Wednesday, May 27, 2015

TN CONFEDERATION DEMONSTRATION IN FRONT OF CPMG's OFFICE GRAND SUCCESS ! GM FINANCE TRANSFERRED ! DTE TEAM ORDERED FOR ENQUIRY ! CPMG, TN CALL FOR DISCUSSIONS !

வெற்றி ! வெற்றி !
கணக்குப் பிரிவு ஊழியர்  போராட்டம் 
மாபெரும் வெற்றி !  
பொது மேலாளர்  இடமாற்றம் !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் !  இன்று (27.05.2015) மதியம் CHIEF  PMG அலுவலகம்  முன்பாக ,  அஞ்சல் கணக்கு பிரிவு  ஊழியர்களுக்கு ஆதரவாக அறிவிக்கப் பட்டிருந்த  கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. அவசர நிமித்தம்  வெளியூர் செல்லவேண்டிய காரணத்தால் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்கள்  கலந்து கொள்ள இயலவில்லை . 

தமிழக மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தோழர். J . இராமமூர்த்தி தலைமை வகித்து ,  அஞ்சல் கணக்குப் பிரிவு ஊழியர்கள் படும் அவதி குறித்தும் , அதன்  பொது மேலாளர்   Ms . ஜானகி அனந்த கிருஷ்ணன் அவர்களின் சட்ட விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். மேலும்  தொடர்ந்து  NFPE  சம்மேளனத்தின் மூலமும் , மகா சம்மேளனத்தின் மூலமும் எடுத்து வரும் நடவடிக்கைகள்  குறித்து விளக்கி  பேசினார். அந்த அம்மையார்  நிச்சயம் உடனடி இடமாற்றம் செய்யப் படுவார் என்று  தலைமையிலிருந்து தகவல்கள் வந்துள்ளன என்றும் , இத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்டு போராடும் தோழர் / தோழியர்களின்  முயற்சி நிச்சயம் வெற்றியடையும் என்றும்  கூறினார்.

.பின்னர்  மகா சம்மேளனத்தின்  மாநிலப் பொருளாளரும்  ITEF (வருமான வரித்துறை ) மாநிலத் தலைவருமான தோழர். S . சுந்தரமூர்த்தி , AIPAEA (கணக்குப் பிரிவு ஊழியர் சங்கம் ) அகில இந்திய தலைவரும் மாநிலத் தலைவருமான  தோழர். சந்தோஷ்குமார் , NFPE  இன் உதவிப் பொதுச் செயலர் தோழர் . S . ரகுபதி ,   தமிழக NFPE  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். B . பரந்தாமன் ,  அஞ்சல் நான்கின்  மாநிலச் செயலர் தோழர்  G . கண்ணன் , அஞ்சல் மூன்றின்  அகில இந்திய செயல் தலைவர் தோழர். N .G . ஆகியோர் வாழ்த்திப் பேசினார் . முடிவில்  ராஜாஜி பவன்  மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்  கன்வீனர் தோழர் . பாலசுந்தரம்  நன்றி நவில  ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது. ஆர்பாட்டத்தின் கணக்குப் பிரிவு ஊழியர்  சங்கத்தை சார்ந்த  பெண் ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டது பாராட்டத் தக்கது.  மத்திய அரசு ஊழியர் பகுதியில் இருந்தும்   அஞ்சல்  NFPE  உறுப்புச் சங்கங்களில் இருந்தும்  சுமார் 300 ஊழியர்கள் கலந்துகொண்டு  கண்டன ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர் .PRINT  மற்றும்  ELECTRONIC  MEDIA  வில் இருந்து  அதிக அளவில் நிருபர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பொது மேலாளர் இடமாற்றம் !

GM  FINANCE  இடமாற்றம் செய்யப் படுவார் என்று  ஏற்கனவே நம்முடைய JCA வின் 06.05.2015 முதலான காலவரையற்ற பேச்சு வார்த்தையின்  போது  நமது  DG அவர்கள்  தெரிவித்தார். அப்போதே  கோப்புகள் TELECOM  DEPT . மூலம் 
உத்தரவுக்கு சென்று கடந்த 13.05.2015 அன்றே இடமாற்ற உத்திரவு இடப்பட்டது ஆனால் இந்த உத்திரவு அம்மையாரின்  " அல்லா  குல்லா " வேலைகளால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. தற்போது  இன்று வெளியிடப்பட்டது . அதன் நகல்  கீழே அளித்துள்ளோம்.

நிறுத்தப் பட்ட ஓய்வூதியப் பலன்கள்  
வழங்கிட உத்திரவு 

ஒய்வு பெற்ற  தோழர்.கே. மகேந்திரன்  அவர்களின்  நிறுத்தப் பட்ட ஓய்வூதியப் பலன்கள்  உடனடியாக வழங்கிட  DTE  உத்திரவு அளித்துள்ளது.

உயர் மட்ட அதிகாரிகள் குழு  நேரடி  விசாரணை 

DTE  உத்திரவுப் படி  உயர்மட்ட அதிகாரிகள்  குழு  நாளை  விசாரணை செய்திட சென்னை  விரைகிறது.

CHIEF  PMG  INTERVIEW 

எதிர்வரும் 29.05.2015 காலை  12.00 மணியளவில்  கணக்குப் பிரிவு ஊழியர் சங்கத்தினரை (AIPAEA)   பேச்சு வார்த்தைக்கு  CHIEF  PMG அவர்கள் கடிதம் அளித்து  அழைத்துள்ளார். 

போராடிய  தோழர்களுக்கும்  தோழியர்களுக்கும்  நம்  அஞ்சல் மூன்று ,   தமிழக  NFPE  இணைப்புக் குழு , மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்  சார்பாக  வீர வாழ்த்துக்கள் !

உத்தரவு நகல்   கீழே  பார்க்கவும்