Tuesday, March 17, 2015

STRIKE CAMPAIGN - REGIONWISE TOUR PROGRAMME OF CIRCLE OFFICE BEARERS !

"சுக்கா மிளகா  சுதந்திரம் என்பது கடையில் வாங்க  ..
போராடிப் பார் !   போராட்ட வியர்வைக்குப் பின் 
நுனி நாவில்  ஒரு சொட்டு தேனாய் இனிக்கும்...
நீ உணர்வாய் சுதந்திரம் இன்னதென்று ! "
_________________ 

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! எதிர்வரும் 26.03.2015அன்று   நடைபெற உள்ள தமிழகம் தழுவிய  வேலை நிறுத்தத்தை ஒட்டி கோட்ட மற்றும் கிளைகளில் நடத்த வேண்டிய மண்டல ரீதியிலான ஆயத்தக் கூட்டங்கள்  பட்டியல்  கீழே  அளிக்கப் பட்டுள்ளது.  இதன் நகல் ஏற்கனவே அந்தந்த மண்டல செயலர்கள் மூலம்  உரிய கோட்ட /கிளைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளது. எனவே  குறிப்பிடப்பட்டுள்ள  நாட்களில்  அந்தந்த  அஞ்சல் மூன்று  கோட்ட/ கிளைச் செயலர்கள்,  தல  மட்டத்தில் உள்ள  இதர சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்களை ஒருங்கிணைத்து   வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டுகிறோம். மாநிலச் சங்க நிர்வாகிகள்  அறிவிக்கப்பட்ட கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு வேலை நிறுத்தத்தை முழுமையான வெற்றியாக ஆக்கிட வேண்டும் என்றும் வேண்டுகிறோம். சென்னை பெருநகர மண்டல சுற்றுப் பயண அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும்.

ஒவ்வொரு நாளும் போராட்ட வீச்சு பெருகட்டும் !
போராட்ட நாளில் பூகம்ப வெடிப்பாய் மாறட்டும் !





=============================
N F P E
அஞ்சல்.RMS,GDS இணைப்புக்குழு,தமிழ் மாநிலம்.
26.03.02015 வேலை நிறுத்த சுற்றுப் பயணம்
மேற்கு மண்டலம்
தோழர்.சி.சஞ்சீவி மாநில உதவிச் செயலர்,அஞ்சல் மூன்று
தோழர்.ஜெயராஜ் ,மாநிலத் தலைவர் ,அஞ்சல் நான்கு
தோழர்.K.C.ராமச்சந்திரன் அகிலஇந்திய உதவி செயலர் GDS(NFPE)
15.03.2015      ஆத்தூர்
21.03.2015      சேலம் மேற்கு,கிழக்கு (தோழர்.K.R.கணேசன் மாநிலத் தலைவர்.R3)
22.03.2015      நாமக்கல்
23.03.2015      திருச்செங்கோடு
24.03.2015      கிருஷ்ணகிரி
25.03.2015      தர்மபுரி

தோழர்.A,ராஜேந்திரன்  மாநில அமைப்பு  செயலர்,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.V,தர்மலிங்கம்  மாநில அமைப்பு  செயலர்,அஞ்சல் நான்கு 
தோழர்.மகாலிங்கம் மாநில உதவி செயலர் GDS(NFPE)

19.03.2015      குடியாத்தம்
20.03.2015      திருப்பத்தூர்
21.03.2015      திருப்பூர்
22.03.2015      பவானி
23.03.2015      கோபி
24.03.2015      ஈரோடு

தோழர்.எபினேசர் காந்தி   மாநில உதவித் தலைவர் ,அஞ்சல் மூன்று
தோழர். தோழர்.பழனிசாமி மண்டல செயலர்,அஞ்சல் நான்கு
தோழர்.சதாசிவம் ,மாநிலத்  உதவித் தலைவர் , GDS(NFPE)
19.03.2015      ஊட்டி
20.03.2015      கோயம்புத்தூர்
21.03.2015      மேட்டுப்பாளையம்
22.03.2015      பொள்ளாச்சி
23.03.2015      உடுமலைபேட்டை
24.03.2015      தாராபுரம்
25.03.2015      குன்னூர் 
==========================================================================================

