A QUESTION TO PMG.
WHETHER ANY NORMS FIXED AND STATISTICS WILL BE MAINTAINED FOR THESE ITEM OF WORKS ? OR INCENTIVE WILL BE INTRODUCED FOR THESE ITEM OF AGENCY WORKS ?
WHETHER ANY ESTABLISHSMENT NORMS FOLLOWED NOW-A-DAYS OR THE BASIC
RULES OF THE DEPARTMENT ARE THROWN INTO DUS BIN ?
சென்னை : அரசின் அனைத்து துறை விண்ணப்பப் படிவங்களையும், ஆக., 15 முதல் தபால் நிலையங்களிலேயே பெறும் புதிய திட்டத்தை, தபால் துறையின் தமிழக வட்டம் அறிமுகப்படுத்துகிறது. இந்திய அஞ்சல் துறை, தபால் போக்குவரத்துகளை நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. பொதுத் துறை நிறுவனமான இத்துறை, தபால் வினியோகம், தபால் தலைகள், கடித உறை விற்பனை உள்ளிட்ட பராம்பரிய பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இத்துறையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, வருவாய் ஈட்டும் பல புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, அரசு துறையின் அனைத்து விண்ணப்ப படிவங்களையும் தபால் நிலையங்களிலேயே பெறும் புதிய திட்டத்தை, தபால் துறை தமிழக வட்டம் செயல்படுத்தவுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர மண்டல தபால் துறைத் தலைவர் ராமானுஜன் கூறியதாவது: கடந்த நிதியாண்டில், எட்டாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட, "ரீடெய்ல் போஸ்ட்'ன் கீழ் மற்ற பணிகளை மேற்கொண்டு வருவாயை ஈட்டும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அரசின் அனைத்து துறை சார்ந்த விண்ணப்ப படிவங்களை பெற, மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காத்திருத்து பெறும் நிலை உள்ளது. ரேஷன் கார்டு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அனைத்து விண்ணப்ப படிவங்களையும் தபால் நிலையத்திலேயே எளிதில் பெறும் புதிய திட்டம், தபால் துறை தமிழக வட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த வசதியை ஆக., 15 முதல் மக்கள் பெறலாம். இவ்வாறு ராமானுஜன் கூறினார்.
Source : Dinamalar Dt. 06.08.11
GRIEVANCE OF AN ORDINARY EMPLOYEE:-
ஆனால் மேளாக்கள் என்றும் பார்ட்டிகள் என்றும் CONTRACT கள்
என்றும் சுவாமி மலை சாமி சிலைகள் என்றும் கரூர் துண்டுகள் என்றும் கோடியக்கரை கோலாகலங்கள் என்றும் பிச்சாவரம்
பீச்சுகள் என்றும் தோகைமலை தோட்டங்கள் என்றும் இலாக்கா பணம் கோடிக்கணக்கில் நட்டத்தின் மேல் நட்டமானபோது யாருக்கும் நாட்டமே இல்லாமல் போனது வேதனையல்லவா ? இது என்ன
" கணக்கோ " ?