Monday, October 4, 2010

THANKS TO THE VISITORS - ONLY YOUR SUPPORT IS GEARING UP

அன்புத் தோழர்களே !
சாதாரணமாகத் துவக்கப்பட்ட நம் மாநிலச் சங்க வலை தளம் இன்று
தமிழகமெங்கும் நம் ஊழியர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது என்பதை எண்ணும் போது பெருமையாகத் தான் உள்ளது !
அதே நேரம் பொறுப்புகளும் கூடுகிறது !

நம் வலைத் தளத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கையை அறிய
விரும்பினோம் !  கடந்த 02 .08 .2010 அன்று  "VISITOR COLUMN "
துவக்கினோம் !  படிப் படியாய் எண்ணிக்கை உயர உயர ....
எங்கள் பொறுப்புகளும் கூட ஆரம்பித்தது !

இன்று திரும்பிப் பார்க்கிறோம் ... 05 .10௦.2010 அன்றுடன்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்
நம் வலைத் தளத்தை பார்த்தவர் எண்ணிக்கை 10620 என்று
பதிவு காட்டும் போது .... உங்கள் மகத்தான ஆதரவு
எங்கள் கூட்டுப் பணியை மேலும் மேலும் சிறப்பாக செய்ய
ஒரு ஊக்க மருந்தாக அமைந்து  உள்ளது அல்லவா ? ௦

உங்கள் எதிர்பார்ப்பு எங்கள் பணியை மேலும் சிறக்கச்
செய்யும் ! உங்கள் வாழ்த்து எங்கள் பணியை மேலும்
உற்சாகப் படுத்தும் ! 

வாழ்த்துங்கள் ....  செயல்படுகிறோம் !
விமர்சியுங்கள் ..... பணியை செழுமையை ஆக்குகிறோம் !
அதுவே வெற்றி ! நிஜமான வெற்றி !

அதுவே மாநிலச் சங்கத்தின் கூட்டு முயற்சிக்கு
கிடைத்திட்ட அங்கீகாரம் ! நிஜமான அங்கீகாரம் !

வலைத் தளப் பாதையில் ... வலைத்தளத்திலேயே
விமர்சனங்களை ... வாழ்த்துகளை வைத்திட்ட
தோழமை உள்ளங்கள் அனைத்திற்கும்  ....

குறிப்பாக ... தோழர் மனோகர் தேவராஜன் , தூத்துக்குடி-
மருதை- சங்கரன்   திண்டுக்கல், -  சண்முகம்,
செங்கை RMS ,- முரளிதரன், சென்னை PSO , -
மாணிக்கம் , கோவை, - சுரேந்தர், திருப்பூர்-
விஸ்வநாதன் , கரூர்
போன்ற நல்ல உள்ளங்களுக்கு நம் நன்றி ! 

தோழமையுடன்........
மாநிலச் சங்கத்திற்காக ....
ஜெ . இராமமூர்த்தி , மாநிலச் செயலர்.