Saturday, July 30, 2016

CIRCLE UNION TAKEN UP THE CASE WITH CPMG TN AND STOPPED THE IRREGULAR METHODS ADOPTED FOR OPENING OF RD PRSS ACCOUNTS IN DINDIGUL DIVISION - REFUNDS MADE TO ALL OFFICIALS NOW

                         TARGET கொடுமை  பலவிதம் ! அதில்  இது புதுவிதம்  !    
               மாநிலச்  சங்கத்தின் தலையீட்டினால் பிரச்சினையில் தீர்வு  !

RD PRSS  கணக்குகள் ஆயிரக் கணக்கில் துவங்கிட என, முறைகேடாக விதி மீறி 12 மாதங்களுக்கும், இலாக்கா ஊழியர்கள் அனைவருக்கும் ரூ. 600/- வீதத்திலும் GDS ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.300/- வீதத்திலும் ஓராண்டுக்கு முழுமையாக  ஒவ்வொரு மாதமும் என,  முன்கூட்டியே DECLARATION  மிரட்டிப் பெற்று சம்பள பிடித்தம் செய்திட,  போலியாக வணிக மேம்பாடு  செய்திட,  திண்டுக்கல் கோட்ட  அதிகாரி உத்திரவு இட்டார். அவரது துணை அதிகாரிகளும் பம்பரமாக பாய்ந்து சென்று ஊழியர்களை  மிரட்டி DECLARATION  மற்றும்  DEPOSITS  பெற்றனர். 

DECLARATION அளிக்காதவர்களுக்கு APAR  ENTRY மோசமாக்கப்படும் என்று அதிகாரிகள் தொலைபேசியில் மிரட்டினர். வேறு  வழியில்லாமல் பெரும்பகுதி ஊழியர்கள் RECOVERY செய்திட DECLARATION  அளிக்கவும், பல ஊழியர்கள் நல்லபெயர்  வாங்கிட ( மனதிற்குள்  திட்டிக் கொண்டே ) முன்கூட்டியே  DEPOSIT தொகை அளிக்கவும்  செய்தனர். 

இந்தக் கொடுமைகளை  திண்டுக்கல் அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கங்கள் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின் கவனத்திற்கு  கொண்டுவந்தனர்.  நம்முடைய மாநிலச் சங்கம் உடனடியாக  இதன் மீது கடிதம் அளித்து CPMG  அவர்களிடம் பேசியது. CPMG  அவர்களும் உடன் விசாரித்து ஆவன  நடவடிக்கை மேற்கொள்வதாக நம்மிடம்  உறுதி அளித்தார்.  

மேலும் கடந்த 28.7.2016 அன்று நடைபெற்ற RJCM  கூட்டத்தில் நம்முடைய மாநிலச்  செயலரும் ஊழியர் தரப்பு செயலருமான  தோழர். J.R . அவர்கள் இந்தப் பிரச்சினை குறித்து  CPMG அவர்களுடனும் தென் மண்டல PMG அவர்களுடனும் விவாதித்ததன் பலனாக உடனடியாக , முறைகேடாக பெறப்பட்ட DECLARATON  மற்றும் டெபாசிட் தொகை அந்தந்த ஊழியர்களிடம்  திருப்பித் தர உத்திரவிடப்பட்டது. தவறு செய்த அதிகாரி எச்சரிக்கப்பட்டுள்ளார். 

இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு தீர்வு தந்த நம்முடைய CPMG  திரு. சார்லஸ் லோபோ  அவர்களுக்கும் , தென் மண்டல PMG , திருமதி. சாருகேசி அவர்களுக்கும் நம்முடைய மாநிலச்  சங்கத்தின் சார்பில்  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அளிக்கப் பட்ட கடிதத்தின் நகல் கீழே பார்க்கவும்.