Friday, March 20, 2015

MEETING WITH PMG, SR ON 19.03.2015 IN CONNECTION WITH MADURAI ISSUE

மதுரை மண்டலத்தில் மாநிலச் செயலர் 

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம் . மண்டல அலுவலகத்தில் DEPUTATION  இல் வைத்திருக்கும்  மதுரை கோட்டத்தை சேர்ந்த 28 ஊழியர்களை உடனே திருப்பி அனுப்பக் கோரி  அரசரடி தலைமை அஞ்சலகத்தில்  பணியில் இருந்து கொண்டே   தொடர் உண்ணா விரதம் இருக்கும்  மதுரை  அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி  அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும்,  அவர்களது கோட்டப் பிரச்சினைய தீர்த்திடவேண்டி  PMG SR  அவர்களுடன் நேரடி பேச்சு  வார்த்தை நடத்திட வேண்டியும் அஞ்சல் மூன்றி மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்கள்  நேற்றைய தினம்  மதுரைக்கு சென்றிருந்தார்.  காலையில்  தோழர். சுந்தரமூர்த்தி அவர்களை நேரில் சென்று வாழ்த்திவிட்டு,  அவர் முன்னிலையிலேயே ,  APMG STAFF  அவர்களை  கைபேசியில் தொடர்பு கொண்டு  இந்தப் பிரச்சினை குறித்து PMG SR  அவர்களுடன்  விவாதித்திட  மண்டல அலுவலகம்  வருவதாகவும்  உடன் நேரம் ஒதுக்கித்தருமாரும் வேண்டினார்.  

அதற்கு முதலில்  PMG SR  அவர்கள் வெளியில் இருப்பதாக தகவல்  தரப்பட்டது.  அவர் வந்தவுடன் உடன் தகவல் தெரிவிக்குமாறு மாநிலச் செயலர்  வேண்டினார் . 15 நிமிடம் கழித்து  PMG அவர்கள்  வீட்டில் இருப்பதாகவும்  அவருக்கு சற்று உடல் நலம்  சரியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  அதற்கு ,  எப்படியும் அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்று  வலியுறுத்தினார்  நம் மாநிலச் செயலர் தோழர் J .R .  

மீண்டும்  அரை மணி நேரம்  கழித்து , PMG அவர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர் விடுப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி  மாநிலச் செயலர்  மற்றும் அவருடன்  அங்கு வந்திருந்த அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். A . வீரமணி , GDS  மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் , முன்னாள் மாநிலச் செயலர்  தோழர். பார்த்திபன் , விருதுநகர்  கோட்ட முன்னாள் செயலர் தோழர்  L .S ., பாண்டி கோட்ட செயலர் தோழர். சத்திய மூர்த்தி ஆகியோருடன்   மண்டல அலுவலகம் சென்று  APMG STAFF  அவர்களிடம் PMG உடனான சந்திப்புக்கு   உடன்   ஏற்பாடு செய்திட வேண்டினார். அவர் தன்னால் தொடர்பு கொள்ள இயலாது என்று தெரிவித்ததால், மீண்டும்  கைபேசியில்  PMG SR  அவர்களை தொடர்பு கொண்டு  பேசினார்  நம் மாநிலச் செயலர். வேறு வழியின்றி நம் மாநிலச் செயலாளர் தோழர். J .R . இடம்   PMG SR  அவர்கள்  மாலை  05.30 மணிக்கு   நேர் காணலுக்கு ஒப்புக் கொண்டார்.

