Thursday, November 12, 2020

மதுரை மண்டலத்தின் இரு மாதாந்திர பேட்டி

🚩10 /11 /20 அன்று மதுரை மண்டலத்தின் இரு மாதாந்திர பேட்டி நடைபெற்றது இதில்  மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மண்டல செயலாளர் தோழர் R. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்  கலந்து கொண்டோம்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற பேட்டியில் புதிய PMG,அவர்களும்  DPS அவர்களும் நமது பிரச்சனைகளை மிக கனிவுடன் கேட்டனர்.


 இரு மாதாந்திர பேட்டியில் கீழ்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

 20  BO கொண்ட சிவகங்கை கலெக்டரேட் அலுவலகத்தில் இருந்து  சில BO க்களை அருகிலுள்ள SO க்கு
மாற்றம் செய்ய ஆவண செய்வதாக கூறினார் .

தென்காசி மற்றும் உள்ள கோட்டங்களின் Pending TA bills *advance of TA விரைவில் தீர்ப்பதாக கூறினார்

 கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள தென்காசி  ஆயக்குடி  SO.  க்கு Deputaion  செல்பவர்களுக்கு TA வழங்காத பிரச்சனை தீர்க்கப்பட்டது .

திண்டுக்கல் கோட்டத்தில் யுபிஎஸ் பேட்டரி கம்ப்யூட்டர் போன்றவற்றின் பிரச்சனைகளை படிப்படியாக தீர்வு கண்டுவருவதாக கூறினார். 

திண்டுக்கல் கோட்டத்தில் நீண்ட நாட்களாக DPC member  போடாததால் MACP, மற்றும் கன்பர்மேஷன் வழங்கப்படவில்லை. என்றோம் உடனடியாக அதற்கு தீர்வு காணப்பட்டு 19 .11. 20 கன்பர்மேஷன் டிபிசி 26 .11. 20 MACP  DPC நடைபெற உள்ளதாக தெரிவித்தார் .


 ராமநாதபுரம் கோட்டத்தில் தபால்காரர் தோழர்கள் அஞ்சல் எழுத்தராக பதவி உயர்வு பெற்றவர்களின் Induction training period சேர்க்கப்படாதால் DCCS. Seniority பிரச்சனை உள்ளதாகவும், அந்த கோட்டத்தில் மட்டுமல்லாமல் அதே போல் உள்ள மற்ற கோட்டத்திலும் உள்ள பிரச்சனையை சரிசெய்ய AD staff அவர்களுக்கு direction கொடுக்கப்பட்டது

 மதுரை கோட்டத்தில் உள்ள அக்கவுண்ட்ஸ் லைன் LSG  காலியிடங்கள்  Home division   உள்ளவர்களின் நலன் பாதிக்கப்படாமல், மற்ற கோட்டத்திற்கு உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கடிதம் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

  மேலும் கோவிட்19 போது தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து அலுவலகம் வர முடியாதவர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றோம் ஓய்வு பெறும் தோழர்கள்  பாதிக்கிறார்கள் என்றோம் பணி ஓய்வு க்கு நெருங்கக்கூடியவர்கள் 300 நாள் லீவு இல்லாமல் இருந்தால் அவர்கள் PMG க்கு அப்பீல் செய்தால் 20 நாட்கள் வரை special CL வழங்குவதாக கூறியது மிகவும் இனிப்பான செய்தி.

கன்னியாகுமரி கோட்டத்தில் வெட்டூர்ணிமடம் அலுவலகத்தில் உள்ள குரூப் டி பதவி எடுக்கப்பட்டதால் அங்கு பணி புரியும் ஜிடிஎஸ் தோழருக்கு அதிக பணிச்சுமை உள்ளது சுட்டி இன்னொரு ஜிடிஎஸ்  கொடுக்கப்பட வேண்டும் என்றோம்  அதற்கு உடனடியாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றனர்

ராமநாதபுரம் கோட்டத்தில் CEA bill 2017 18 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படாது உள்ளதை சுட்டி காட்டினோம் உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார்


 அதன் பின்பு மதுரை கோட்ட தோழர் கனகராஜ் MACP பிரச்சனை, திருநெல்வேலி கோட்ட பிரச்சனைகள் போன்றவைகள் ADS,senior AO ஆகியோரிடம்  விவாதிக்கப்பட்டது.


அந்தக் கூட்டத்தில் தபால்காரர் தோழர்களின் மொபைல் வேலை செய்யவில்லை என்ற பிரச்சினை எழுப்பப்பட்டது ஒரு தொலைபேசியின் உடைய கழிவு சதவிகிதம் நான்கு மாதத்திற்கு 10 சதம் அப்படி என்றால் மூன்று வருடம் நான்கு மாதத்திற்குள் அதன் ஆயுட்காலம் நிறைவு பெருவதாக கூறப்படுகிறது இயக்குனரகத்தின் உத்தரவு அதனடிப்படையில் புதிய தொலைபேசி மாற்றி தருவதாக கூறப்பட்டது

 மேலும் திருநெல்வேலி கோட்ட தோழியர் பாப்பா அவர்களின் இடம் மாறுதல் பாளையங்கோட்டை அலுவலகத்தின் ஜென்செட் பிரச்சனை ஆண் ஊழியர்களின் புதிய கழிவறை அமைத்தல் இன்னும் பல பிரச்சனைகள் ராமநாதபுரம் கோட்ட பிரச்சனைகள் சிவகங்கை கோட்டத்தின் உடைய பிரச்சனை காரைக்குடி கோட்டத்தில் உள்ள ஆள் பற்றாக்குறை பிரச்சனை திண்டுக்கல் கோட்டத்தின் ரோடு மைலேஜ் அலவன்ஸ் மற்றும் கொடைக்கானல் அலுவலகத்தில் அவுட் ஆப் அக்கவுண்டில் உள்ள நீண்ட நாள் பிரச்சனைபல்வேறு பிரச்சினைகள் தேனி கோட்டத்தின் உடைய பிரச்சனை இன்னும் பல பிரச்சனைகள் கூட்டத்திற்கு பின்பு கடிதம் கொடுத்து விவாதிக்கப்பட்டது உடன் நெல்லை கோட்டச் செயலர் தோழர்  ஜேக்கப்ராஜ் மதுரை கோட்ட செயலர் தோழர் நாராயணன் தேனி கோட்ட முன்னாள் செயலர் தோழர் செல்லதுரை ராமநாதபுரம் கோட்டச் செயலர் தோழர் சூரிய ராம்குமார் மற்றும் நெல்லை கோட்டத்தின் தலைவர் தோழர்அழகுமுத்து சுப்ரீம் கவுன்சிலர் தோழர் வண்ணமுத்து நிதிச் செயலாளர் தோழர் பிரபாகரன் தேனி கோட்டத்தின் முன்னணி தோழர் மீனாட்சி சுந்தரம் மதுரை கோட்டத்தின் முன்னணி தோழர் ஷேக் தாவுத் மற்றும் பல தோழர்கள் உடன் இருந்தனர் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண PMG DPS ADs. SrAO. ஆகியோர் முற்பட்டார்கள்

 அதேபோல் ஸ்ரீரங்கம் கோட்ட முன்னாள் செயலர் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களும் DPS அவர்களை சந்தித்து அவர்கள் கோட்ட பிரச்சனையும் இங்கே விதிக்கப்பட்டது.

  விருதாச்சலம் கோட்டத்தின் APAR பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது

A.வீரமணி 
மாநிலச் செயலர்.               அஞ்சல் மூன்று