26.03.2015 தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி !
போராடிய நிர்வாகிகளுக்கும் தோழர்கள் தோழியர்களுக்கும் தமிழ் மாநில NFPE இணைப்புக் குழுவின் நெஞ்சார்ந்த நன்றி !
அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பில் முதலில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். !
அடக்கு முறைக்கு எதிராக, அதிகார அத்து மீறல்களுக்கு எதிராக, தொழிற் சங்க உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக , தொழிற்சங்க பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக , அடிப்படை பணியிட வசதிகள் மறுக்கப்படுவதற்கு எதிராக, CBS /CIS குளறுபடிகளுக்கு எதிராக, நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திட தமிழகம் தழுவிய அளவில் NFPE பேரியக்கத்தின் அனைத்து 9 உறுப்பு சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்திட கொடுத்த அறைகூவல் மாபெரும் வெற்றி பெற்றது !
இது தமிழக அஞ்சல் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு சிறப்புப் பதிவு !இப்படி தமிழக பிரச்சினைகளுக்காக NFPE சங்கங்கள் அனைத்தும் இணைந்து ஒரு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு சிறப்பு ! கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத ஒரு தொழிற்சங்க வரலாற்றுப் பதிவு ! இந்த ஒற்றுமை என்ன விலை தந்தேனும் கட்டிக் காக்கப்படவேண்டும் !
அரசு மற்றும் நிர்வாக இயந்திரங்களின் சட்ட விரோத , தொழிலாளர் விரோத , அதிகார அத்து மீறல்களுக்கு எதிராக நிச்சயம் நாம் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் இன்று பெருகி வருகிறது. தொழிலாளர் நல ஆணையம் முன்பாகக் கூட பேச்சு வார்த்தைக்கு மறுக்கும் மாநில நிர்வாகம் ஒரு புறம், அரசு ஊழியர்களை கொத்தடிமைகள் போல நினைத்து சட்டங்களை குப்பையில் தூக்கி எறிந்து காட்டு தர்பார் நடத்தும் திண்டுக்கல் கோட்ட அதிகாரி போன்ற பல குட்டி அதிகாரிகள் மறுபுறம் .
இந்த நிலை மாநில நிர்வாகத்தால் மாற்றப்பட வேண்டும் . அல்லது தொடர் போராட்டங்கள் மூலம் நாம் மாற்றியாக வேண்டும் . தொழில் அமைதி காக்கப்பட வேண்டும். அரசு ஊழியர் அடிமையல்ல என்பது உணர்த்தப்பட வேண்டும் . அரசாங்க இயந்திரம் ஒரு MODEL EMPLOYER என்ற அரசியல் அமைப்புச் சட்ட விதி நம்மை ஆளும் நிர்வாகத்திற்கு புரிய வைக்கப்பட வேண்டும் .
நம்முடைய ஒற்றுமையின் சக்தி, நம்முடைய போராட்டத்தின் சக்தி, நம்முடைய வேலை நிறுத்தத்தின் சக்தி, நிச்சயம் நிர்வாகத்திற்கு ஊழியர்களின் கொதி நிலையை புரிய வைத்திருக்க வேண்டும். ஊழியர்களிடையே நிலவும் அமைதி இன்மையை தெரிய வைத்திருக்க வேண்டும் ! ஊழியர்கள் பிரச்சினை தீர்க்கப் படவேண்டும்.எதிலும் பரிசீலனை இல்லாமல் கண்மூடித்தனமான உத்திரவிடும் போக்குகள் மாற்றப் படவேண்டும் ! இது நடக்குமா ? நிச்சயம் நடக்கும் என்பது கடந்த கால தொழிற்சங்க வரலாறு ! கடந்த கால போராட்டங் களின் வரலாறு ! மாறுவது என்பது விதி ! மாறும் என்பது ஜனநாயகத் தில் பால் நம்பிக்கை உள்ளோருக்கு உள்ள உறுதி !
பேச்சு வார்த்தை இல்லாமல் வேலை நிறுத்தம் வெற்றி ! நம் எதிர்ப்பு இந்தியா முழுமைக்கும் தெரியும் வண்ணம் மிகச் சரியாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இங்கொன்றும் அங்கொன்றுமாக இடப்படும் உத்திரவுகள் மட்டுமே முழுப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. பேச்சு வார்த்தைக்கு நிர்வாகத்தை நிர்பந்திப்போம் ! சட்ட பூர்வமாகவும் பிரச்சினையை அணுகிடுவோம் ! அப்போதும் பிரச்சினைகள் தீரவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம் !
இது மனமிருந்து நிர்வாகத்தால் முடிக்கப்படுமானால் முடிவு !
முடிவல்ல என்றால் அடுத்த கட்டத்தின் ஆரம்பம் !
ஆம் ! -பிரச்சினைகளின் தீர்வே நமது குறிக்கோள் !
பிரச்சினைகளின் தீர்வுக்கு போராட்டம் தான் வழி என்று
நாம் நிர்ப்பந்திக்கப் பட்டால் வேறு வழி நமக்கு இல்லை !
போராட்டமே நமது ஆயுதம் !
அடுத்த கட்டம் நோக்கி நாம் சிந்திப்போம் !
நேற்றைய வேலை நிறுத்த பதிவுகள் கீழே !
மூடப்பட்ட பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம்
கும்பகோணம் கோட்டம்
ராணிப்பேட்டை கிளை
மயிலாடுதுறை கோட்டம்
சீர்காழி கிளை
தேனீ கோட்டம்
ஆரணி கிளை
முந்தைய தின வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள்
ராமநாதபுரம் கோட்டம்
தென்காசி கிளை