Monday, June 15, 2015

COURTESY MEET WITH THE NEW CHIEF PMG, TAMILNADU CIRCLE ON 12.06.2015

AFTER A LONG GAP ,  SHRI. CHARLES LOBO IPoS., HAS JOINED AS THE NEW CHIEF POSTMASTER GENERAL OF  TAMIL NADU CIRCLE. 

WE HAVE MET THE NEW CHIEF PMG, TN CIRCLE ON 12.06.2015 . ON BEHALF OF OUR CIRCLE UNION. WE HAVE EXTEND A WARM WELCOME AND  ASSURED  OUR  FULLEST CO-OPERATION FOR THE SMOOTH FUNCTIONING, IN THE INTEREST OF THE DEPARTMENT AND IN THE INTEREST OF THE WELFARE OF THE COMMON WORKING STAFF. 

WE HANDED OVER A LETTER TO THE CHIEF PMG ,  REQUESTING FOR  SETTLEMENT OF LONG PENDING ISSUES. HE HAS ASSURED TO LOOK INTO ALL  AND TO SETTLE THE SAME IN A PHASED MANNER. AFTERWARDS,  WE HAVE MET WITH THE  DPS HQ ALSO AND  DISCUSSED VARIOUS MATTERS.  THE GIST OF THE DISCUSSIONS AND THE COPY OF LETTER  ADDRESSED TO THE NEW CHIEF PMG, TN CIRCLE ARE  FURNISHED BELOW. 

1.நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி , RJCM  கூட்டம், முறையே JULY  முதல் மற்றும் இரண்டாவது வாரங்களில் நடத்தப்படும்.

2. 29.05.2015 அன்று நம்முடைய மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்ட கடிதத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

3. LGO  TO P.A. தேர்வு முடிவுகள் , நீதிமன்ற பிரச்சினை இருப்பதால், உரிய கலந்தாய்வு செய்த  பின்னர் வெளியிடப்படும்.( "RELEASED  SUBJECT TO OUTCOME OF THE DECISION OF THE COURT" என்று வெளியிடலாம் என  நாம் ஆலோசனை  அளித்துள்ளோம் )

4. DDG  யுடன் தொடர்பு கொண்டு உடன் LSG  பதவி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு காண  கோரியுள்ளோம்.

5. HSG  II REALLOTMENT  கோரிக்கையில்  GROUP B  பதவி உயர்வுக்கு DTE கடைப்பிடித்த நடைமுறையை   மாநில நிர்வாகமும் கடைபிடிப்பதாக பதில்   அளிக்கப்பட்டது.  இது  அடிப்படை   சட்டங்களுக்கு    முற்றிலும் 
முரணானது என்று நாம்  சுட்டிக் காட்டியுள்ளோம்.

6. CHENNAI  PSD  ஐ  CSD  அலுவலக வளாகத்திற்கு மாற்றும் பிரச்சினையில் DIRECTOR  FOREIGN  POST  பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாததாலும் , DPS  MM  பதவி  நிரப்பப்படாததாலும்  ADMINISTRATIVE CONVENIENCE க்காக  ஒரு  GR B  பதவியானது  FOREIGN  POST  க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும். மற்றபடி  PSD  யின்   MAJOR  STOCK  ,  CSD  வளாகத்திற்கு மாற்றப்படாது என்றும் , ஒரு  பகுதி  பழைய கட்டிடத்திலும் , சில பகுதிகள்  அண்ணா சாலை BSNL கட்டிடப் பகுதியிலும் பராமரிக்கப்படும் என்றும்  உறுதி அளிக்கப்பட்டது.ஊழியர்களின் அடிப்படைத் தேவைகள்  முழுமையாக செய்து தரப்படும்  என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

7. CBS/CIS பிரச்சினைகளில்  EOD  கொடுக்க  காலதாமதமாவதையும் , இரவு நீண்ட நேரம்  காக்க  வைத்த பின்னர் , மறுநாள் காலை 07.00 மணிக்கு வந்து  EOD  கொடுங்கள் என்று  கூறுவது  ஊழியர்களை கொடுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் , குறிப்பாக பெண் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து  இரவு  நீண்ட நேரம் இருக்க வேண்டியுள்ளதையும் , பின்னர் மறுநாள்  காலையிலேயே  வரவேண்டும் என்று பணிப்பது  வேடிக்கையாக உள்ளது என்றும் சுட்டிக் காட்டினோம். இந்தப் பிரச்சினைக்கு  INFOSYS  மூலம் தீர்வு  காண  முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் ,  மாலை 06.00 மணியளவில் EOD  செய்ய இயலவில்லை என்றால்  உடன்  ஊழியர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் மறுநாள்  காலை  வந்து  EOD  அளிக்கலாம் என்றும் நிர்வாகத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து மீண்டும் பிரச்சினை  எழுந்தால்  கோட்ட/ கிளைச் செயலர்கள் மாநிலச் சங்கத்திற்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறோம்.