திண்டுக்கல் கோட்டத்தின் சுழல் மாறுதல்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததை சுட்டிக் காட்டி கடந்த 30.06.2015 அன்று தென் மண்டல நெறியாளர் திருமதி .T. நிர்மலாதேவி அவர்களிடம் நம்முடைய மாநிலச் செயலாளர் தோழர். J .R . அவர்கள் கடிதம் அளித்து நேரில் பேசிய விபரம் நமது வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். அதற்கு அவரும் , நமது கடிதத்தில் கூறியிருக்கும் பிரச்சினைகளில் தாம் உடன் படுவதாகவும் , இது குறித்து திண்டுக்கல் முது நிலைக் கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று ஆவன செய்வதாகவும் உறுதி அளித்திருந்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியன்று நமது மாநிலச் சங்க நிர்வாகி தோழர். ஜோதி மற்றும் திண்டுக்கல் கோட்டச் செயலர் தோழர் மைக்கேல் சகாயராஜ் ஆகியோரிடம் , நீதிமன்றத்தில் பல ஊழியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதால் இது குறித்து உரிய ஆலோசனை செய்தபின் முடிவெடுப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது நாம் அளித்த அனைத்து RT பிரச்சினைகளையும் உரிய பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் 15 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு RT உத்திரவை அவர்களின் விருப்பக் கடிதத்தின் அடிப்படையிலேயே மாற்றி அமைத்திட உத்திரவு அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டுக்கல் கோட்டத் தோழர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று இந்த உத்திரவினை வழங்கிய மதுரை மண்டல நெறியாளர் திருமதி.
T. நிர்மலா தேவி , IP oS அவர்களுக்கு திண்டுக்கல் கோட்டச் சங்கத்தின் சார்பிலும் , மாநிலச் சங்கத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.