Sunday, January 29, 2012

REMARKABLE SRIRANGAM DIVISIONAL CONFERENCE!



திருவரங்கம் அஞ்சல் மூன்றின் 8 ஆவது ஈராண்டு கோட்ட மாநாடு கடந்த 26.01.2012  குடியரசு தினத்தன்று  திருவரங்கம் அம்மா மண்டபம்  யோகா கல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

மாநாட்டில் நமது அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் அறிவு ஜீவி . தோழர். KVS,  மாநிலச் செயலர் தோழர். J.R., மத்திய மண்டலச்  செயலர் தோழர். A. மனோகரன் , மாநில அமைப்புச் செயலர் தோழர். புதுகை R. குமார் . P4  கோட்டச் செயலர் V.சாரங்கன், GDS கோட்டச் செயலர்  தோழர் R. விஷ்ணு  தேவன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

குறித்த நேரத்தில் சரியாக 09.00  மணிக்கே  மாநாடு  துவங்கியதும் , துவக்க நேரத்திலேயே 40 க்கும் மேற்பட்ட மகளிர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கொடியேற்று  நிகழ்ச்சியிலேயே  கலந்து கொண்டதும் மாநாட்டின் சிறப்பு ஆகும். சரியாக 11.00 மணிக்குள் புதிய நிர்வாகிகள் தேர்வு முடிவுற்றதும் பொதுச் செயலரை பயன்படுத்திக் கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. 

காலை 11.00 மணி  முதல் சரியாக நண் பகல்  01.00  மணி வரை நமது பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் அவருக்கே உரிய பாணியில் இன்றைய சூழல் தொழிற் சங்க நடவடிக்கைகள், வேலை நிறுத்த ஒப்பந்தம் , அதன் மீது நாம் பெற்றுவரும் உத்திரவுகள்  உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் அவையோர் 
தெளிவாக அறியும் வண்ணம் பொறுமையாக எடுத்துரைத்தார் . 

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு கேள்வி நேரம் உண்டு என்று நாம் அறிவித்தோம் . எனவே  சரியாக 02.00  மணிக்கே அவை  கூடியது . அந்த நேரத்தில் சரியாக 86 தோழியர் உள்ளிட்ட 200 க்கும் குறையாத ஊழியர் கூட்டம் 
குண்டூசி விழும் சத்தம் கூடக் கேட்குமளவுக்கு அவையில் அமைதியாக கூடியிருந்தது வியப்பான நிகழ்வாகும். 

குறிப்பாக மகளிர் பகுதியில் இருந்து பல்வேறுதரப்பட்ட கேள்விக்கணைகள் பாய நமது பொதுச் செயலர் சிரித்த முகத்துடன் அசராமல் பதில் கூறிக்கொண்டே இருந்தார் . கிட்டத்தட்ட  256 கேள்விகள் கேட்கப்பட்டன.  02.00 மணி முதல் மாலை  05.50  மணி வரை அருவியென கொட்டிய கேள்விகளுக்கு, மடை திறந்த வெள்ளமென  பொதுச் செயலரின் பதில்கள். அவையோர் இதுவரை நமது அஞ்சல் தொழிற்  சங்க அரங்கில் இப்படி ஒரு நிகழ்வைக் கண்டதுமில்லை , கேட்டதுமில்லை  எனக் கூறி மகிழ்ந்தனர். அதைவிட காலை 09.00  முதல்  மாலை 06.00 மணி வரை  முழு ஈடுபாட்டுடன் 80 க்கும் மேற்பட்ட மகளிர் ஒரு கோட்டச் சங்க நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட கேள்விகளை அவர்களே கேட்டது தொழிற் சங்க வரலாற்றில் ஒரு  திருப்பு முனை. இறுதியாக ஒரு பெண் ஏன் கோட்டச் செயலராக தேர்ந்தெடுக்கப்படக் கூடாது? என்று ஒட்டு மொத்தமாக கேள்விக் கணை பாய்ந்தது.நாம் எதிர்பார்த்த விழிப்புணர்ச்சி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த நிகழ்வு  நமக்கு சுட்டிக் காட்டியது .    

ஊழியர் மத்தியில் இத்தனை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வைத்திருக்கும் கோட்டச் சங்கத்திற்கு, குறிப்பாக முன்னாள் கோட்டச் செயலர் தோழர் 
C.சசி குமார் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.   

போட்டியின்றி ஒரு மனதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்:-

கோட்டத் தலைவர் :-  தோழர். M. திருசங்கு , SPM, PBLR COLLECTORATE.
கோட்டச் செயலர் :-     தோழர் . T.  தமிழ் செல்வன், M.E., ஸ்ரீரங்கம் H.O.
கோட்ட நிதிச் செயலர்: தோழர்.V.  ஸ்ரீதரன் , TRR, ஸ்ரீரங்கம்  HO.  
செயல் தலைவர் : தோழர் . C.  சசிகுமார்,  DSM, O/O SPOS., SRIRANGAM.

 போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட  மகிளா கமிட்டி நிர்வாகிகள் :-
கோட்ட தலைவர் :- தோழியர் .  R.  கங்கா , O.A., D.O.
கன்வீனர் :-  தோழியர் . R.  ரஜினி , P.A., SRIRANGAM HO.
உறுப்பினர்கள்:- தோழியர். மீனாட்சி  ராணி, P.A., PERAMBALUR HO.
                                        ''              விஜயலட்சுமி , SPM, PULIVALAM S.O.
                                        ''              காயத்திரி,  P.A., MUSIRI SO.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.