Thursday, November 3, 2016

DEMONSTRATION AGAINST THE ANTI LABOUR ACTIVITIES OF THE ASP (HQ) , VRIDDHACHALAM ON 01.11.2016


விருத்தாச்சலம் அஞ்சல் கோட்ட தலைமை இடத்து உதவிக் கண்காணிப்பாளர் திரு. பெரியசாமி அவர்களின் ஊழியர் விரோத நடவடிக்கைகள்,  தொழிலாளர்களை பழி வாங்கும் போக்கு, ஒரு சார்பு நிலைக் கொள்கை இவற்றைக் கண்டித்து கடந்த 1.11.2016 அன்று கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகம் முன்பாக NFPE  அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முதற்கட்ட கண்டன ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் கீழே காண்க. 

இந்த அதிகாரி கடந்த 1999 முதல் , இடையில்  இரண்டு ஆண்டுகள் தவிர இன்றுவரை  தன்னுடைய சொந்த கோட்டமான விருத்தாச்சலத்திலேயே பல நிலைகளில் பணியாற்ற மண்டல/ மாநில நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டிருப்பதே  இந்தப் பிரச்சினைகளுக்கு காரணம் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மேலும் இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் PS GR.B பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவருக்கு தமிழக அஞ்சல் வட்டத்திலேயே பதவி உயர்வு தரப்பட்டு, அருகாமையில் உள்ள வேலூர் தலைமை அஞ்சலக அதிகாரியாக பணியாற்றிட உத்திரவிடப்பட்டும் கூட அவர் அந்தப் பதவி உயர்வை DECLINE செய்ய அனுமதிக்கப்பட்டு விருத்தாச்சலத்திலேயே பணியாற்ற அனுமதிக்கப் பட்டிருக்கிறார். 

எத்தனையோ அதிகாரிகள் தனது PS GR B பதவி உயர்வில் ASSAM, SHILLONG, BIHAR என்றெல்லாம் பணியாற்றிட  உத்திரவிடப்பட்டு  அங்கே சென்று மிகுந்த சிரமத்திற்கிடையே  பணியாற்றி ,  இரண்டு ஆண்டுகள் முடித்து மீண்டும் தமிழக அஞ்சல் வட்டத்திற்கு  மாறுதல் பெற்று வந்து , தனது தாய் கோட்டத்தில்  பணி மாறுதல் உத்திரவு பெறமுடியாமல்  வேறு மண்டலங்களில் பணியாற்றி வருகின்றனர். இவருக்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப்பட்டும்  இவர்  அதனைப் பயன்படுத்தி இலாக்கா உயர்வுக்கும், ஊழியர் நலனுக்கும் தன்னால் இயன்ற  பணிகளை செய்திடாமல்,  உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதை மாநில / மண்டல நிர்வாகம்  கணக்கில் கொண்டிட வேண்டுகிறோம். 

CENTRAL VIGILANCE COMMISSION வழி காட்டும் நெறிமுறைகள் படி ஒரு அதிகாரியை அவரது சொந்த கோட்டத்தில் பணியாற்ற அனுமதிப்பதும், மேலும் நீண்ட காலம்  ஒரே இடத்திலேயே பணிபுரிய அனுமதிப்பதும் அரசு சேவையை  பாதிக்கும் - சார்பு நிலையை ஏற்படுத்தும் என்றும், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

தற்போது VIGILANCE AWARENESS WEEK   கடந்த 31.10.2016 முதல்  மத்திய அரசினால் அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு கூட்டங்கள்  நடத்திடவும், அதற்கான உறுதி மொழி எடுத்திடவும் அறிவுறுத்தப்பட்டு  ஆங்காங்கே கோட்டங்களில் BANNERகள்  கட்டப்பட்டு உறுதி மொழி எடுத்திடச் சொல்ல ஊழியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். புகைப்படங்கள் எடுத்து பிரசுரிக்கப்படுகின்றன. 

இந்த VIGILANCE AWARENESS  ஊழியர்களுக்கு மட்டும்தானா ? CVC GUIDELINES  அதிகாரிகளுக்கு  கிடையாதா?  என்று மாநில/ மண்டல நிர்வாகத்தை  நாம் கேட்கிறோம். இது போல பல அதிகாரிகள் அவர்களது சொந்த ஊரிலேயே பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருப்பது, அவர்களது நேரத்தை , நிர்வாகம் செய்வதைவிட, சொந்த ஊர் அரசியல் செய்வதற்கே அதிகம் செலவிட  உபயோகப்படுகிறது.  மாநில/ மண்டல நிர்வாகங்கள் கவனிக்கும் என்று நம்புகிறோம்.