'அண்ணன்' என்று பேரன்போடும் 'அஞ்சா நெஞ்சன்' என்று பேருவகை யோடும் அண்ணனைப் பற்றி நாம் நினைவு கொள்ள , ஆம் ! ஓராண்டு முடிந்ததையா ! மாவீரன் இந்த மண்ணுலகை விட்டு சென்ற பின்னே !
அண்ணனின் தம்பி மார் செயங்கொண்டார் பாடிய
'கலிங்கத்துப் பரணி' போல -
பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று"
புலம்பி அழுகின்ற நிலை காணீர் .....
"அண்ணனே நீ வருவாய் என்று காத்திருந்தோம் !
நீ வரமாட்டாய் ... வரவில்லையெனில் உன் இதயத்தை
இரவலாகத் தந்திடு அண்ணா "
என்று அண்ணனுக்கு இரங்கற்பா எழுதிய தம்பி போல கேட்கிறது எம் இதயம் ! அண்ணனே ! எம் இதய மன்னனே ! உன் இதயத்தை தந்திடு எமக்கு ! போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத இதயம் வேண்டும் எமக்கு ! தந்திடு அண்ணா ! எம் இதய மன்னா !
அண்ணனின் மறைவை ஒட்டி கடந்த ஆண்டு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தினால் வெளியிடப்பட்ட " கவிதாஞ்சலி " கீழே காண்க :-