Friday, December 13, 2013

அரசு ஊழியர்களாக அங்கீகரித்திடுக! : அஞ்சல் ஊழியர்கள் பேரணி!

கிராமங்களில் பணி யாற்றும் பகுதிநேர அஞ்சல் ஊழியர்கள் மத்திய அரசு தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி மாபெரும் பேரணியை தலைநகரில் புதன்கிழமை நடத்தினார்கள். நாட்டின் கிராமங்களில் பணியாற்றும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர அஞ்சல் ஊழியர்கள் இது வரை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. தங்க ளை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து காலமுறை ஊதியத் துடன் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளைத் தங்களுக்கு அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வீதியில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடத் தினார்கள். தமிழகத்திலிருந்து மிக அதிகமான தோழர்கள் அஞ்சல் மூன்றின் மாநில செயலர் J R மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர் மாநில செயலர் தனராஜ் ஆகியோரின் தலைமையில் கலந்து கொண்டனர்.


பேரணி, ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே. பத்மநாபன், மா பொது செயலர் M .கிருஷ்ணன், முன்னால்  மா பொது செயலர் K.ராகவேந்திரன் மற்றும் முன்னால்  பொது செயலர் K.V.ஸ்ரீதரன் அகியோர் உரையாற்றினர். அப்போது அவர்கள்  கூறியதாவது:நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இன்னமும் அரசாங்கத்தால் அரசு ஊழியர்களாக அங்கீ கரிக்கப்படாததை எதிர்த்து இங்கே நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் முழு ஆதரவு தெரிவித்திருக்கிறது. சிஐடியுவும் முழுமையாக ஆதரிக்கிறது. கடந்த காலங்களில் அஞ்சல் ஊழியர்கள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்திய வரலாறு உண்டு. பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

ஆயினும் ஆட்சியாளர்கள் இப்போராட்டங்கள் குறித்து சற்றும் கவலைப்படாமல் அலட்சியம் செய்து வரு கிறார்கள். மத்தியத் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு மகத்தான போராட்டங்களை நடத்தும்போதுகூட பிரதமரோ மத்திய அரசோ முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாராக இல்லை. இத்தகைய மக்கள் விரோத - ஊழியர் விரோத நியாய மான கோரிக்கைகளை வென் றெடுப்பதற்காக நடக்கும் அரசுக்கு எதிராக, உங்கள் போராட்டத்திற்கு அனைத்து உழைப்பாளி மக்களும் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள்.


S .வீரன் 
மாநில செயலர் (பொறுப்பு)