அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு வணக்கம் ! நம்முடைய தமிழக NFPE இணைப்புக் குழுவின் வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய இணைப்பு உங்கள் அனைவருக்கும் இரண்டு நாட்கள் முன்னதாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் NFPE இணைப்புக் குழுவின் வேலை நிறுத்தத்திற்கான PRINTED NOTICE நேற்று அனுப்பப் பட்டுள்ளது . இரண்டும் கிடைத்திருக்கும் என்று எண்ணுகிறோம்.
இதில் நம்முடைய அஞ்ச மூன்றின் முக்கிய கோரிக்கைகளில். மண்டல மற்றும் மாநில அலுவலகங்களில் நீண்ட காலமாக DEPUTATION இல் இருக்கும் ஊழியர்களை அந்தந்த கோட்டங்களுக்கு திருப்ப அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும் .
இந்தக் கோரிக்கையையும் உள்ளடக்கித்தான் நம்முடைய NFPE இன் ஒன்பது சங்கங்களும் எதிர்வரும் 26.03.2015 அன்று தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்திட அழைப்பு விடுத்துள்ளது. அதன் மீது தற்போது தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன. மண்டல ரீதியில் கூட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டி மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தற்போது மதுரையில் பணியில் உள்ளிருப்பு உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வளவு நடக்கும் போதும் நம்முடைய மதுரை மண்டல நிர்வாகம் வாய் மூடி மௌனியாக உள்ளது வியப்பாக உள்ளது. எனவே நம் மாநிலச் சங்கம் வேலை நிறுத்த கோரிக்கை மீது பேச்சு வார்த்தைக்கு எதிர் பார்த்துக் காத்திராமல் தற்போது CHIEF PMG அவர்களிடம் உடனே தலையிட்டு இந்த பிரச்சினையில் சுமூக முடிவு காண வேண்டும் எனவும் DEPUTATION இல் உள்ள ஊழியர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் இந்த பிரச்சினையை எடுத்துச் சென்றுள்ளது. மாநிலச் சங்கத்தின் கடித நகல் கீழே பார்க்கவும்