Monday, March 16, 2015

GO AHEAD ! ORGANISE ! 26.03.2015 ONE DAY STRIKE THROUGHOUT TAMILNADU CIRCLE TO PRESS THE COMMON DEMANDS OF ALL SECTION OF EMPLOYEES !

 தமிழகம் தழுவிய  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS  மூன்று , RMS  நான்கு, கணக்குப்  பிரிவு, நிர்வாகப் பிரிவு, SBCO , GDS , CASUAL/ MAZDOOR/PART TIME /DAILY  WAGERS  

26.03.2015  ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

மாநில அஞ்சல் நிர்வாகமே ! 
ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
TARGET  என்ற பெயரில்  கசக்கிப் பிழியாதே ! 
தொழிற் சங்க உரிமைகளை மதித்து நட ! 
தொழிலாளர்களை பழி வாங்கும் போக்கை கைவிடு !  
அனைத்து பகுதியினரின் தேங்கிக் கிடக்கும்  
கோரிக்கைகளை தீர்த்து வை !
__________________________________________________________

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக NFPE அமைப்பின் வரலாறு காணாத ஒற்றுமையின் மைல்கல்  !
13.03.2015 அனைத்து சங்கங்களின் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாபெரும் வெற்றி !
__________________________________________________________

அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது NFPE தமிழ் மாநில அமைப்பின் ஒன்பது சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 13.03.2015 அன்று திருச்சி நகரில் SRMU சங்கக் கட்டிடத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. ! NFPE இன் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள்  மிகப் பெரும் எண்ணிக்கையில்  கூடினர் !

கூட்டத்திற்கு NFPE  தமிழ் மாநில இணைப்புக்குழு தலைவர் தோழர் B.பரந்தாமன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி இணைப்புக்குழு கன்வீனர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு 60 லிருந்து 70 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டது தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை ! 

26.03.2015 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் சக்தியாக நடத்திடுவோம் என NFPE போர்ப்படை தளபதிகள் சபதம் ஏற்றனர் ! 

P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி,
P4 மாநில செயலாளர் தோழர் G.கண்ணன்,
R3 மாநிலசெயலாளர் தோழர் K .ரமேஷ்,
R4 மாநிலசெயலாளர் தோழர் B.பரந்தாமன்,
GDS மாநிலசெயலாளர் தோழர் R. தனராஜ்,
OS மாநிலசெயலாளர் தோழர் T.E .ரமேஷ்,
P3 மாநில தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,
R3 மாநில தலைவர் தோழர் K.R.கணேசன்,
OS மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன்,
GDS மாநில தலைவர் தோழர் S.ராமராஜ்,
NFPE  செயல் தலைவர்  தோழர் A .மனோகரன் 
P3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி,
GDS அகில இந்திய உதவி பொதுசெயலாளர் தோழர் KC.ராமச்சந்திரன்,

ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் என  சபதம் ஏற்றனர் !

வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் ... 17.3.2015 முதல் 25.3.2015 வரை. நடைபெற உள்ளன.
அந்தந்த மண்டலச் செயலர்கள்  பொறுப்பேற்று , அந்தந்த  மண்டலங் களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து  கூட்டங்களுக்கான அறிவிப்புகளை செய்திட  தீர்மானிக்கப்பட்டது.

மண்டல ரீதியான விளக்ககூட்டங்கள்
மதுரை   :  19.03.2015
கோவை  :  20.03.205.
திருச்சி  :  21.03.2015.
சென்னை  :  23.03.2015. 

