Wednesday, February 5, 2014

PRESS MEET CONDUCTED AT CHENNAI BY TN CONFEDERATION ON 05.02.2014

சென்னையில் பத்திரிக்கையாளர்களுடன்   
தமிழக மகா சம்மேளன நிர்வாகிகள் சந்திப்பு 

இன்று (05.02.2014) மதியம் சென்னை வருமானவரி ஊழியர் சங்க (ITEF) அலுவலக வளாகத்தில் தமிழக மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளன நிர்வாகிகள்  எதிர் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ள  48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். 

 இதில்  தமிழகத்தின் மகா சம்மேளனத்  தலைவர் தோழர். J . ராமமூர்த்தி (NFPE) , மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். M .துரைபாண்டியன்(AG) ,   மாநிலப் பொருளாளர் தோழர். S . சுந்தரமூர்த்தி (ITEF ),  மாநிலத் துணைத் தலைவர் தோழர். S . சாம்ராஜ் (சாஸ்திரி பவன் ) மாநில அமைப்புச் செயலர் தோழர்.A . பாலசுந்தரம் (ராஜாஜி பவன் ),  ITEF  மாநிலப் பொதுச் செயலர் தோழர். M .S .  வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

பத்திரிக்கையாளர் தரப்பில் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ் , தீக்கதிர் மற்றும் ELECTRONIC  MEDIA  தரப்பில் DD ,  சன், ஜெயா, கலைஞர்,கேப்டன், தந்தி, மக்கள், பாலிமர் ,வின், வசந்த், லோட்டஸ் ,மூன்  உள்ளிட்ட 21 செய்தியாளர்கள் கலந்துகொண்டனர். 

பொதுச் செயலாளர் தோழர்.M . துரைபாண்டியன்  அவர்கள் செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.  மத்திய அரசு  அதன் ஊழியர்களுக்கு  எந்தவித பயனுள்ள அறிவிப்பையும் செய்திடவில்லை  என்றும்  முந்தைய ஊதியக் குழுக்கள் போல , முன்னதாக இடைக்கால நிவாரணம் , பஞ்சப்படி  அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல்  போன்றவற்றை செய்திடாமல்  வெறும் ஊதியக் குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து  கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.   

தபால் துறையில் பணிபுரியும் 2.75 லட்சம் GDS   ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணித்தன்மை  குறித்து ஊதியக் குழுவே  பரிசீலித்திட வேண்டும் என்ற நமது கோரிக்கை மீது கூட கவனம் செலுத்தவில்லை.  ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் எவரும்  கலந்து ஆலோசிக்கப் படவில்லை .  கடந்த 25.10.2013 அன்றே ஊழியர் தரப்பில் TERMS  OF  REFERENCE   அரசுக்கு அளித்திருந்தும்  இது குறித்து  எந்தவித அறிவிப்பும்  மத்திய அரசு வெளியிடவில்லை  என்பதை சுட்டிக் காட்டினார். எனவே , மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலக் கோரிக்கை களை  வலியுறுத்தி  மத்திய அரசு  இதன் மீதி சாதகமான அறிவிப்பை செய்திட வைக்க  ஊழியர்களுக்கு வேலை நிறுத்தத்தில் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று  அறிவித்தார். 

ஆகவே நாடுமுழுதும் உள்ள  அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில்  48 மணி நேர வேலை நிறுத்தத்தை  உறுதியாக   நூற்றுக்கு நூறு விழுக்காடு  வெற்றிகரமாக நடத்திட உள்ளனர்  என்பதையும் அறிவித்தார். 

இந்த செய்திகள் தற்போது அனைத்து  தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அனைத்து பகுதி தோழர்களும்  இந்த அறிவிப்பைப் பார்த்து , இதர பகுதி தோழர்களுக்கும் இதனை தெரிவிக்கவும். போராட்ட வீச்சினை  வேகப் படுத்தி  அனைத்து ஊழியர்களையும்  முழுமையாக  நமது அஞ்சல்  மற்றும் RMS - MMS , GDS பகுதிகளில்  கலந்துகொண்டு   இந்த வேலை நிறுத்தத்தை வெற்றியடைய செய்திட வேண்டுகிறோம்.  தற்போது பாராளுமன்ற இறுதி கூட்டத்தொடர் நடந்துகொண்டுள்ளது.இன்றில்லையேல்,அடுத்து    தேர்தல் ஆணையத் தின் அறிவிப்பு வரும் .  CODE  CONDUCT  உள்ளது. அரசு எந்தவித கொள்கை முடிவும் எடுக்க முடியாது என்று கூறுவார்கள்.  'மே' மாதத்திற்கு பிறகு புதிய அரசு வரும் . தற்போதுதான் நாங்கள் வந்திருக்கிறோம்.  இவற்றையெல்லாம் பரிசீலனை செய்திட எங்களுக்கு ஆறு மாதமாவது அவகாசம் கூட வேண்டாமா என்பார்கள் .  

இவற்றையெல்லாம்  சிந்தியுங்கள் தோழர்களே !  
கீழ் மட்டத்தில் உள்ள  ஒவ்வொரு  ஊழியர்களிடமும்  உடனே 
எடுத்துச் செல்லுங்கள்! 

 இன்னும் ஒரு வாரமே   அவகாசம் உள்ளது.  
கோட்ட/ கிளைச் செயலர்கள் விடுப்பெடுத்துக் கொண்டு  
பகுதிகளுக்கு செல்லுங்கள். 

விரைந்து செயலாற்றுங்கள் . வெற்றி ... வெற்றி..  வேலை நிறுத்தம்  மாபெரும் வெற்றி என்ற செய்தி  எங்கும் கேட்க வேண்டும் ! 
உங்களால் முடியும் ! உங்களால் முடியும் ! விரைந்து செயலாற்றுங்கள் !  உங்கள் வெற்றிச் செய்தியை ஆவலுடன் நாங்கள் எதிர்பார்க்கிறோம் !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

 தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் 
தமிழக NFPE  சம்மேளனம் 
தமிழக அஞ்சல் RMS  இணைப்புக் குழு 
தமிழக மத்திய அரசு ஊழியர்  மகா சம்மேளனம் .

பத்திரிகையாளர் சந்திப்பின் புகைப்படங்கள்