Saturday, July 30, 2016

OUR CIRCLE UNION HAS TAKEN UP THE ISSUES CONNECTED WITH TRADE UNION VICTIMISATION AT POLLACHI AND THENI DIVISIONS IN RJCM MEETING

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . 

பொள்ளாச்சி கோட்டப்  பிரச்சினை மீது  நடவடிக்கை 

ஏற்கனவே கடந்த 24.6.2016 அன்று  பொள்ளாச்சி கோட்ட  அதிகாரியின் கொடுங்கோன்மை  நடவடிக்கைகள் குறித்தும்,   GDS தோழர்களின் RPLI மேளாவின்  பிரச்சினை காரணமாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக  பழி  வாங்கப்பட்ட அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் உள்ளிட்ட தோழர்களுக்கு அளிக்கப்பட விதி 16 தண்டனைகள் மற்றும் அனுமதி அளித்த  அஞ்சலக அதிகாரிக்கு  அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தும்  நம்முடைய மாநிலச்  சங்கத்தின் சார்பாக PMG WR  அவர்களுக்கு அளிக்கப்பட  விரிவான கடிதத்தின்  நகல்  நம்முடைய வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.  

இது குறித்து  புதிதாக மேற்கு மண்டலத்தில் பொறுப்பேற்ற  PMG  திருமதி. சாரதா  சம்பத்  அவர்களிடம்  கடந்த இரு  மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில்  நம்முடைய மாநிலச்  செயலர்  விரிவாக விவாததித்ததன் பலனாக  உடனடியாக இந்தப் புகார் மீது உயர்  மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. 

மேலும் கடந்த 28.7.2016 அன்று நடைபெற்ற RJCM  கூட்டத்தில் இது குறித்து அஞ்சல் மூன்று மாநிலச்  செயலர் விரிவாக விவாதித்ததன் பலனாக CPMG அவர்களும் மேற்கு மண்டல PMG  அவர்களும் இந்த விசாரணை காலதாமத மின்றி நடத்தப்படும் என்றும், விசாரணை அறிக்கை பெறப்பட்டதன் அடிப்படையில்  உடன்  உரிய  ஆவன மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  உறுதி அளித்தனர். 

அதன்படியே  கடந்த 29.7.2016 அன்றே  பொள்ளாச்சியில் சென்று  உயர் அதிகாரியால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  விரைவில்  மேல் நடவடிக்கை எதிர்பார்க்கிறோம்.  உரிய முறையில்  விசாரணைக்கு உத்தரவிட்ட  PMG WR  திருமதி. சாரதா சம்பத்  அவர்களுக்கும், நம்முடைய CPMG  திரு. லோபோ   அவர்களுக்கும் நம்முடைய மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 தேனீ  கோட்டப்  பிரச்சினை மீது  
உரிய  நடவடிக்கை 

இது போலவே  தேனீ கோட்டத்தில் கடந்த 2014 இல்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பழி வாங்கப்பட்ட தோழர்களுக்கு அளிக்கப்பட  தண்டனை மீது  REVIEW செய்யப்பட  உத்திரவை  மறு பரிசீலனை  செய்திட ஆவன நடவடிக்கை மேற்கொள்வதாக RJCM  கூட்டத்தில்   நமக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்சினை  கால  தாமதமாக 2 ஆண்டுகள் கழித்தே  மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டும் , நீதி மன்றத்திற்கு  தேனீ கோட்ட ஊழியர்கள் சென்றும்  முடிவில் வெற்றி பெறாத  நிலையிலும் , நம்முடைய மாநிலச்  சங்கத்தின் ஆலோசனையை சரிவர உபயோகப் படுத்திடாத நிலையிலும் கூட, நம்முடைய மாநிலச்  சங்கம்  அதன் மீது தொடர் முயற்சிகளை எடுத்து  பாதிக்கப்பட்ட ஊழியர்களை காப்பாற்றிட முயற்சிகள் மேற்கொண்டுள்ளது . விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம். நல்ல முடிவினை  தென் மண்டல DPS  திருமதி. நிர்மலாதேவி  அவர்கள் எடுத்திட  வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்கிறோம்.

குடந்தை கோட்ட  GDS ஊழியர்களின்  
TRCA பிரச்சினை 

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கக் கூடிய  குடந்தை கோட்ட  GDS ஊழியர்களின் ஒரு பகுதியினரின் TRCA பிரச்சினை குறித்து  கடந்த RJCM கூட்டத்தில் நீண்ட விவாதம் நம்முடைய  RJCM  செயலர் தோழர். J.R . அவர்களால் வைக்கப்பட்டதன் பலனாக , இது குறித்து ஆய்வு செய்திட மாநில அலுவலகத்தில் இருந்து  ஆகஸ்ட் மாதத்தில் ஒரு உதவி இயக்குனர் அனுப்பப்படுவதாகவும், அவர் இந்தப் பிரச்சினையில் உரிய கோப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார் என்றும் குறையுள்ள ஊழியர்கள் அவரிடம்  உரிய மனுவை அளித்து    தங்களது குறையை தெரிவிக்கலாம் என்றும்,  நமக்கு CPMG  அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள். எனவே குடந்தை கோட்டத்தில் TRCA பிரச்சினையில் பாதிக்கப்பட்ட GDS ஊழியர்கள் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை மனு தனித்தனியே அளித்திட  தங்களை  தயார் படுத்திக்க கொள்ள வேண்டுகிறோம். 

RJCM இல் பேசப்பட்ட இதர பிரச்சினைகள் குறித்து  விரிவாக இந்த வலைத்தளத்தில் விரைவில் செய்தி  வெளியிடப்படும்.