அன்புத் தோழா ! அலைகடலென படை திரட்டி வா !
பார் போற்றும் தலைவனுக்குப் பாராட்டு விழா !
தலைநகரில் விழா ! சென்னையிலே விழா !
படை பெருத்ததோ ! பார் சிறுத்ததோ ! எனப்
பகை நடுங்கவே வா ! படை கொண்டுவா !
கொடி கொண்டுவா ! பதாகையுடன் நீ வா !
தலைவன் விழா ! தலை மேல் கொண்டு நீ வா !
ஆம். ஆகத்து திங்கள் ஐய்ந்தினிலே
சென்னையிலே பெரு விழா !
அலமேலுமங்கா திருமண மண்டபத்திலே
அலங்காரத் திருவிழா !
அண்ணனின் கோட்டைக் கொடியினிலே
அலங்கார புட்பமென நீ வா !
வாழும் வரலாற்றை வாழ்த்திடவே
நீ வா ! நீ வருவாய் ! எனக்குத் தெரியும் !
உன் வருவாய் ! என் மண நாளென
நான் காத்திருக்கிறேன் நீ வா !
மேள வாத்தியங்கள் முழங்கட்டும் !
வாண வேடிக்கைகள் நடக்கட்டும் !
வழியிலே மலர் தூவட்டும் !
வாசலெங்கும் வண்ண மலர் பெருகட்டும் !
வீதிதோறும் தோரணக் கொடிகள் தொங்கட்டும் !
வீர வாத்தியங்கள் இன்று முழங்கட்டும் !
இந்த நாள் ! இனிய நாள் ! என்றுமே
நம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் நன்னாள் !
வாழும் வரலாறே !
வரலாற்றுப் பெட்டகமே !
பெட்டகத்தின் பொக்கிஷமே !
பொக்கிஷத்தின் பூம் பொலிவே !
பூம் பொலிவின் தாரகையே !
தாரகையின் தண்ணொளியே !
தண்ணொளியின் குளிர் நிலவே !
குளிர் நிலவின் தரு நிழலே !
வாழ்க நீ எம்மான் ! இவ்வையத்துள்
எந்நாளும் ! நீங்கா(து) உன் புகழ் தான் !
வாழ்த்துகிறேன் ஏழையென நான் தான் !
வார்த்தையில்லை எனக்கு இனிதான் !
உன் அன்பின் அடி நான் தான் !
ஐயனே உன் தொண்டரென நான் தான் !
ஐயனே உன் தொண்டரென நான் தான் !
அன்பிலே என்றும் அருமைத் தம்பியென
உன் அன்பு "ஜேயார்" நான் தானே !