Monday, February 25, 2019

GREAT SUCCESS TO OUR CIRCLE UNION EFFORTS ON UNEARTHING HUGE NO. OF VACANCIES CAUSED DUE TO IRREGULAR ASSESSMENT OF VACANCIES SINCE THE YEAR 2000


===============================================================
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு 
இறுதியில் கிடைத்த மாபெரும் வெற்றி !!!
===============================================================

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்

எழுத்தரில் சரியான முறையில் ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்கள் பெரும்பான்மையான கோட்டங்களில் கணக்கெடுத்து அறிவிக்கப் படவில்லை என்பதை  நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரு பிரச்னையாக பல போராட்டங்களிலும் பேச்சு வார்த்தை களிலும்,RJCM என்ற உச்ச மட்ட அமைப்பிலும் எடுத்து வந்ததன் விளைவாகநீண்ட போராட்டத்திற்கு பின்னர் இதனை எழுத்தர், தபால்காரர், MTS பகுதிகளில் ஆராய PMG, SR அவர்கள் தலைமையில் நான்கு மண்டலங்களின் DPS களையும் உள்ளடக்கி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது உங்களுக்குத் தெரியும்.

இந்தக் கமிட்டியில் RJCM ன் ஊழியர் தரப்பு செயலர் தோழர். J.R. ஒரு ஊழியர் தரப்பு பிரதிநிதியாக  நியமிக்கப்பட்டதும், இதன்மீது நாம் கமிட்டிக்கு அளித்த அறிக்கையும் உங்களுக்குத் தெரியும்

அந்த கமிட்டியானது நாம் சுட்டிக்காட்டிய 12 க்கு மேற்பட்ட அம்சங்களை முழுமையாக ஏற்று தனது அறிக்கையை கடந்த 31.12.2018ல் CPMG க்கு மேல் நடவடிக்கைக்காக உரிய பரிந்துரையுடன் அனுப்பியது

இதன்மீது அந்தந்த கோட்டத்தில் 2000 ஆவது ஆண்டு முதல் காலிப் பணியிடங்களை மறு ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு CPMG அவர்கள் அனைத்து கோட்டங்களுக்கும் உத்திரவிட்டார்.

ஆனால், வழக்கம்போல பெரும்பான்மையான கோட்டங்களிலிருந்து தவறுதலான கணக்குகளே இரண்டு முறை அனுப்பப்பட்டன.

அவற்றை மீண்டும் சரி செய்திட மண்டல அலுவலகங்களுக்கு Staff Section மற்றும் Estt section O.A. க்கள் வரவழைக்கப்பட்டும், விடுபட்ட காலிப் பணியிடங்கள் சரியாக கணக்கெடுப்பு செய்திட இயலவில்லை.

எனவே மீண்டும் PMG, SR மற்றும் CPMG அவர்களிடம் நாம் பேசியதன் அடிப்படையில் அனைத்து கோட்டங்களில் உள்ள ASP HQ,Staff Clerk, Estt Clerk ஆகியோரை PTC, மதுரைக்கு அனைத்து கோப்புகளுடன் வரவழைத்து கடந்த நான்கு நாட்களாக எப்படி கணக்கீடு செய்திட வேண்டும் என்பதற்கு சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டு ஒவ்வொரு கோப்பும் சரி பார்க்கப்பட்டு, கோட்ட வாரியாக காலியிடங்கள் 2000 ஆவது ஆண்டு முதல் கணக்கெடுக்கப்பட்டு விடுபட்ட காலியிடங்கள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல விடுபட்டதபால்காரர் பணியிடங்களும்MTS பணியிடங்களும் சரிபார்க்கப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளன

இந்த தகவலை கமிட்டியின் ஊழியர் தரப்பு பிரதிநிதி என்ற முறையிலும் RJCM ஊழியர் தரப்பு செயலர் என்ற முறையிலும் நமது முன்னாள் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர்.J.R. அவர்களிடம் கமிட்டியின் தலைவரான PMG, SR அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள். இதன்படி 570 க்கும் மேலான காலியிடங்கள் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதன்மீது நமது கோரிக்கையை ஏற்று  ஒரு Deptl Supplementary exam நடத்திடவும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் இங்கே பதிவு செய்கிறோம்.

