அன்புத் தோழர்களே ! வணக்கம் !
பொங்கலுக்குப் பின்னர் நம்முடைய வலைத்தளத்தில் செய்திகள் வெளியிடப்படவில்லை என்று தற்போது பல தோழர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். நிறைய கோரிக்கைகள் வரத் துவங்கியுள்ளன.
செய்திகள் முதலில் போடமுடியாமல் போனது . அதற்குக் காரணம் நாம் துவங்கிய பொங்கல் விடுமுறை யுத்தம் ... அரசியல் கட்சிகளின் பிரச்சினையாக்கப்பட்டு ... தமிழர்களின் உரிமைப் பிரச்சினையாக்கப்பட்டு ... மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு.... அதன் தொடர்ச்சியாக எந்த நிர்வாகம் DOPT தான் இனி போடப்பட்ட உத்திரவை மாற்ற முடியும் என்றதோ, அதே நிர்வாகம் இங்கேயே உத்தரவை மாற்றி வெளியிட வேண்டிய நிர்பந்தம் ,.. நெருக்கடி ஏற்பட்டது .. அதில் இந்தப் பிரச்சினைக்கு நேரடியாக பொறுப்பாகாத ஒரு நல்லவரின் தலை உருண்டது. இதுதான் 'ஜல்லிக்கட்டு ' பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளி.
இதனில் தோன்றி... நீண்டது... ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்குத் தெரிந்ததே ! ஆனால் அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலமும் , முகநூல், WHATSAPP என்று பிரச்சாரம் சூடு பறக்க , அரசுக்கு உளவுத்துறை அறிக்கைகள் சென்று அதனால் நூற்றுக் கணக்கில் முகநூல் கணக்குகள், WHATSAPP குரூப்கள், வலைத்தளங்கள் GOOGLE நிறுவனத்திற்கு புகார் அனுப்பப்பட்டு முடக்கப்பட்டன.
இதில் சம்பந்தமே இல்லாத நம்முடைய வலைத்தளமும் முடக்கப்பட்டது. இதன் காரணம் பொங்கல் விடுமுறை பிரச்சினையை நாம் எடுத்தது .... தமிழர் பிரச்சினையானதுதான். இந்த விஷயம் நமக்கு ஆரம்பத்தில் தெரியாது. பின்னர் GOOGLE நிறுவனத்திற்கு நம்முடைய நண்பர்கள் மூலம் தொடர்ந்து புகார் அளித்தபின்னர், இது தெரிய வந்தது. கடைசியில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்குப் பின்னர் ஒரு மாதம் கடந்து நம்முடைய வலைத்தளம் உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் தான் புதுகை மாநிலச் செயற்குழு கூட்டத்தின் போது, மாநில மாநாட்டு வரவேற்புக் குழு கணக்கு முடித்து மாநிலச் சங்கத்திற்கு செய்திகளை உடனுக்கு உடன் WHATSAPP மூலம் அனுப்பும் பொருட்டு, வரவேற்பு குழு சார்பாக 4G கைபேசியை அளித்தனர் .எனவே அது முதல் நம்முடைய அனைத்து தோழர்களுக்கும் WHATSAPP மூலம் தினம் தோறும் செய்திகள் , வேலை நிறுத்த பிரச்சாரங்கள், அரசு உத்திரவுகள், மாநிலச் சங்க , அகில இந்திய சங்க , சம்மேளன, மகா சம்மேளன நடவடிக்கைகள் தெரிவிக்கத் துவங்கினோம்.
இன்று தினம் பல்லாயிரம் தோழர்களுக்கு இந்த செய்திகள் வினாடிகளில் சென்று சேர்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே பெரும்பாலான தோழர்கள் , வலைத்தளங்களை அலுவலக கணினிகளில் பார்க்க இயலவில்லை என்றும் தனியே இன்டர்நெட் வசதி ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை என்றும் , உயர் தொழில் நுட்பத்தில் WHATSAPP இல் செய்திகளை பகிர்ந்துகொண்டால் உடனுக்குடன் தங்கள் கைபேசியிலேயே பார்த்துக் கொள்வோம் என்று கூறியதால், இதன் பின்னர் நாமும் வலைத்தளத்தை உபயோகப் படுத்துவது விடுத்து, முகநூல் , WHATSAPP களில் செய்திகள் பகிர துவங்கினோம்.
தற்போது மீண்டும் பல தோழர்கள் வலைத்தளமும் வேண்டும் என்று கேட்கத் துவங்கியுள்ளனர். எனவே மீண்டும் நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் செய்திகள் வெளியிட முடிவு செய்து இன்றுமுதல் பதிவுகள் அளிக்கத் துவங்கியுள்ளோம்.
இது தவிர WHATSAPP, FACE BOOK, EMAIL மூலமும் எப்போதும் போல செய்திகள் தொடர்புகள் கொள்வோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலச் செயலர் முழுமையான அரசுப்பணியில் இருந்தாலும், வாரம் தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற் சங்க நிகழ்சிகளுக்கு சென்றாலும் , மண்டலம் தோறும் இரு மாதங்களுக்கு உண்டான பேட்டிகள் , நான்கு மாதப் பேட்டிகள் , RJCM மற்றும், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய , சம்மேளன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியிருந்தாலும், அனைத்து சிரமங்களுக்கு இடையேயும், அரசுப் பணிகளுக்கு இடையேயும், இனி எல்லா வித தொடர்புகள் மூலமும் சங்கப் பணி தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.