27.12.2011 அன்று இலாக்காவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியுற்றதன் காரணமாக வேலை நிறுத்தத்திற்கான போராட்டங்களை
தீவிரப் படுத்த மத்திய JCA முடிவெடுத்து போராட்ட திட்டங்களை அறிவித்துள்ளது. அதனை அமல்படுத்தும் விதமாக தமிழக JCA வில்
கீழ்க்கண்ட போராட்டத் திட்டங்களை செயல் படுத்திட முடிவெடுக்கப் பட்டுள்ளது.
மாபெரும் தர்ணா
நாள் : 10.01.2012 நேரம் : காலை 09.00 முதல்
மாலை 05.00 வரை.
இடம் : CHIEF PMG அலுவலகம் முன்பாக .
சென்னை மாநகரத்தில் உள்ள கோட்ட/ கிளைகள் முழுமையாக இந்த
தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு நமது வலிமையை இலாக்காவுக்கும்
அரசுக்கும் தெரிவித்திட வேண்டுகிறோம்.
இதர பகுதிகளில் அந்தந்த கோட்ட/கிளைகளில் முழு நாள் தர்ணா போராட்டம்
நடத்திட வேண்டுகிறோம்.
இதன் தொடர்ச்சியாக மண்டல தலைமையகத்தில் JCA வில் அங்கம்
வகிக்கும் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்து கொள்ளும் வேலை
நிறுத்த சிறப்பு விளக்க கூட்டங்கள் கீழ்க் கண்ட தேதிகளில் நடைபெற
உள்ளன. இதனை அந்தந்த மண்டல தலைமையகத்தில் உள்ள கோட்டச்
செயலர்களும் மண்டல / மாநில நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அந்தந்த மண்டலத்தில் உள்ள கோட்ட /கிளைகளில் இருந்து தோழர்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு கூட்டங்களை சிறக்கச் செய்ய வேண்டுகிறோம். போஸ்டர் , சுற்றறிக்கைகள் தனியே அனுப்பப் பட்டுள்ளன . இது தவிர அந்தந்த கோட்டங்களில் JCA வின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கும் அந்தந்த கோட்ட/கிளைச் செயலர்கள் ஏற்பாடு செய்திட அன்புடன் வேண்டுகிறோம். இதற்கும் தனியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலச் செயலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டங்கள்.'
நாள் : 11.01.2012 - திருச்சி தலைமை அஞ்சலகம் முன்பாக.
12.01.2012 - மதுரை தலை அஞ்சலகம் முன்பாக.
13.01.2012 - கோவை தலைமை அஞ்சலகம் முன்பாக.
16.01.2012 அன்று அனைத்து கோட்ட/ கிளை/மண்டல தலைமையகங்களிலும்
கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகு வர்த்தி ஏந்தி பேரணிகள்/ ஊர்வலங்கள்/ ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம்.
சுற்றறிக்கை கிடைக்கவில்லை என்றோ காலதாமதமாகக் கிடைத்தது
என்றோ JCA போராட்ட திட்டங்களை நடத்திடாமல் இருக்க வேண்டாம்
என்று அன்புடன் வேண்டுகிறோம் . இந்த வலைத்தளத்தை பார்த்த
தோழமை உள்ளங்கள் பார்க்காத தோழர்களுக்கும் இந்த செய்திகளை
தெரிவித்திட அன்புடன் வேண்டுகிறோம்.
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துகளுடன்
J.R. , மாநிலச் செயலர்.
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
போராட்ட வாழ்த்துகளுடன்
J.R. , மாநிலச் செயலர்.