இதற்கான முயற்சியை CPMG அவர்கள் மூலம் Dte. level ல் எடுத்திட மீண்டும் கமிட்டி தலைவரிடம் தோழர்.J.R. கோரியுள்ளார்

இதே போன்ற பிரச்னை எல்லா மாநிலங்களிலும் இருந்தபோதும், இப்படி ஒரு நடவடிக்கை இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் எடுக்கப் படவில்லை . நடந்திடவில்லை என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தியாகும்

நம்முடைய கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட CPMG அவர்களுக்கும், இதற்கு முழு முயற்சி எடுத்து Work shop வரை sincere ஆக நடத்தி ஊழியர் பிரச்னை தீர உதவிய PMG, SR அவர்களுக்கும்நம் எல்லா முயற்சிகளுக்கும் முழு மனதுடன் ஒத்துழைத்த , உழைத்திட்ட APMG, Staff,  AD Rectt, C.O. அவர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
______________________________________________________________________
கேடர் சீரமைப்புHSG II பதவிகள் குறித்த நிர்வாகத்தின்  நிலைப்பாடு 
______________________________________________________________________

கேடர் சீரமைப்பில் தகுதி உயர்த்தப்பட்டு, தகுதியான ஊழியர் மூலம் நிரப்பப்படாத HSG II பதவிகளை இலாக்காவின் 5.12.2018 உத்திரவுப்படி தற்காலிகமாக  மீண்டும் தகுதி இறக்கம் செய்து LSG பதவிகளாக காட்டுவதில் மாநில அலுவலகம் சுணக்கம் காட்டுகிறது

ஆனால் இதுகுறித்த நடவடிக்கைகள் சென்னை பெரு நகர மண்டல PMG அவர்களால் எடுக்கப்பட்டு அந்தப் பதவிகள் LSG ஆக அடையாளமிடப்பட்டு கோப்புகள் ஒப்புதலுக்காக மாநில அலுவலகம் அனுப்பப்பட்டுள்ளது

DPS, HQ அவர்கள்தற்காலிக தகுதி இறக்கம் என்பது identification of Post லிருந்து மாறுபட்டது என்றும், எனவே இலாக்காவின்  5.12.2018 உத்தரவை   அந்தந்த மண்டலங்களில் அவர்களே செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும்இதில் மாநில அலுவலகத்தின் பங்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்

இது குறித்து மண்டல அலுவலகங்களின் செயலாக்கத்திற்கு அந்த உத்திரவு அனுப்பப்படும் என்பதே மாநில நிர்வாகத்தின் நிலைப்பாடாக உள்ளது.

மேலும் வேறு மண்டலங்களுக்கு LSG பதவி உயர்வு    போடப்பட்ட 35   ஊழியர்கள் Reallotment கேட்டு மாநில அலுவலகத்திற்கு விண்ணப்பித்தால் அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

எனவே அப்படி வேறு மண்டலம்  போடப்பட்ட ஊழியர்கள் உடன் CPMG அலுவலகத்திற்கு Reallotment கேட்டு விண்ணப்பித்து அதன் நகலை மாநிலச் செயலருக்கு அனுப்ப வேண்டுகிறோம். இது குறித்து ஏற்கனவே நமது மாநிலச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது

LGO தேர்வு முடிவுகள் அநேகமாக நாளை வெளியாகலாம். புதிதாக தேர்வு பெற்று எழுத்தராக உடன் பணியில் இணைய உள்ள அனைத்து தோழர்களையும் தமிழக அஞ்சல் மூன்று சங்கம் வருக வருக என இரு கரம் நீட்டி வரவேற்கிறது

நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடையறா முயற்சியால் காலிப் பணியிடமே இல்லை என்ற நிர்வாகத்தின் நிலை உடைக்கப்பட்டு, இன்று  தேர்வு எழுதிய ஊழியர்களை விட அதிக எண்ணிக்கையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுஉள்ளதால் அநேகமாக தேர்வு எழுதிய அனைவருமே எழுத்தராகும் வாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

இது இத்தனை காலம் ஆட்பற்றாக்குறையால் அவதியுறும் நம் ஊழியர்களுக்கு ஓரளவு சற்று தளர்த்தப்பட்ட சூழலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே இந்த வகையிலும் எழுத்தரில் புதிய  தோழர்களின் வருகை வரவேற்புக்குரியதே

தோழமை வாழ்த்துக்களுடன் ,

A. வீரமணி,
மாநிலச் செயலர்
அஞ்சல் மூன்று
தமிழ் மாநிலம்.