Monday, March 16, 2015

GO AHEAD ! ORGANISE ! 26.03.2015 ONE DAY STRIKE THROUGHOUT TAMILNADU CIRCLE TO PRESS THE COMMON DEMANDS OF ALL SECTION OF EMPLOYEES !

 தமிழகம் தழுவிய  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS  மூன்று , RMS  நான்கு, கணக்குப்  பிரிவு, நிர்வாகப் பிரிவு, SBCO , GDS , CASUAL/ MAZDOOR/PART TIME /DAILY  WAGERS  

26.03.2015  ஒரு நாள்  வேலை நிறுத்தம் !

மாநில அஞ்சல் நிர்வாகமே ! 
ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !
TARGET  என்ற பெயரில்  கசக்கிப் பிழியாதே ! 
தொழிற் சங்க உரிமைகளை மதித்து நட ! 
தொழிலாளர்களை பழி வாங்கும் போக்கை கைவிடு !  
அனைத்து பகுதியினரின் தேங்கிக் கிடக்கும்  
கோரிக்கைகளை தீர்த்து வை !
__________________________________________________________

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக NFPE அமைப்பின் வரலாறு காணாத ஒற்றுமையின் மைல்கல்  !
13.03.2015 அனைத்து சங்கங்களின் 
மாநிலச் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாபெரும் வெற்றி !
__________________________________________________________

அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது NFPE தமிழ் மாநில அமைப்பின் ஒன்பது சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகளின் கூட்டம் 13.03.2015 அன்று திருச்சி நகரில் SRMU சங்கக் கட்டிடத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. ! NFPE இன் அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள்  மிகப் பெரும் எண்ணிக்கையில்  கூடினர் !

கூட்டத்திற்கு NFPE  தமிழ் மாநில இணைப்புக்குழு தலைவர் தோழர் B.பரந்தாமன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கம் பற்றி இணைப்புக்குழு கன்வீனர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார். கூட்டத்திற்கு 60 லிருந்து 70 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டது தமிழக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்புமுனை ! 

26.03.2015 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தமிழகத்தில் சக்தியாக நடத்திடுவோம் என NFPE போர்ப்படை தளபதிகள் சபதம் ஏற்றனர் ! 

P3 மாநில செயலாளர் தோழர் J.ராமமூர்த்தி,
P4 மாநில செயலாளர் தோழர் G.கண்ணன்,
R3 மாநிலசெயலாளர் தோழர் K .ரமேஷ்,
R4 மாநிலசெயலாளர் தோழர் B.பரந்தாமன்,
GDS மாநிலசெயலாளர் தோழர் R. தனராஜ்,
OS மாநிலசெயலாளர் தோழர் T.E .ரமேஷ்,
P3 மாநில தலைவர் தோழர் J.ஸ்ரீவெங்கடேஷ்,
R3 மாநில தலைவர் தோழர் K.R.கணேசன்,
OS மாநில தலைவர் தோழர் D.சிவகுருநாதன்,
GDS மாநில தலைவர் தோழர் S.ராமராஜ்,
NFPE  செயல் தலைவர்  தோழர் A .மனோகரன் 
P3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி,
GDS அகில இந்திய உதவி பொதுசெயலாளர் தோழர் KC.ராமச்சந்திரன்,

ஆகியோர் வேலைநிறுத்த போராட்டத்தை முழு வெற்றி பெற செய்வோம் என  சபதம் ஏற்றனர் !

வேலைநிறுத்த விளக்க கூட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் ... 17.3.2015 முதல் 25.3.2015 வரை. நடைபெற உள்ளன.
அந்தந்த மண்டலச் செயலர்கள்  பொறுப்பேற்று , அந்தந்த  மண்டலங் களில் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து  கூட்டங்களுக்கான அறிவிப்புகளை செய்திட  தீர்மானிக்கப்பட்டது.

மண்டல ரீதியான விளக்ககூட்டங்கள்
மதுரை   :  19.03.2015
கோவை  :  20.03.205.
திருச்சி  :  21.03.2015.
சென்னை  :  23.03.2015. 

இக்கூட்டங்களில் அனைத்து மாநில செயலாளர்களும் பங்கேற்கின்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை  அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டலச்  செயலர்கள், மாநிலச் சங்க நிர்வாகிகள் , மண்டல தலைமையிடத்து  கோட்டச் செயலர்கள் இணைத்து  ஏற்பாடுகள் செய்திட வேண்டுகிறோம் !

டக்குமுறைக்கு எதிராக,  தொழிற்சங்க பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக,  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் படுவதற்கு எதிராக  தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம்  !

ஊழியர்  உரிமை காக்கும் போராட்டத்தில்  களமிறங்குவோம் !

வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
ஊழியர் ஒற்றுமை  ஓங்கட்டும் !!

திருச்சி கூட்டத்தின் சில புகைப்படங்கள்