Thursday, March 3, 2011

 அஞ்சல் மூன்று தமிழ் மாநில மாநாடு - 09 .03 .2011 -கவரப்பேட்டை

அன்பிற்கினிய அஞ்சல் மூன்று கோட்ட , கிளைச் செயலர்களே! சார்பாளர்களே!
உங்களுக்கு மாநிலச் சங்கத்தின் அன்பான வணக்கங்கள் !

கடந்த 9 .2 . மற்றும் 10 .2 .2009 தேதிகளில்  நீதிமன்றம் மற்றும் இலாக்கா  ஒப்புதலுடன் 
அகில இந்திய சங்கத்தால்  நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழு  வேலூரில் நமது 
மாநில மாநாட்டை நடத்தியது .  அந்த மாநாடு நடத்திட நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்ட 
வாதி  , பின்னர் மாநாட்டினை எதிர்த்து  வேறு நபர்களை வைத்து நீதிமன்றங்களில்
பல்வேறு வழக்குகளை தொடுத்து மாநிலச் சங்கத்தினை முடக்கிட எடுத்த
நிலைபாட்டை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற வழக்குகளை சந்தித்தபோதும் , நமது
மாநிலச் சங்கம் தன் நிலை தவறாது ஊழியர் பணியினை விருப்பு வெறுப்பு இன்றி
ஆற்றி வருவதற்கு இந்த வலைத்  தளமே சாட்சியாகும்.

வரையறுக்கப்பட்ட செயல்பாட்டிற்குள் நீதிமன்றத் தளைகளால் மாநிலச் சங்கம் 
வழி நிறுத்தப்பட்ட போதும் ,  பரவலான நமது செயல்பாட்டினால் நாம் அனைவருக்கும் 
பொதுவாக,  ஊழியர் நலன் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வந்ததற்கும் 
நமது இந்த வலைத் தளமே சாட்சியாகும். 

 கடந்த ஆறு மாதங்களில் மட்டுமே 40000  க்கும் மேற்பட்ட VISITOR  களைப்
பதிவு செய்திருப்பதன் மூலம் நமது மாநிலச் சங்கம்,  சங்க  வேறுபாடின்றிக்கூட சரியான திசை நோக்கி அழிவு சக்தியாக இல்லாமல் 
ஆக்க சக்தியாக பணியாற்றி வருவதற்கு இதுவும் சாட்சியாகும். 

வேலூருக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் , சங்க விதிப்படியும்
தேர்தல் விதிமுறைப்படியும் அடுத்த மாநாடு நடத்தவேண்டி இருப்பதால் , புனே நகரில் 
கூடிய நமது உச்ச மட்ட அமைப்பான அகில இந்திய மாநாடு . தமிழகத்திற்கு புதிய 
மாநிலச் சங்க தேர்தலை அகில இந்தியச் சங்கமே நேரிடையாக  நடத்த வேண்டி 
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அங்கு கலந்து கொண்ட 22  மாநிலங்களில்.இருந்து  வந்திருந்த ஒரு சார்பாளர் கூட இந்தத் தீர்மானத்தை எதிர்க்க வில்லை. 
ஏனெனில் , ஊழியர் நலன் காக்கப்பட,  நிச்சயம் மாநிலச் சங்கம் தடை
இன்றி நடைபெறவேண்டியதன் அவசியத்தினை  அனைவரும்
உணர்ந்துள்ளனர் என்பதே இதன் பொருள் ஆகும்.

ஆனால் இன்னமும் கூட சில சங்க விரோதிகள் , தனி நபர் நலன் கருதி , தவறான 
வழியைத் தேர்ந்தெடுத்து அந்த திசை நோக்கி செல்கின்றனர் .  இந்தத் தவறுகளை ,
பொது நலனுக்கெதிரான துரோகங்களை,  இனியும் நீங்கள் அனுமதித் திடக்  கூடாது ,
ஆதரித்திடக்கூடாது  என்று  அன்பாக வேண்டுகிறோம் . 

கோட்ட / கிளைச் செயலர்களே! சார்பாளர்களே !

சங்கத்தின் மீது பற்று கொண்டோரே ! , ஊழியர் நலனில் பற்றுகொண்டோரே ! ,
ஜன நாயகத்தின் மீது பற்று கொண்டோரே ! 

 நிச்சயம் இந்த மாநில மாநாடு
நடைபெறும்  களம் நோக்கி நீங்கள் விரைந்து வருதல் வேண்டுகிறோம் !

வெல்வது யாராயினும்  வீழ்வது  சங்கமாக இருக்கக் கூடாது ! 
அந்த திசை நோக்கி சிந்தியுங்கள் !

நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் வீழ்ந்து கிடப்பதா ?
ஜன நாயக முறைப்படி தேர்தலை சந்திப்பதா ?

ஒட்டுமொத்த ஊழியரின் உச்ச மட்ட தீர்மானமான , அகில இந்திய மாநாட்டின்
தீர்மானத்தினை வழி ஏற்று  மாநிலச் சங்கத்தினை அமைப்பதா ?
குறுக்கு வழியில் சங்க சீர்குலைவு வேலைகளை செய்வோரின்
தவறான  திசை காட்டலை ஏற்பதா ?

நீங்கள் உங்கள் கோட்டத்தின் அனைத்து உறுப்பினர்கள்
சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்லவா ?

தனி நபர் மற்றும் ஒய்வு பெற்ற தீவினை வாதிகளின்
பிரதிநிதி அல்லவே ? சங்கம் நம் அனைவரின் சொத்து !
தனி நபர் சொத்து அல்ல ! இதை நாம் நினைவில் கொள்வோம் !

நிச்சயம் இந்த மாநில மாநாட்டில் உங்களின் பங்களிப்பு முழுமையாக 
இருக்க வேண்டுமென  அன்புடன்  வேண்டி  முடிக்கிறோம் !

என்றும் தோழமையுடன் 

....  மாநிலச் சங்கத்திற்காக .....

உங்கள்  தோழன்   J .R .  மாநிலச் செயலர்.