Friday, July 24, 2020

Meeting with PMG CCR on 24.07.2020

அனைவருக்கும் வணக்கம்.

இன்று 24/7/20. PMG  CCR அவர்களை மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மாநில உதவித் தலைவர் தோழர் D.ரவி மாநில உதவி நிதி செயலர் சென்னை கிளை செயலர் தோழர்  K.முரளி ஆகியோர் சந்தித்தோம் .சென்னை மண்டலத்தில் ரோஸ்டர் முறை நீக்கியதை பற்றியும் இதனால் ஒவ்வொரு ஊழியரும் பஸ் வசதி மற்றும் ரயில் வசதி இல்லாத காரணத்தினால் அலுவலகம் வருவதற்கு சிரமப்படுவதை பற்றியும் , சில
ஊழியர்கள் தினமும் அலுவலகம் வருவதற்கு Rs. 300 ல் இருந்து 500 வரை  போக்குவரத்திற்கு  செலவிடுவதையும் தெரிவித்தோம். அதனால் போக்குவரத்து ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் மீண்டும் ரோஸ்டர் முறையை அமுல்படுத்த வேண்டும் என்றும் விரிவாக எடுத்துக் கூறினோம்.

 பாண்டிச்சேரி. ஜி பி ஓ அம்பத்தூர். பிரச்சனைகள் பற்றியும் பேசினோம்.
 பிஎம்ஜி அவர்கள் தபால்கள் அதிகமாக தேங்கி இருப்பதாகவும் கூறினார்கள். நாமும் பல அலுவலகங்கள் கடைகள் திறக்கப்படாமல் இருப்பதால் அந்தக் கடிதங்கள் மட்டும் இருக்கலாம் மற்ற கடிதங்கள் அனைத்தும் பட்டுவாடா ஆவதாக கூறினோம்.

குரோனா தொற்றால்  அதிகப்படியான ஊழியர்கள் பாதிக்கப்படுவதும் அதனால் உயிர் இழந்து வருவதையும் நாளுக்கு நாள் குரோனா தொற்று அதிகரித்து வருவதையும் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தையும் எடுத்து விளக்கமாக கூறினோம் PMG CCR அவர்களும் இது சம்மந்தமான ஒரு உத்தரவை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். AD Staff அவர்களும் குரோனவால் இறந்து போனவர்களின் பென்ஷன் பிராசஸ் மற்றும் PLI வாரிசுதாரர் வேலை இதற்குண்டான நடவடிக்கையில் துரிதமாக  ஈடுபட்டு வருவதாகவும் தாமதம் இருந்தால் தெரிவிக்கும்படியும் கூறினார்.

A.வீரமணி 
மாநில செயலர்.               
அஞ்சல் மூன்று