டச் செயலர் தோழர். பன்னீர்செல்வம், திருத்துறை பூண்டி
முன்னாள் கோட்டச் செயலர் தோழர். துரையப்பன் ஆகியோர் உரை
GDS  ஊழியர்களது சிந்தனையைத் தூண்டும் விதம் சிறப்பாக அமைந்தது.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிட அஞ்சல் மூன்றின்  மாநிலச் செயலர் அழைக்கப் பட்டார்.  அவர் தனது உரையில்,  UPTW  காலம் முதல்,
1954 இல் NFPTE  சம்மேளனம் துவங்கியது தொடங்கி, 1964 இல் GDS ஊழியர் சங்கம் குறித்து அன்றைய துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம் அவர்களுடன்  ஏற்பட்ட ஒப்பந்தம், 1993  மத்திய அரசு ஊழியருக்கான
புதிய சங்க அங்கீகார விதி,  1995 GDS  ஊழியருக்கான சங்க அங்கீகார விதி
2003 சம்மேளன குழுக் கூட்டத்தின் முடிவு , 2007  சம்மேளன அங்கீகாரம்
கோரிய  நிலை, கல்கத்தா சம்மேளன கௌன்சில் ,   DEC.2008 GDS சங்கத்தின் தன்னிச்சையான வேலை நிறுத்தம், நடராஜமுர்த்தி கமிட்டியில் அதன்
நிலைப்பாடு , 2011 GDS CONDUCT AND ENGAGEMENT RULES , மற்றும் அமராவதி அகில இந்திய மாநாடு , AIPEU GDS NFPE  துவங்கியதன் அவசியம் என்பன குறித்து  விளக்கமாக நீண்ட உரையாற்றினார். மறைக்கப் பட்ட வரலாற்று
பகுதிகளை, விளக்கமாக GDS  ஊழியர் புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.

கூட்ட  முடிவில் வந்திருந்த  அனைத்து GDS  ஊழியர்களும் உற்சாகமாக
NFPE இன்  அமைப்பிற்குள் GDS  சங்கம் அமைப்பதே சிறந்த முடிவு  என்றும்
அதனை தம் பகுதியில் உடன் செயல் படுத்துகிறோம் என்றும்
உறுதியேற்றனர்.

நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அந்தந்த பகுதியில் இருக்கும் P3, P4 , GDS   தோழர்கள் உடன் இணைந்து செயலாற்றி  நம்
NFPE GDS சங்கத்தை வலுவுடன்  அமைத்திட வேண்டுகிறோம்.

NFPE  நமது இயக்கம்.                                                                          NFPE  நமது சக்தி. 
NFPE நமது வளர்ச்சி.                                                                       NFPE  நமது வெற்றி.
                                                          NFPE வெல்கவே  !

PAPANASAM BRANCH CONFERENCE

நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் பாபநாசம் கிளையின் 16 ஆவது மாநாடு
கடந்த 22.04.2012  ஞாயிறு அன்று பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. காலை 10.30  மணிக்கு
கொடியேற்று நிகழ்ச்சியுடன் துவங்கிய மாநாடு , கிளைத் தலைவர் தோழர். V.  ஸ்ரீராம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி நடைபெற்று கீழ்க்
கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கிளைத் தலைவர் : தோழர்.  V. ஸ்ரீராம்
கிளைச் செயலர்     : தோழர். J.  குணசீலன்
நிதிச் செயலர்          : தோழர். B. குமார்

மாநாட்டு நிகழ்வுகளில் மாநிலச் செயலர் தோழர். J.R. கலந்து
கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 மேலும் குடந்தை கோட்டச் செயலர் தோழர். பெருமாள், மன்னை கிளைச் செயலரும் தஞ்சை கோட்ட செயலரும் ஆகிய தோழர். காந்தி, மன்னை கிளைத் தலைவர் தோழர். சீலன் ராஜ், தஞ்சை கோட்ட முன்னாள் செயலர் தோழர். T. குமரேசன், தஞ்சை கோட்ட சங்க முன்னோடி  தோழர்.R.  செல்வ குமார், பாபநாசம் முன்னாள் கிளைத் தலைவர் தோழர். சௌந்தரராஜன் , மற்றும்  P4, GDS   நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள்.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த
வாழ்த்துக்கள்.

RETIREMENT FELICITATION TO COM.NAGAI S. GOVINDARASU

நாகை கோட்ட முன்னாள் செயலர் தோழர்.S. கோவிந்தராசு  அவர்கள் எதிர்வரும் 30.04.2012  அன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார்.  

அவரது அரசுப் பணி நிறைவு பாராட்டு விழா நாகை   கோட்ட அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, மற்றும் AIPEU GDS NFPE சார்பாக எதிர்வரும்

13.05.2012  ஞாயிறு  அன்று  காலை நாகை தலைமை அஞ்சலக வளாகத்தில்

நடைபெற உள்ளதாக கோட்ட சங்கங்களின் சார்பாக கோட்டச் செயலர்  தோழர்மீனாட்சி சுந்தரம்  தற்போது தெரிவித்துள்ளார். ஏற்கனவே 01.05.2012  அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  இது தற்போது மாற்றப் பட்டுள்ளது.

அரசுப் பணி நிறைவு பெறும் தோழருக்கு மாநிலச் சங்கத்தின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள்

தோழர்.S. கோவிந்தராசு அவர்களின்   அலை பேசி எண் 94865 39936.