தமிழ் மாநில NFPE அஞ்சல் - RMS
இணைப்புக் குழுக் கூட்டம்
நமது NFPE அஞ்சல் - RMS தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கூட்டம் எதிர்வரும் 23.07.2014 அன்று மாலை 06.00 மணியளவில் சென்னை பூங்கா நகர் தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், சென்னை கணக்குப் பிரிவு ( POSTAL ACCOUNTS ) அலுவலகத்திலும் , தென்மண்டலத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள் பழிவாங்கப்பட்டது குறித்தும் , AIPEU GDS NFPE இன் ஐந்து கட்ட போராட்டங்களில் NFPE சம்மேளனத்தின் உறுப்பு சங்கங்களின் பங்கு குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மாநில NFPE உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும், மாநிலத் தலைவர்களும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு முடிவுகள் எடுக்க உதவிடுமாறு வேண்டுகிறோம்.
தோழமையுடன்
J . இராமமூர்த்தி, கன்வீனர்,
NFPE அஞ்சல் - RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம்