அன்புத் தோழர்களே !
ஏப்ரல் 1 ந் தேதி CBS இல் ‘NO TRANSACTION DAY’ யாக அறிவித்திருப்பதாலும், ஏப்ரல் 2 ந் தேதி ஞாயிற்றுக் கிழமையாதலாலும், ஏப்ரல் 3 ந் தேதி அன்றைக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை அஞ்சல் சேமிப்பு வங்கி அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தவேண்டும் என்று DIRECTOR (CBS) மின்னஞ்சல் வழி உத்திரவிட்டு அது CEPT மூலம் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து, கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் ஊதியம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றை ஏப்ரல் 1 ந் தேதி பணப் பட்டுவாடாவாக செய்திட நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய CPMG அவர்களுக்கு கடிதம் நேற்றைய தினம் அளித்துள்ளோம். அதன் நகல் ஏற்கனவே WHATSAPP மற்றும் முகநூலில் வெளியிடப்பட்டுள்ளது.
நமது இந்தக் கோரிக்கை மீது உடன் மேல் நடவடிக்கை எடுத்திட, SENIOR A.O. அவர்களிடம் நம்முடைய கடிதம் CPMG அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், இந்த பிரச்சினையில் DTE அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் நடவடிக்கை கோரி நம்முடைய மாநிலச் சங்கத்தின் மூலம் நம்முடைய பொதுச் செயலருக்கு கடிதம் அனுப்பி பேசினோம். அதன் மீது இன்று நம்முடைய பொதுச் செயலர் நடவடிக்கை கோரி இலாக்கா முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் நகல் கீழே காண்க.