Our deep condolences !
~~~~~~~~~~~~~~~~
நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் உதவி நிதிச் செயலரும், NFPE இயக்க முன்னோடியும், தன்னுடைய உரத்த உணர்ச்சி மிக்க கோஷங்களால் இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவருமான இனிய பண்பாளர், காஞ்சி கோட்டத்தைச் சேர்ந்த
~~~~~~~~~~~~~~~~~~
அருமைத்தோழர்.
N. கோபால்,
LSG SPM, Kanchipuram Cutchery S.O.
~~~~~~~~~~~~~~~~~~
அவர்கள் இன்று மாலை, மூச்சுத் திணறல் காரணமாக காஞ்சிபுரத்திலிருத்து செங்கல்பட்டு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட செய்தி, காஞ்சிபுரம் தோழர்கள் மூலம் இப்போது
(7.30 PM) நமக்குக் கிடைத்தது.
அவரது இந்த திடீர் மறைவு நமது NFPE பேரியக்கத்திற்கு பேரிழப்பையும்
மீளாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது .
அவரது பிரிவால்
வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உற்ற தோழர்களுக்கும் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் சார்பில்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது ஆன்மா
அமைதி பெற வேண்டுகிறோம்.
ஆழ்ந்த இரங்கலுடன் ,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று சங்கம்,
தமிழ் மாநிலம்.