கீழே காணும் கடிதம், கடந்த 11.7.2016 அன்று PMG CCR மற்றும் DPS, CCR அவர்களிடம் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தால் நேரிடையாக அளித்து பேசப்பட்டது. அதன் அடிப்படையில், பிரச்சினை யின் தீவிரத் தன்மை அறிந்து உடனடியாக சென்னை பெருநகர மண்டல நெறியாளர் திருவாளர். A .கோவிந்தராஜன், IPoS., அவர்கள் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரிடம் நேரடி விசாரணையை காலதாமதமின்றி மேற்கொண்டு உரிய புகார் பெற்றதால் உடனடியாக குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த உட்கோட்ட அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். உரிய மேல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த குட்டி அதிகாரி ஏற்கனவே வேலூர் , சென்னை மத்திய கோட்டம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் பணியாற்றியபோது இதே மாதிரியான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது உங்களுக்குத் தெரியும் . நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் இதற்கு முன்னர் பல புகார் மனுக்களை அளித்துள்ளதும் உங்களுக்குத் தெரியும் . அப்போதெல்லாம் சரியான முறையில் விசாரணை செய்திருந்தால் , இன்று இந்த அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது என்பது நம்முடைய மாநிலச் சங்கத்தின் கருத்து ஆகும்.
இருந்த போதிலும் தற்போதைய புகாரின் தீவிரத்தன்மை அறிந்து உடன் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு பாதுகாப்பு அளித்த நம்முடைய PMG , CCR திருவாளர். மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் .நம்முடைய DPS , CCR திருவாளர். A.கோவிந்தராஜன் அவர்களுக்கும் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. பாதிக்கப்பட்ட பெண் ஊழியரின் பாதுகாப்பு கருதி இந்தச் செய்தி காலதாமதமாக நம்முடைய வலைத்தளத்தில் வெளியிடப்படுகிறது.