இக்கூட்டங்களில் அனைத்து மாநில செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை  அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டலச்  செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , மண்டல தலைமையிடத்து  கோட்டச் செயலர்கள் இணைத்து  ஏற்பாடுகள் செய்திட வேண்டுகிறோம் !

டக்குமுறைக்கு எதிராக,  தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக,  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் படுவதற்கு எதிராக  தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம்  !

ஊழியர்  உரிமை காக்கும் போராட்டத்தில்  களமிறங்குவோம் !

வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
ஊழியர் ஒற்றுமை  ஓங்கட்டும் !!

திருச்சி கூட்டத்தின் சில புகைப்படங்கள் 





Wednesday, March 11, 2015

STRIKE NOTICE SERVED - MASS DEMONSTRATION IN FRONT OF CPMG'S OFFICE -GRAND SUCCESS !

கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  
மாபெரும் வெற்றி ! 
சட்ட பூர்வமான வேலை நிறுத்த நோட்டீஸ் முறையாக வழங்கப்பட்டது !
26.03.2015 அன்று தமிழகத்தில்  தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளுக்காக 
தமிழகம் தழுவிய ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் ! நேற்று (10.03.2015) அன்று மதியம்  தமிழக NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு சார்பாக 9 சங்கங்கள் , CPMG  அலுவலகம் முன்பாக  நடத்திய கோரிக்கை முழக்க  ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.  கிட்டத்தட்ட 300  தோழர்கள்  கலந்து கொண்டது இந்த நிகழ்வின் சிறப்பான அம்சமாகும். இந்த ஆர்ப்பாட்டம்  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் (R  4) தலைமையில், தோழர். J . ராமமூர்த்தி (P  3) முன்னிலையில், NFPE  அனைத்து மாநிலச் செயலர்களும்  மற்றும் அகில இந்திய சங்கங்களின்  நிர்வாகிகளும்  கலந்துகொள்ள  எழுச்சியுடன்  நடைபெற்றது.  சிறப்பு  அழைப்பாளராக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழக  பொதுச் செயலர்  தோழர். M . துரைபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.  


ஆர்ப்பாட்டம்  முடிந்த பிறகு  அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் அடங்கிய  26.3.2015 அன்றைய தேதியில் நடைபெற உள்ள வேலை நிறுத்தத்திற்கான  சட்ட பூர்வமான நோட்டீஸ்  CHIEF  PMG  தலைமை இடத்தில் இல்லாத காரணத்தினால்  DPS  HQ அவர்களிடம்  நேரில் வழங்கப் பட்டது. இதன் நகல்  PMG,CCR  மற்றும் PMG, MM  அவர்களுக்கும் அளிக்கப் பட்டது.  மேலும்  அனைத்து PMG க்களுக்கும் ,  தொழிலாளர் நல ஆணையருக்கும் முறையாக அனுப்பப் பட்டது. 


13.03.2015 அன்று திருச்சியில் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் 


கூட்டத்தின் முடிவில்,  வேலை நிறுத்தம் குறித்து அடுத்த கட்ட நடவடிக் கைகள் மேற்கொள்ள  எதிர்வரும் 13.03.2015 அன்று  SRMU  சங்கக் கட்டிடம்  திருச்சியில் காலை 10.00 மணியளவில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்  முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்தக் கூட்டத்திற்கு NFPE  இன்   அனைத்து  மாநிலச் சங்கங் களின்  மாநில நிர்வாகிகள் அனைவரும் , கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டது.  


அனைத்து மண்டலங்களிலும்  வேலைநிறுத்த  ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடவும் ,  அதில் அனைத்து மாநிலச்  செயலர்களும்  கலந்து கொள்வதெனவும்  தீர்மானிக்கப்பட்டது.  மேலும்  தமிழகத்தின் அனைத்துக் கோட்டங்களிலும் வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள்  நடத்திடுவதெனவும்  அதில்  அனைத்து சங்கங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள்  அடுத்த வாரத்தில் இருந்து  கலந்துகொள்ளச் செய்வ தெனவும்  தீர்மானிக்கப் பட்டது. 