அதனடிப்படையில் மாலை 05.30 மணியளவில்  PMG அவர்களுடன்  மாநிலச் செயலரின் சந்திப்பு  நடைபெற்றது. மாநிலச்  செயலருடன், மாநில நிதிச் செயலர் தோழர். A  வீரமணி, முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V  பார்த்திபன்  , விருதுநகர் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். L .S .  ஆகியோர் கலந்துகொண்டனர்.  பேச்சு வார்த்தை      
1 1/2 மணி நேரம்  தொடர்ந்து நடைபெற்றது.  PMG அவர்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்டபடி 9 PA COக்கள்   புதிதாக பணியில்  எதிர்வரும் 11.4.2015 அன்று இணைவதால் அன்று  அதற்கு ஈடான 9  P .A . க்களை  திருப்பி அனுப்புவதாகவும், ஏற்கனவே கடந்த வாரத்தில்  அங்கயற்கண்ணி என்ற தோழியர் திருப்ப அனுப்பப்பட்டதாகவும் , எதிர்வரும் 31.3.2015 அன்று தோழியர் . உமா என்பவரை திருப்பு அனுப்புவதாகவும்  இரண்டாம் வாரத்தில்  IP  பணியில் இருந்து விடுவிப்பு கோரி பெற்றுள்ள தோழியர்  கௌரி என்பவர் திருப்பப் படுவார் என்றும்  உறுதி  அளித்தார்.   

குறைந்த பட்சம் 20 பேரையாவது திருப்ப அனுப்ப வேண்டும் என்று மாநிலச் செயலர் வேண்டினார். அதற்கு  PMG அவர்கள்  ஒப்புக் கொள்ளவில்லை .  இதனை  நம்முடைய மாநிலச் செயலர் ஏற்கவில்லை .உடன் PMG அவர்கள் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும்  உடன்  மருத்துவரை  பார்க்கவேண்டும் என்றும்  கூறிக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார்.  

இதன் பின்னர் மாலை சுமார் 07.00 மணியளவில்  அரசரடி HO  வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலர்  PMG அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்ததோடு , இந்தப் பிரச்சினையில்  நாளை (20.03.2015) அன்று LABOUR COMMISSIONER  முன்னிலையில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் , முழுவதுமாக DEPUTATION  உள்ள அதிகப் படியான ஊழியர்களை  திரும்பப் பெறுவோம் என்றும் , இதனை கோரிக்கையாக வைத்தே  எதிர்வரும் 26.03.2015 அன்று  மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள்  வேலை நிறுத்தத்தை   NFPE  இன் ஒன்பது சங்கங்களும் செய்ய உள்ளன என்றும்  உறுதியாகத் தெரிவித்தார் .

போராட்ட  களத்தில்  உள்ள தோழர். சுந்தரமூர்த்தியை வாழ்த்தி மாநிலச் சங்கத்தின் சார்பில்  சால்வை அணிவித்து  மாநிலச் சங்கத்தின் ஆதரவை  போராடும் தோழருக்கு  தெரிவித்தார்.  மாநிலச் சங்க போராட்ட  தயாரிப்புகள் தீவிரப் படுத்தப்படுவதாகவும்  நிச்சயம்  கோரிக்கைகளில்  வெற்றி பெறுவோம் என்றும்  சூளுரைத்தார். 

மறுநாள் (20.03.2015) காலை  தொழிலாளர் நல ஆணையருடன் ஏற்கனவே பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருந்ததால்  இரவு சுமார் 08.00 மணியளவில் கோட்ட சங்க நிர்வாகிகளால்  மாநிலச் செயலர்கள் தோழர். J .R .  மற்றும்  தோழர்.  R . தனராஜ்  ஆகியோர்  வழியனுப்பப் பட்டனர். 

மதுரை மட்டுமல்லாது  அனைத்து மண்டலங்களிலும் மற்றும்  மாநில (CIRCLE  OFFICE ) அலுவலகத்தில் இருந்தும்  அதிகப்படியாக   பல்வேறு கோட்டங்களில் இருந்து  மாநில அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை  SHORTAGE  உள்ள நிலையில்  கோட்டங்களுக்கு திரும்ப பெறுவதே  நம் இலட்சியம் ஆகும். 

அந்த திசை நோக்கி  மாநிலச் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு  போராட்ட களத்தை விரிவு படுத்தியுள்ளது . கடந்த பதினைந்து ஆண்டுகளாக  தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினை   தற்போதாவது   தீர்க்கப்பட வேண்டும் என்பதே  மாநிலச் சங்கத்தின்  போராட்ட நோக்கமாகும் .

போராடுவோம் !    வெற்றி பெறுவோம் !