Saturday, October 15, 2011

CLOSURE OF TEYNAMPET WEST P.O. STOPPED

தேனாம்பேட்டை மேற்கு  அஞ்சலகத்தை  மூடும் உத்திரவு நிறுத்தப்பட்டது !

சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை மேற்கு அஞ்சலகம் 
மூடப்படுவதை எதிர்த்து நமது தோழர்கள் ஊழியர் சக்தியை ஒன்று திரட்டி
JCA  அமைத்து  தொடர் போராட்டங்கள் நடத்தி வந்ததை நமது வலைத்தளத்தில் ஏற்கனவே செய்தியாக வெளியிட்டிருந்தோம்.  இதனிடையில் 15.10.2011 அன்று 
அஞ்சலகம் மூடப்படும் என்று உத்திரவு வெளியிடப்பட்டது . இதனை எதிர்த்து 
கடந்த 13.10.2011   முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் JCA சார்பில் 
நடத்தப்பட்டது. இதர பகுதி தொழிற்  சங்கங்களையும்  பொது மக்கள் 
அமைப்புகளையும் இணைத்து போராட்டம் விரிவு படுத்தப்பட்டது. மேலும் 
கடந்த 14.10.2011 அன்று SSP  மற்றும்     PMG, CR  உடன்  பேச்சு வார்த்தை 
நடத்தப்பட்டது .  முடிவாக இரவு 08.00  மணி  அளவில்  அஞ்சலகம் மூடும்
உத்திரவை  நிறுத்தி வைத்து  PMG, CCR அவர்கள் உத்திரவிட்டார். போராடிய 
தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள். களம் அமைத்து 
போராட்ட வடிவம் கொடுத்து  முன்னின்று நடத்திய தொழிற்   சங்க நிர்வாகிகளுக்கும் ,  இதர முன்னோடிகளுக்கும்  மாநிலச் சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றி. தலமட்டப் போராட்டங்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு என்பதற்கு மத்திய சென்னை கோட்டத் தோழர்களின் போராட்டம் ஒரு முன் உதாரணம். 
வாழ்க NFPE !.                                                        வெல்க  தொழிலாளர் ஒற்றுமை!.