நேற்றைய தினம் DPA வளாகத்தில் நடைபெற்ற முழு நாள் தார்ணா போராட்டத்தில் தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் நிர்வாகிகளும் , மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு, போராடும் தொழிலாளர்களின் கரத்தை வலுப்படுத்தியதையும், தொடர்ந்து அவர்களது கோரிக்கை அடங்கிய MEMORANDUM நமது தமிழ் மாநில இணைப்புக் குழுவின் சார்பாக CPMG அவர்களுக்கு அளிக்கப் பட்டதன் நகலையும் நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
அதன் அடிப்படையில் இன்று மாலை 04.30 மணிக்கு நமது கோரிக்கை மனு மீது பேசிட CPMG அலுவலகத்தின் மூலம் நாம் அழைக்கப் பட்டோம். அதன் படி CPMG அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இணைப்புக் குழுவின் கன்வீனரும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலருமான தோழர். J. இராமமூர்த்தி , அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J. ஸ்ரீ வெங்கடேஷ் , RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன் , கணக்குப் பிரிவின் மாநிலச் செயலர் தோழர். B. சங்கர் , கணக்குப் பிரிவின் அகில இந்திய தலைவர் தோழர். சந்தோஷ் குமார், கணக்குப் பிரிவின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R.B. சுரேஷ் ஆகியோர் COC சார்பாக கலந்து கொண்டோம்.
பேச்சு வார்த்தையில் MEMORANDUM இல் அளிக்கப் பட்ட பிரச்சினைகளை நாம் தெளிவாக எடுத்து வைத்தோம் . தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு பகுதியிலும் இத்துணை அதிக அளவில் ஊழியர்கள் நிர்வாகத்தால் பழி வாங்கப்படவில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டினோம். இது ஒன்றே GM FINANCE அவர்களின் பழி வாங்கும் குரூர குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கூறினோம்.
அனைத்து பிரச்சினைகளையும் பொறுமையாக கேட்டறிந்த மதிப்புக்குரிய CPMG திரு. T. மூர்த்தி அவர்கள் , அமைதி நிலவ அவர் நிச்சயம் உறுதி அளிப்பதாகவும் அதற்கு நமது முழு ஒத்துழைப்பையும் கோரினார். GM FINANCE அவர்களுக்கு உரிய வகையில் அறிவுறுத்தப்படும் என்றும், இனி வருங் காலங்களில் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசிட வழி காட்டுதல் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
1. நாம் அளித்த பிரச்சினைகளின் முக்கியமானதான ஊழியர்களுக்கு அளிக்கப் பட்ட தண்டனை , மேல் முறையீட்டில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
2. 'BOOK SECTION' பகுதியை CLOSE செய்திடக் கூடாது என்ற நம் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் , இலாக்கா மட்டத்தில் நம் உயர் அமைப்புகள் மூலம் பேசி முழுமையான முடிவு எடுக்கப் படும் வரை இந்த உத்திரவு அமலாகாமல் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்ற நம் கோரிக்கை மீதும் நிச்சயம் பரிசீலிக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
3. TA/DA RECOVERY யால் பாதிக்கப் பட்ட ஊழியர்களின் மேல் முறையீட்டு மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
4. ஊழியர்களின் கழிப்பறை மற்றும் கட்டிடப் பராமரிப்பு குறித்து உரிய உடன் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார்.
5. CAREER PROSPECT வேண்டி அனுப்பப் படும் மனுக்கள் நிச்சயம் நிறுத்தப் படாது என்றும் அப்படி செய்திருந்தால் அது தவறு என்றும் அதன் மீது உரிய அறிவுறுத்தல் செய்யப் படும் என்றும் உறுதி அளித்தார்.
மற்றைய கோரிக்கைகள் மீதும் உடன் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உறுதி அளித்தார். பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது ஒரு நல்ல வெளிப்பாட்டை தெரிவித்தது . பேச்சு வார்த்தையின் முடிவுகள் சரியாக அமல் படுத்திடப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் கோரிக்கை மனு மீது உடனடி பேச்சு வார்த்தைக்கு அழைத்து பிரச்சனைகளை தீர்த்திட உடன் உறுதி அளித்த விதமும் , தொழில் தொழில் அமைதியைப் பேணிட CPMG அவர்களுக்கு இருக்கும் அக்கறைக்கும் நிச்சயம் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகும் .
இந்த சூழல் அனைத்து மண்டலங்களிலும் நிலவிட வேண்டும் என்றும் நாம் வேண்டுகிறோம். !
பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஒதுங்காமல் , எதிர் நின்று போராடிய
கணக்குப் பிரிவு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர், மாநிலத் தலைவர், அகில இந்திய தலைவர் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்
அந்தப் போராட்டத்தில் சங்கத்தினை நம்பி தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர்களுக்கும் , குறிப்பாக வீரம் செறிந்த தோழியர்களுக்கும் ,
அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் அனைத்து மாநிலச் செயலர்களுக்கும் இதர நிர்வாகிகளுக்கும் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழுவின் போராட்ட வாழ்த்துக்களையும் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
ஊழியர் சக்தி அடக்கப் பட்டால் அது அழிவதில்லை !
மாறாக வெடித்து எழும் !
இதற்கு கணக்குப் பிரிவு ஊழியர்கள் சங்கத்தின்
போராட்டம் ஒரு எடுத்துக்காட்டு !
வாழ்க ஊழியர் போராட்டம் ! வெல்க ஊழியர் ஒற்றுமை !
இவண்
தமிழ் மாநில அஞ்சல் RMS
இணைப்புக் குழு -NFPE
சென்னை - 5