எனவே  மாநிலச் சங்க நிர்வாகிகள் , வேறு  காரணம் எதுவும் கூறாமல்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்களில்  கலந்துகொள்ள  தயார் நிலையில் இருக்குமாறும்  கேட்டுக் கொள்கிறோம்.  வேலை நிறுத்த  நோட்டீஸ் மற்றும்  கோரிக்கைகள் அடங்கிய  மனுவின் நகல் அனைத்து கோட்ட / கிளைச் செயலர்களுக்கும்  தனியே  அனுப்பப்படும்.  வேலை நிறுத்த நோட்டீஸ்  மற்றும்   கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த புகைப் படங்களில் சில  கீழே  பார்க்கலாம். 
















Tuesday, March 10, 2015

DEAR COMRADES! MEMBERSHIP VERIFICATION ORDERED BY THE DEPARTMENT ! BE ALERT !

VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATION UNDER CCS (RSA) RULES, 1993-CALLING OF APPLICATIONS-  DEPARTMENT  ISSUED NOTIFICATION



CLARIFICATORY ORDERS BY GOVERNMENT ON PRE-2006 PENSIONERS


Department of Pension & Pensioners Welfare issues an order explaining as to why only S-29 Scale Pensioners were given the benefit of implementation from 1.1.2006 while all the remaining Pre-2006 Pensioners got to wait!!

The Order says that since the Supreme Court had finally disposed of one writ petition related to S-29 Pensioners, it has been implemented to them. For others, until the remaining 3 Writ Petitions are not disposed off, the Government will not implement!! 

The Orders of the Department of Pension & Pensioners Welfare is given below: 

REVISION OF PENSION OF PRE-2006 PENSIONERS – REG.

 G.I., Dept. of Pen. & P.W., O.M.No.38/77-A/09-P&PW(A)(Pt.)

The orders for implementation of the decision taken by the Government on the recommendations of 6th CPC for revision for pension of past pensioners were issued vide Department of Pension & Pensioners' Welfare's OM dated 1.9.2008. The provisions of Para 4.2 of this OM were clarified vide this Department's letter dated 3.10.2008.

2.     The Hon'ble Central Administrative Tribunal, Principal Bench, New Delhi in its common order dated 1.11.2011 in four petitions [OA No.655/2010, 306/2010, 50712010 and 3079/2009] directed that the past pensioners may be granted, w.e.f. 1.1.2006, a minimum pension with reference to the fitment table applicable for revision of pay of serving employees.

3.      A large number of representations from pre-2006 pensioners are being received by the Department of Pension & Pensioners' Welfare for extension of benefits similar to what had been allowed in case of OA No.655/2010 by CAT, Principal Bench, New Delhi.

4.       In this context, it is informed that four Writ Petitions were filed in the High Court of Delhi challenging the order dated 1.11.2011 of Hon'ble CAT in four OAs. These petitions were dismissed on 29.4.2013. Subsequently, four SLPs were filed in the Hon'ble Supreme Court over a period of time against the said order of the Hon'ble High Court. Of the four SLPs, the one pertaining to Central Government SAG (S-29) Pensioners' Association which was first in the series of said SLPs, has since been dismissed by the Hon'ble Supreme Court on 29.7.2013. As the Review Curative Petition against the said order dated 29.7.2013 also failed, the Government of India decided to comply with the order by extending the requisite benefits to the parties involved in the said SLP. As regards the other three SLPs (Nos.36148-50/2013), Hon'ble Supreme Court in its order dated 19.11.2013 issued notice and made the following observation: .
"Learned Counsel for the respondent submits that during the pendency of these petitions the respondent-writ petitioners shall not precipitate the matter by filing contempt proceedings either before the High Court or before the Tribunal. That statement is recorded. "

5.          Thus the issue of revision of pension of pre-2006 pensioners w.e.f. 1.1.2006 as covered under SLP Nos. 36148-50/2013 in the Apex Court which have been tagged with Civil Appeal No.8875-76/2011 filed by Ministry of Defence in a similar matter is subjudice.

