அரசிடமிருந்தும், இலாக்காவிடமிருந்தும் எத்தனை உத்திரவுகள் வெளியிடப்பட்டாலும், 'மொட்டை' புகார்கள் அடிப்படையில் , அடிமட்ட ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க நம் அதிகாரிகள் விரும்பு கிறார்கள். இது ஊழியர்களை மிரட்டி 'அடிமைகளாக வைத்திட' ஒரு திட்டமே அன்றி வேறு ஒன்றுமில்லை. பல கோட்டங்களில் அதிகாரிகளே ஊழியர்களை பிளவு படுத்தி 'மொட்டை' புகார் அளித்திட தூண்டுகிறார்கள்.
ஆனால் எந்த ஒரு அதிகாரி மீதான ' மொட்டை ' புகார் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை - இதுவரை எடுக்கப்பட்டதும் இல்லை. இந்த தவறான அணுகுமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகிறோம். இல்லையெனில், இதுவரை அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி விபரங்கள் பெற்று மத்திய புலனாய்வு அமைப்புக்கு நாம் புகார் செய்ய வேண்டி இருக்கும் என்பதை இந்த வலைத்தள செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.