மாபெரும் வெற்றி ! JCM( NATIONAL COUNCIL) இல் நம் தலைவர்கள் !
1993 இல் புதிய தொழிற்சங்க அங்கீகார விதி ஏற்படுத்தப் பட்ட பின்னர் பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும், தொடர்ந்த நீதி மன்ற வழக்குகளின் காரணமாகவும் , 1995 இல் GDS ஊழியர்களுக்கு புதிய தொழிற்சங்க அங்கீகார விதி ஏற்படுத்தப் பட்டதன் காரணமாகவும் , துறை ரீதியாக GDS சங்கத்தை சம்மேளனத்துக்குள் சேர்த்து அங்கீகாரம் வழங்கிட மத்திய அரசு மறுத்ததை நீங்கள் அறிவீர்கள்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு 2007 ஆவது ஆண்டில் வந்த பிறகு , இறுதியில் சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டுமானால் GDS சங்கத்தை சேர்த்திடாமல் விண்ணப்பித்தால் , சம்மேளனத்திற்கு அங்கீகாரம் வழங்கப் படும் என்று அரசு அறிவித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும் . இதே நிலைதான் FNPO சம்மேளனத்திற்கும் ஏற்பட்டது.
எனவே வேறு வழியில்லாமல் , நம்முடைய உச்ச மட்ட அமைப்பான FEDERAL COUNCIL கூட்டத்தில் , நம்முடைய சம்மேளனத்தின் உள் அமைப்பில் , ஏற்கனவே இருந்ததுபோல GDS சங்கத்தை உறுப்பினராக வைத்திடலாம் என்றும் , அவர்களுக்கு சங்க ரீதியான அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளதால் , இலாக்காவுக்கு சம்மேளன அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது தனியே விண்ணப்பிக்கலாம் என்றும் முடிவெடுக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும். அதன் பின் அவ்வாறே விண்ணப்பித்து பின்னர் சம்மேளன அங்கீகாரம் பெற்றோம். இதுவும் உங்கள் நினைவில் இருக்கும் .
அதன் பின்னரே JCM (DEPARTMENTAL COUNCIL) , RJCM ஆகியவை புதுப்பிக்கப் பட்டன என்பதும் உங்களுக்கு நினைவிருக்கும். இந்த சிக்கல்களின் காரணமாக மத்திய அரசுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த உரிமை உள்ள அமைப்பான NATIONAL COUNCIL (JCM) இல் நமது சம்மேளனத்திலிருந்து பிரதிநிதிகள் எவரும் இடம் பெறமுடியாத சூழ் நிலை கடந்த 20 ஆண்டு காலமாக இருந்தது உங்களுக்குப் புரியும்.
தற்போது அந்த நீண்ட நெடிய தேக்க நிலை உடைக்கப் பட்டு
நம் அஞ்சல் பகுதியில் இருந்து
NFPE இன் பிரதிநிதியாக தோழர் M. கிருஷ்ணன் அவர்களும்
மற்றும் தோழர். I.S. தபாஸ் அவர்களும் ,
FNPO விலிருந்து தோழர்
D. தியாகராஜன் அவர்களும்
உறுப்பினர்களாக இணைக்கப் பட்டிருக்கிறார்கள் . ஏழாவது ஊதியக் குழு குறித்து பேச்சு வார்த்தை நடை பெற உள்ள சூழலில் நமது அஞ்சல் பகுதிப் பிரதிநிதிகள் தற்போது
JCM(NATIONALCOUNCIL)
இல் இடம் பெற்றுள்ளதும் , அதன் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதும், அதி TERMS OF REFERENCE ஏற்கனவே கொடுக்கப் பட்டுள்ளதும் , அதில் GDS ஊழியர் கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளதும்- எல்லாம் நமக்கு சாதகமான சூழ்நிலையே !
நிச்சயம் நமது தலைவர்கள் நம் கோரிக்கைகளில் வெற்றி பெறுவார்கள் ! அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! பார்க்க DOPT உத்திரவு நகலை ..........