6.           This is the information.

7.       The outcome of SLPs under reference in Para (4) would be brought to the notice of all Ministries /Departments.

DEPARTMENT OF POSTS REFERRED THE GDS CASE TO FINANCE MINISTRY FOR INCLUSION IN 7th CPC

PJCA  வின்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒட்டி கடந்த 5.2.2015 அன்று  நம்முடைய தொழிற் சங்கங்களுடன்  நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அளிக்கப்பட்ட  உறுதி மொழியின் படி  GDS  ஊழியர்களை ஏழாவது ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டுவர  DEPARTMENT  OF  EXPENDITURE க்கு  மீண்டும் அஞ்சல் இலாக்கா  பரிந்துரைத்துள்ளது . கீழே பார்க்க   இலாக்கா நம்முடைய PJCA  வுக்கு  அளித்துள்ள பதிலை .
=====================================================================
Meeting with with PJCA
To
The Chairman / Secretary
Postal Joint Council of Action

Subject:   Meeting held with PJCA on 05/02/2015 under the Chairpersonship of Secretary (Posts)

Dear Sir,

       As decided vide Point 2 of the minutes of  above meeting, this is to inform you that the proposal of GDS for their inclusion within the terms of reference of 7th CPC has been endorsed to the Department of Expenditure for re-consideration.                                                                                                                                                          Sd/-
                                                                                                              (Arun Malik)
                                                                                              Director (SR & Legal)

Meeting with with PJCA

Inbox
x
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/profile_mask2.png

https://plus.google.com/u/0/_/focus/photos/public/AIbEiAIAAABDCOzggMT1-fGqECILdmNhcmRfcGhvdG8qKDRhM2Y5OWU0M2RhZDRiOGE2MWRkODhlMzEwMGU3MjY3OThjNTM0NzAwAXJqfLnpA6jVHr7Ygv7vkpy_3W5M?sz=24

Monday, March 9, 2015

MOBILISE IN LARGE ! SERVING OF STRIKE NOTICE WITH THE CPMG, TN BY TN NFPE COC ON 10.03.2015 FOLLOWED BY LUNCH HOUR DEMONSTRATION IN FRONT OF O/O CPMG, TN


அடக்குமுறையை எதிர்த்து , 
தொழிலாளி அடிமைப்படுத்தப் படுவதை எதிர்த்து , 
தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி, பணியிடத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி ,
 ஒழுங்கான கணக்கீட்டில் காலிப் பணியிடங்களை நிறைவேற்றக் கோரி ,

 CBS /CIS சேவைகளை சீர்படுத்தக் கோரி, 
அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS , கணக்குப் பிரிவு, 
நிர்வாகப் பிரிவு, GDS உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியர்களின் 
தேங்கிக் கிடக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, 

 தமிழகம் தழுவிய அளவில் போர்ப் பரணி !
இது உரிமைக்கான யுத்தம் !
உழைக்கும் வர்க்கத்தை அடிமையாக நினைக்கும் 
சில அதிகார மையங்களுக்கு  நம் உணர்வைக் காட்டும் யுத்தம் !
_________________________________________________________________________________
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் !
10.03.2015 மதியம் CHIEF PMG 
அலுவலகம் முன்பாக 
உணவு இடைவேளை ஆர்பாட்டம் !
ஆர்ப்பாட்ட முடிவில் சட்ட பூர்வமான 
வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குதல் !
_________________________________________________________________________________


தோழனே வா ! தோள் கொடுக்க வா !            வீ ரனே வா வீறு கொண்டு வா !
"கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும்விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்.
ஆடுமாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி.
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு !
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்! "