Wednesday, August 20, 2014

FEDERAL EXECUTIVE MEETING AND CENTRAL WORKING COMMITTEE MEETING AT ONGOLE

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நமது NFPE  சம்மேளனத்தின் FEDERAL EXECUTIVE  MEETING  எதிர்வரும் 21.08.2014 அன்றும் மற்றும் நமது அகில இந்தியச் சங்கத்தின்  மத்திய  செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 22.08.2014 முதல் 24.08.2014 வரையும்  ஆந்திர மாநிலம் ஓங்கோல் நகரில்  நடைபெற வுள்ளது. 

நான்காம்  நாளான 24.08.2014 அன்று நம்முடைய சம்மேளன மாபொதுச் செயலரும்  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் பொதுச் செயலருமான தோழர். M . கிருஷ்ணன் அவர்களுக்கு , அவர் எதிர் வரும் 31.08.2014 அன்று  அரசுப் பணி  நிறைவு பெற உள்ளதால் ,  பாராட்டு விழாவும்  சிறப்பாக  நடத்திட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும்  இந்த நிகழ்வில் கலந்துகொள்ள ஓங்கோல் செல்கின்ற காரணத்தால்  இந்த நாட்களில்  தலைமையகத்தில் இருக்க இயலாத சூழ்நிலை  உள்ளது . இதனை பொறுத்தருளுமாறு  நம்முடைய  கோட்ட/ கிளைச் செயலர்களை கேட்டுக் கொள்கிறோம். நிகழ்வுகள் சிறக்கவும் தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு  உங்களின்   அன்பான வாழ்த்துதல் களையும் அளிக்குமாறும்  உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.