Friday, January 6, 2017

WHAT HAPPENED TO PONGAL HOLIDAY ISSUE ? WILL IT BE SETTLED OR NOT ?-

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.

பொங்கல் பண்டிகைக்கு நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் OPERATIVE 
SIDE  பகுதியில்  பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமான விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. 

பொங்கல் பண்டிகை என்பது  தமிழினம் சார்ந்த , பண்பாடு சார்ந்த, விவசாயிகளின்  வாழ்வாதாரம் சார்ந்த, தமிழகத்திற்கே முதன்மையான பண்டிகையாகும். எனவே இது குறித்து  மாநில அஞ்சல் நிர்வாகத்தின் அலட்சியமான போக்கு,  'JUST LIKE THAT'  மனப்பான்மை   ஊழியர்கள் மத்தியில் எரிச்சலூட்டும் விதமாக, OPERATIVE  பகுதியில் பணி  புரியும் ஊழியர்களின் மீது அலட்சியம் காட்டுவதான  உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆண்டுக்கான விடுமுறைப்பட்டியல்  மத்திய அரசின் DOPT அமைச்சகத்தினால் கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாகவே , அதாவது கடந்த  24.6.2016  அன்றே  வெளியிடப்பட்டது.  அதில் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் 14 விடுமுறைகள்    பொதுவானதாகவும்,     இதர    மூன்று          விடுமுறைகள் 
(மொத்தம் 17)  அந்தந்த மாநிலங்களுக்கு முக்கியமான பண்டிகைகளாக 12 பண்டிகைகள் பட்டியலிடப்பட்டு,  இவற்றில் ஏதேனும் மூன்றை அந்தந்த மாநில தலைமையகங்களில்  உள்ள  CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE என்று சொல்லப்படும்,    மத்திய அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட கமிட்டி கூடி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கமிட்டி கூடி  முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னர்  இசுலாமிய பண்டிகைகள் தவிர வேறு எதிலும் எந்த ஒரு மாற்றமும் செய்திடக் கூடாது என்று  உத்திரவிடப்பட்டுள்ளது.
(இதில் ஊழியர்கள் பிரதிநிதிகள்  இருப்பதாக சிலர் தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர். ஊழியர் நல  அமைப்பு என்று பெயரிடப்பட்டு அதில் ஊழியர் பிரதிநிதிகள்  இல்லாமல் இருப்பது வேடிக்கைதான் )

24.6.2016 இல்  இந்த உத்திரவு வந்த போதிலும் , இந்த கமிட்டி 'ஆசுவாசமாக' நவம்பர் 2016 இல் தான் கூட்டத்திற்கான  அறிவிப்பு செய்தது.  அந்தக் கூட்டத்தில் 

24.2.2017 மகா சிவராத்திரி 
25.8.2017 - விநாயகர் சதுர்த்தி 
28.9.2017 - ADDITIONAL  HOLIDAY FOR  DUSSEHRA 

என்ற மூன்றும் விடுமுறை தினமாக  முடிவு செய்யப்பட்டு 23.11.2016 அன்று அறிவிப்பு  அவர்களால் வெளியிடப்பட்டது. 

ஆனால் 14.1.2017  பொங்கல் பண்டிகை , அன்றைய தினம் இதர மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு, ஏற்கனவே  சனிக்கிழமை விடுமுறை தினம்  என்பதால் ,  இந்த நாள் மற்றைய மூன்று விடுமுறை தினங்களில் ஒன்றாக தீர்மானிக்கப்படவில்லை. சனிக்கிழமை நம்முடைய அதிகார அமைப்புகளுக்கும்  ( ADMINISTRATIVE  OFFICES ) ஏற்கனவே விடுமுறை தினமானதால்  ADDITIONAL  HOLIDAY FOR  DUSSEHRA என்று மூன்றாவது விடுமுறை தீர்மானிக்கப்பட்டது. 

ஏமாந்த பொதி சுமக்கும் கழுதைகளாக அஞ்சல் துறையில் ஞாயிறு கூட ECOMMERCE  DELIVERY க்கு பணிக்கப்படும்  OPERATIVE  பகுதி பெரும்பான்மை ஊழியர்கள் பொங்கலன்றும் பணிக்கு வரட்டுமே என்ற எண்ணம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவே நாம் கருதுகிறோம்.

ஏனெனில், இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம்  தற்போதைய CGEWCC இன்   CHAIRMANஆகிய  CENTRAL EXISE COMMISSIONER அவர்களை அணுகியபோது ,  NOVEMBER மாதத்தில் நடைபெற்ற கமிட்டி  கூட்டத்திற்கு  முன் கூட்டியே அழைப்பு அனுப்பியிருந்தும் அஞ்சல் பகுதியில்  இருந்து உரிய அதிகாரிகள் எவரும் வந்து கலந்து கொள்ளவில்லை. அப்படிக் கலந்துகொண்டு  அவர்கள் பகுதியில் உள்ள OPERATIVE  ஊழியர்  பிரச்சினை குறித்து  சரியாக சொல்லியிருந்தால் நாங்கள்  14.1.2017 சனிக்கிழமையை பொங்கல் விடுமுறையாக அறிவித்திருப்போம் என்ற பதில் அளிக்கப்பட்டது. 

14..1.2017 சனிக் கிழமை ஏற்கனவே   இதர  மத்திய அரசுத் துறை அலுவலகங்களுக்கு  விடுமுறையானதால் ( INCOME TAX, CUSTOMS, CENTRAL EXISE, ACCOUNTANT GENERAL, CPWD,CENTRAL WATER BOARD ETC) அதற்குப்பதில் பட்டியலில் உள்ள வேறு ஒரு நாளை விடுமுறையாக தீர்மானித்ததாக  நமக்குத் தெரிவிக்கப்பட்டது.  ஆக, கோளாறு எங்கே என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும், 23.11.2016இல் இந்த விடுமுறைப் பட்டியல் வந்த பிறகாவது இதில் உள்ள பிரச்சினை கவனிக்கப்பட்டிருக்கலாம் தானே என்று நீங்கள் கேட்பது புரிகிறது .   சரி  ! கவனிக்கப் படவில்லை .  இந்தப் பிரச்சினை குறித்து பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு முன்னரே நம்முடைய சங்கங்களால் மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் கூட இந்தப் பிரச்சினை குறித்து  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் நாம் CPMG  அவர்களிடம் கடிதம் அளித்து நேரிடையாகப் பேசினோம். அப்போதுதான் அவருக்கு  இந்தப் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது.  அதுவரை அவரின்  கவனத்திற்கு  இந்தப் பிரச்சினை  எடுத்துச் செல்லப்படவில்லையென்று  நாம் அறிய வந்தோம், அவரும் உடன் இதன்மீது நடவடிக்கை எடுத்து  பொங்கல் பண்டிகைக்கு  விடுமுறை கட்டாயம் பெற்றுத் தருவதாக  நம்மிடம் உறுதி அளித்தார். மேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மூலம் இந்தப் பிரச்சினையை  பிரதம அமைச்சருக்கும்  கடிதமாக  கொண்டு சென்றோம். 

மீண்டும் CPMG அவர்களிடம் பணப்பிரச்சினை குறித்து பேசிய தினம்,  இது குறித்து அஞ்சல் மூன்று சங்கம் வலியுறுத்தியது.  பிரச்சினை இந்த வாரத்தில் தீர்க்கப்படும் என்று மீண்டும் CPMG அவர்கள்   உறுதி அளித்தார். இன்றைய தினம்  STRIKE NOTICE அளிக்கச் சென்றபோது  CPMG  அவர்கள்  PHILATELY கண்காட்சிக்கு சென்றிருந்ததால்  அவரைப் பார்க்க இயலவில்லை. எனினும் , பொங்கல் பண்டிகை அன்று விடுமுறை பெறப்படவில்லையென்றால் ,  அன்றைய தினம்  நம்முடைய  NFPE சார்பாக  பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை  CPMG அவர்களிடம் தெரிவிக்குமாறு  கூறிவிட்டு வந்துள்ளோம்.

ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய CPMG  அவர்கள் இருப்பதாலும், அவரே  நிச்சயம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும், விடுமுறை பெற்றுத் தரப்படும் என்ற உறுதி மொழியை  இரண்டு முறை அளித்துள்ளதாலும்  மாநிலச் சங்கங்கள் பொறுமை காக்கின்றன.  எது எப்படி ஆனாலும்,  இப்படி  'இல்லாத  ஒரு பிரச்சினை', இன்று 'பெரிய பிரச்சினை ' ஆக்கப்பட்டிருப்பது கண்டு வருந்துகிறோம்.  

இது  பிரச்சினை  என்று  தெரிந்தும்,  கடைசி  நேரம்  வரை     இழுத்தடிக்கப்  
படுவதும் வேதனை அளிக்கிறது. மாநில நிர்வாகத்தின் நல்லுறவை வேண்டி பொறுமை காக்கிறோம். இதன் பிறகாவது , நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்றும், பிரச்சினை தீர்க்கப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். தீர்க்கப்படவில்லையெனில்  நிச்சயம் பொங்கல் பண்டிகை நாளில்  நாம் பணிப் புறக்கணிப்பு செய்திடுவோம் என்பதை இதன் மூலம் அறிவிப்பாகவே செய்கிறோம். 

தமிழின உணர்வு காப்போம் !                      தொழிலாளர் உரிமை காப்போம் !

பொங்கல் விடுமுறை  நிச்சயம் பெறுவோம் !