Thursday, December 1, 2011

STATE LEVEL TRADE UNION STUDY CAMP ON 11 AND 12.12.2011

                     மாநில அளவிலான தொழிற் சங்கப் பயிற்சி  முகாம் 

                     நாள் :  11.12.2011   ஞாயிறு  மற்றும் 12.12.2011  திங்கள் 

                     இடம்: வசந்த மஹால் திருமண மண்டபம் ,
                                   எண்: 62 , திருமஞ்சன வீதி , சுவாமிமலை  612 302
                                  கும்பகோணம் .

                    நிகழ்ச்சி துவக்கம்  : 11.12.2011 காலை சரியாக  10.00  மணி .

 காலை சரியாக 09.00  மணிக்கே CREDENTIAL பெறப்படும்.

நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் . M..கிருஷ்ணன் அவர்களும்
நமது சம்மேளன முன்னாள் மா பொதுச் செயலர்  தோழர்.  K.R. அவர்களும்
நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். KVS   அவர்களும்  மற்றும்
பல துறை சார்ந்த வல்லுனர்களும்  கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.

இரண்டு நாட்களும்  தங்குமிடம் , மூன்று  வேளை உணவு,  பயிற்சிக்கான
COURSE MATERIALS உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் .

  DELEGATE FEE    :   RS. 500/- Rs.Five hundred only  FOR TWO DAYS.

COMPOSITION OF DELEGATES  FOR THE STUDY CAMP  WILL BE  DECIDED
AS FOLLOWS:-
Branches having less than 50                         -                       ONE
Membership              

Branches having more than 50                      -                       TWO
But below 100 Membership

More than 100 Membership                          -                       FOUR

All Circle office bearers & Mahila Committee members are also the delegates for the workshop, All Branch/Divisional Secretaries should attend the workshop positively.

விரிவான விபரங்கள் அடங்கிய நிகழ்ச்சி  நிரல் - அழைப்பிதழ் 
அஞ்சலில் அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் 
தமிழகத்தைச் சேர்ந்த சம்மேளன/அகில இந்திய / மாநிலச் சங்க
நிர்வாகிகளுக்கும்  முன்னோடிகளுக்கும்  அனுப்பப்பட்டுள்ளது.  

குறிப்பு :- 
1.கடந்த 25.09.2011  அன்று  தேனாம்பேட்டையில் நடைபெற்ற
 கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவாகத்தான் 
இந்த STUDY CAMP நடத்தப் படுகிறது. 
2 .ஏற்கனவே இது குறித்து தமிழக அஞ்சல் முழக்கம் அக்டோபர் 2011
இதழில் விரிவான செய்தியும் வெளியிட்டுள்ளோம். 
3 . எனவே அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் /முன்னோடிகளும் 
மாநிலச் சங்க நிர்வாகிகளும் தவறாமல்  கலந்து கொள்ள 
இதையே முன் அழைப்பாக  ஏற்று  உடன் பயண ஏற்பாட்டை 
செய்திட அன்போடு வேண்டுகிறோம். 
4 . யாரேனும் இந்த வலைத்தளத்தை பார்க்க வில்லை என்றோ
அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்றோ குறை சொல்லாத 
வண்ணம் செய்தி தெரிந்த ஒவ்வொருவரும் இந்த செய்தியை
 அந்தந்த  மண்டல/ கோட்ட/ கிளை/இதர பொறுப்பாளர்களிடம்
தெரிவிக்க வேண்டுகிறோம். 
5. நிகழ்ச்சிகள்  கண்டிப்பாக அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில் 
நடத்தப் படும். எனவே கால தாமதத்தினை கண்டிப்பாக தவிர்க்கவும்.
6 . ரயில் / பேருந்து பயண மற்றும் தங்குமிட விபரங்களுக்கு 
தோழர். A.மனோகரன் , மத்திய மண்டலச் செயலர் 94439 88308
தோழர். R. பெருமாள் , குடந்தை கோட்டச் செயலர் 94435 25485
ஆகியோரை அணுகிட அன்புடன் வேண்டுகிறோம். 
நிகழ்ச்சி சிறக்க உங்கள் அனைவரின் அன்பான ஒத்துழைப்பையும் 
பணிவுடன் வேண்டுகிறோம். 
இது உங்கள் சங்கம் ! இது உங்கள்  நிகழ்ச்சி ! 

முன்னேற்றப் பாதையில் நாம் ஒன்றாக எடுத்து 
வைக்கும் அடி ...  நம் அனைவரின் வாழ்வுக்கும் நல்ல வழி !

தோழமையுடன்
மாநிலச் சங்கத்திற்காக J. இராமமூர்த்தி , மாநிலச் செயலர் .