கொட்டடா கொட்டடா முரசம் !
கொட்டடா கொட்டடா முரசம் !
வெற்றி நமதென்றே கொட்டடா முரசம் !
சூதற்ற நம் தோழர் சுடர்முகம் காட்டி
சுற்றியே வந்து கொட்டடா முரசம் !
நமதென்று நாட்டடா சங்கம் !
நரிகளுக்கு இங்கு இல்லை வேலை !
கதிரவன் பாய்ந்ததாலே - இனி
காரிருளுக்கும் இங்கேது வேலை !
அறிவுசார் தலைவர்கள் பற்றி - சங்கம்
உயர்த்துவோம் ! இனி அதுவே வேலை !
ஓங்கி உயர்ந்ததோர் NFPE கோட்டை ! - இனி
ஒன்றுபட்டே அதன் தலை பறக்கும் நம் பதாகை !
நீண்ட பணி நமக்கினி உண்டு !
சேர்ந்தே செய்வோம் நாம் இனி இங்கு !
பட்ட துயரெல்லாம் இனி போகும் !
பார் போற்றும் சங்கமென இனி மாறும் !
கொட்டடா கொட்டடா முரசம் !
வெற்றி நமதென்றே கொட்டடா முரசம் !
*********************************************
செய்தி :- தோழர் . சுந்தரமுர்த்தி & கோ வினால் தொடரப்பட்ட
நீதி மன்ற வழக்கு நேற்று DISMISS செய்யப்பட்டது.
கவரப்பேட்டையில் நடைபெற்ற நம் தமிழ் மாநில
மாநாடு செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டது.
நன்றி : நம் தமிழ் மாநிலச் சங்கம் அமைந்திட முழு முயற்சி எடுத்திட்ட நம் சங்க அகில இந்திய தலைவர் தோழர். கிருஷ்ணன்
அவர்களுக்கும் , நம் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் KVS
அவர்களுக்கும், இரவு பகலாக நீதி மன்றத்திலேயே அயராது
தனது பணி ஆற்றிய நம் அருமைத் தோழர் வீரமணி அவர்களுக்கும்
மற்றும் சொல், செயல், உடல், பொருள் , எண்ணம் என்று எல்லா
விதங்களிலும் கூட நின்ற ஆயிரக்கணக்கான தோழமை சொந்தங்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !
நன்றி ! நன்றி !
விபரமான அறிக்கை விரைவில் கிடைக்கும் .
..... மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.