இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி , சட்டமேதை
பாரத ரத்னா
பாபா சாகேப் டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களின்
பிறந்த தினம் இன்று.
அவர்தம் பிறந்த நாள் 14.04.1891.
அவர் சமூகம், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் , மனிதம் போன்ற பல்வேறு துறைகளில் தொடர்ந்த M.A. பட்டங்கள் பெற்று , பல்வேறு துறைகளில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து தொடர்ந்த 'டாக்டர்' பட்டங்கள்
பெற்ற பேரறிஞர் . லண்டன் சென்று சட்டம் பயின்று சட்டத்துறையில் மிக உயரிய பட்டமான 'BAR AT LAW' பட்டமும் பெற்றவர்.
அவர் ஒரு சிறந்த பத்திரிகையாளர், மிகச் சிறந்த சமூகப் போராளி
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான தொடர் போராட்டங்களில் தன்
பட்டம், பதவி, சொத்து அனைத்தையும் துறந்த தியாகி.
அவர்தம் பிறந்த நாளில் அவரது வரலாற்றை , தியாகத்தை நினைவு கொள்கிறது தமிழக அஞ்சல் மூன்று சங்கம்.