Sunday, April 10, 2016

RECEPTION COMMITTEE FORMATION MEETING OF TN CONFEDERATION FOR CONDUCTING THE NATIONAL CONFERENCE

சிறப்பாக நடைபெற்ற  வரவேற்புக் குழு அமைக்கும் நிகழ்வு ! 

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம். கடந்த 5.4.2016 அன்று மாலை சென்னை, நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் கிளையின் சார்பாக, மகா சம்மேளனத்தின்  தேசிய  மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் திங்கள் 15,16,17 மற்றும் 18 தேதிகளில் சென்னையில் நடத்துவதற் கான வரவேற்புக் குழு அமைக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

மகா சம்மேளனத்தின் இந்த மாநாடு குறித்த முக்கியத்துவம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்றாகும்.

1. மகா சம்மேளனம் 16.8.1956 இல் துவங்கப்பட்டது பலருக்கு தெரியாது. தற்போது 15.8.2016 உடன் மகா சம்மேளனம் தோன்றி சரியாக 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 61 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது . எனவே இது  மகா சம்மேளனத்தின் வைர விழா ஆண்டு   மாநாடாகும்.

2. தற்போது தமிழகத்தில் நடத்தப்பட உள்ள  தேசிய மாநாடு , மகா சம்மேளனத்தின் 25 ஆவது மாநாடு ஆகும். அதாவது வெள்ளிவிழா மாநாடு ஆகும். 

3. இந்த மாநாட்டில் இரண்டாம் நாள் நிகழ்வாக தேசிய மகளிர் கருத்தரங்கம் நடத்தப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும்  கிட்டத்தட்ட 105 சங்கங்களில்  இருந்து மகளிர் ஊழியர் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

4. மேலும், மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாடும், இதனுடன் சேர்த்தே, முதல் நாள் நிகழ்வாக நடத்தப்பட உள்ளது. முக்கியமான நிகழ்வாகும்.

5. இந்த மாநாடு எதிர்வரும் 11.7.2016 முதல் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஊதியக் குழு கோரிக்கைகளின் மீதான   காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கும், எதிர்வரும் 2.9.2016 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள 11 மைய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கும் இடையில் நடைபெற உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு ஆகும்.

6. மேலும் , மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச் செயலராக நீண்டகாலம் சிறப்பாகப்  பணியாற்றி வரும் தோழர். M . துரைபாண்டியன் அவர்களின்  அரசுப் பணி  நிறைவுப் பாராட்டு விழாவும் இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது மேலும் இந்த மாநாட்டிற்கு  சிறப்பு சேர்க்கிறது. 

இப்படி அனைத்து நிகழ்வுகளையும்  4 நாட்கள் தமிழகத்தில் நடத்திட நமக்கு வாய்ப்புக் கிடைத்தது  நிச்சயம் தொழிற் சங்க வரலாற்றில் ஒரு முக்கியமான பதிவு ஆகும்.

இதற்கான  வரவேற்புக் குழு அமைக்கும் நிகழ்ச்சிக்கு மகா சம்மேளனத் தின் மாநிலத் தலைவர் தோழர். J . இராமமூர்த்தி(அஞ்சல்) தலைமை தாங்கினார். மகாசம்மேளனத்தின் மாநில நிதிச் செயலர் தோழர். S. சுந்தரமூர்த்தி (வருமான வரித்துறை ) வரவேற்புரை நிகழ்த்தி னார்.  தமிழ் மாநிலப் பொதுச்செயலர் தோழர். M . துரைபாண்டியன் (AG அலுவலகம்) வரவேற்புக் குழு அமைத்து இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார்.

இந்த நிகழ்வில் , மகா சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர். K.K.N. குட்டி , மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாபொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன் . CITU வின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா உறுப்பினருமான தோழர். T.K . ரங்கராஜன், HMS இன் அகில இந்திய தலைவரும், SRMUவின் தென் மாநிலங்களின் தலைவருமான தோழர். C.A ராஜா ஸ்ரீதர் , தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் ( LPF ) பொதுச் செயலாளர் திரு.மு.சண்முகம், AITUCன் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர். T.M.மூர்த்தி, NFPE இயக்கத்தின் மூத்த   தலைவர் தோழர். A .G. பசுபதி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  தோழியர். தமிழ்செல்வி, DREU  சங்கத்தின் செயல் தலைவர் தோழர். இளங்கோவன், அகில இந்திய அஞ்சல் RMS  ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். M . கண்ணையன் , ஸ்டேட்  வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகி தோழர். செந்தில், BEFI சங்கத்தின் மாநில நிர்வாகி தோழர் . சண்முகம்,  NFPE  சம்மேளனத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S . ரகுபதி, அஞ்சல் RMS NFPE  இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். பரந்தாமன், கன்வீனர் தோழர். G.கண்ணன், அஞ்சல் கணக்குப் பிரிவு மாநிலச் செயலாளர் தோழர். R .B .சுரேஷ், NFPE  GDS  சங்க மாநிலச் செயலரும், அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர். R . தனராஜ், ராஜாஜி பவன் இணைப்புக் குழு கன்வீனர் தோழர். பாலசுந்தரம், சாஸ்திரி பவன் இணைப்புக் குழு கன்வீனர் தோழர். சாம்ராஜ், அஞ்சல் மாநில மகிளா கமிட்டி தலைவர். தோழர். ஏஞ்சல் சத்தியநாதன், கன்வீனர் தோழர். R . மணிமேகலை உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு மாநாடு சிறக்க அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்குவதாக வாழ்த்துக் கூறினர். 

மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவராக தோழர். T.K . ரங்கராஜன், M.P. அவர்களும் , செயல் தலைவராக தோழர். J . ராமமூர்த்தி அவர்களும், துணைத் தலைவர்களாக தோழர். C .A. ராஜாஸ்ரீதர், திரு.மு.சண்முகம், தோழர். T.M.மூர்த்தி, தோழியர். தமிழ்செல்வி, தோழர். இளங்கோவன், தோழர். K. ராகவேந்திரன், தோழர். செந்தில், தோழர். K . கிருஷ்ணன், வரவேற்புக் குழுவின் பொதுச் செயலராக தோழர் . M . துரைபாண்டியன், உதவிப் பொதுச் செயலர்களாக மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலச்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்புச் சங்கங்களின் மாநில செயலர்கள், மாவட்டச் செயலர்கள், வரவேற்புக் குழுவின் நிதிச் செயலராக  தோழர். S . சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். வரவேற்புக் குழுவுக்கு உட்குழுக்கள் தனித்தனியே அமைக்கப்பட்டு அறிவிக்கப் பட்டன.  

வரவேற்புக் குழுவின் காப்பாளர்களாக மூத்த தலைவர்கள் தோழர். A.G. பசுபதி,  தோழர்.  K .V.ஸ்ரீதரன், தோழர். சுந்தரம் ஆகியோர் அறிவிக்கப் பட்டனர்.

மத்திய அரசுத் துறையின்  பல்வேறு சங்கங்களில் இருந்து நூற்றுக் கணக்கான தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக வருமான வரித்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். M .S . வெங்கடேசன் நன்றியுரை செலுத்த கூட்டம் இனிதே  நிறைவுற்றது. விழா நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் நகல்கள் கீழே உங்கள் பார்வைக்கு .