Thursday, September 17, 2015

BI MONTHLY MEETING WITH THE PMG,CCR ON 16.09.2015

PMG  CCR  அவர்களுடன்    இரு     மாதங்களுக்கு     ஒரு    முறையான       பேட்டி நேற்றைய தினம் (16.09.2015) சென்னையில் நடைபெற்றது.  இது புதுகை மாநில மாநாட்டு நேரத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டம். இந்த பேட்டியில் நம்முடைய சங்கத்தின் சார்பில் மாநில உதவிச் செயலர் தோழர். S . வீரன் மற்றும்  மாநில நிதிச் செயலர் தோழர். A.வீரமணி ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்து மாற்றங்களின் காரணமாக மாநில உதவிச் செயலர் தோழர். C.மோகன் தோழர். வீரனுடன் கலந்துகொண்டார்.  

கூட்டத்தின் பின்னர் INFORMAL ஆக நம்முடைய மாநிலச் செயலரும் கலந்துகொண்டார். இதில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய பிரச்சனைகள் குறித்து  விபரங்கள் கீழே தருகிறோம்.

1. SYSTEM  ADMINISTRATOR  T.A . பில்  பிரச்சினையில்  SR  25 அடிப்படையில் 
கையாளுதல் தவறு என்பது மீண்டும் சுட்டிக் காட்டப்பட்டது. மேலும் CONVEYANCE  ALLOWANCE அளிக்கக் கூடிய வகையில் S .A . க்களுடைய பயணங்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை . CBS /CIS  MIGRATION களுக்கு அவர்களது சேவை  இரவு பகலாக கோட்டம் முழுவதுமான அலுவலகங்களுக்கு  பயன்படுத்தப்படுகிறது. எனவே அடிப்படை T.A. விதிகளின்படி  அவர்களுக்கு முறையாக TA /DA வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினோம். இதனை கொள்கை அளவில் ஒப்புக் கொள்வதாகவும் ,  இருப்பினும்  மாநிலம் முழுதும் ஒரே நிலையில் இதனைக் கடைப்பிடிக்க  CPMG  யுடன் கலந்துபேசி விரைவில் முடிவு எடுப்பதாகவும் PMG CCR  அவர்கள் தெரிவித்தார்.

2. EOD  அளிப்பதில்  தொடர்ந்து அதே நிலைதான் உள்ளது என்றும்  கடந்த வாரங்களில் இரவு நீண்ட நேரமாகியும்  EOD  கொடுக்க இயலவில்லை என்றும், INFOSYS  நிறுவனத்தின் இயலாமை காரணமாக ஊழியர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் , பெண் ஊழியர்கள் இரவு நெடுநேரம் கழித்து விடுவிக்கப்படுவதால்  பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாகவும் விரிவாக கடிதம் அளித்து பேசினோம் . இதனை தாம் உணர்வதாகவும் CPMG  யுடன் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பதாகவும் PMG CCR  அவர்கள் தெரிவித்தார்.

3. தரமணி அஞ்சலகத்தின் SEPTIC TANK  பிரச்சினை தீர்த்திட  ESTIMATE  APPROVE செய்யப்பட்டு  WORK  ORDER அளிக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் புதிய SEPTIC  TANK  கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

4. CHENNAI GPO  PLI CONCENTRATION CENTRE  க்கு REDEPLOYMENT  அடிப்படையில் கணினி மற்றும் ஊழியர்கள்  அளிக்கப்படுவார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டது. 

5. MADHAVARAM  MILK COLONY  மற்றும் கொடுங்கையூர் பகுதி MAIL  CONVEYANCE  பிரச்சினையில்  CPMG  அலுவலகத்துடன் கலந்துகொண்டு MAIL  ARRANGEMENT  மாற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

6. தாம்பரம் கோட்டத்தில் நம்மால் அளிக்கப்பட்ட அலுவலகங்களின்   GENERATOR , UPS, BATTERY , PRINTER போன்ற அடிப்படி கட்டுமானங்கள் பிரச்சினையில் உரிய  நடவடிக்கை  எடுக்கப்படும் என்று உறுதி  அளிக்கப் பட்டது.

7 . கோட்ட அலுவலகங்களில்  OVER  TENURE , PROLONGED  DEPUTATION , OVER  DETENTION  IN SENSITIVE  BRANCHES பிரச்சினையில் எந்தெந்த கோட்டங்களில் இவ்வாறு முறைகேடாக  பணி   புரிய அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறித்து சரியான புகார் அளிக்குமாறு  கேட்டுக் கொண்டார். அதன் மீது  உடன் நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

விவாதிக்கப்பட்ட இதர பிரச்சினைகளின் முடிவு குறித்து தெரிந்து கொள்ள  MINUTES  நகல் கிடைக்கப் பெற்றவுடன் பிரசுரிக்கப்படும்.