அன்புத் தோழர்களுக்கு வணக்கம்! ஏற்கனவே SUNDAY /HOLIDAY MPCM BOOKING மற்றும் SUNDAY SPEED டெலிவரி பெரும்பான்மையான அலுவலகங்களில் நமது முயற்சியால் நிறுத்தப் பட்டதையும் , அதே போல SPEED POST EXTENDED BOOKING நிறுத்தப் பட்டதையும் நமக்கு அளிக்கப் பட்ட உத்திரவின் நகலின் மூலம் தெரிவித்திருந்தோம்.. தற்போது கீழே அளிக்கப் பட்டுள்ள RJCM MINUTES இலும் இதனைக் காணலாம்.
விடுபட்ட சில அலுவலகங்களுக்கு நாம் கடந்த 19.03.2013 இல் PMG CCR இடம் பிரச்சினையைக் கொண்டு சென்றோம் . அதன் மீது இன்று உத்திரவு இடப்பட்டு சென்னை MYLAPORE மற்றும் PADI அலுவலகங்களில் இது ரத்து செய்யப் பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . ரத்து செய்யப் படாத மேலும் சில அலுவலகங்களில் மீண்டும் 3 மாதங்கள் கழித்து TRAFFIC REVIEW செய்வதாக உறுதி அளிக்கப் பட்டுள்ளது. அப்போது டிராபிக் குறைவாக இருப்பின் இது குறித்து பரிசீலனை செய்யப் படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டுள்ளது .
நமது கோரிக்கையை ஏற்று உத்திரவிட்ட சென்னை பெருநகர PMG திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களுக்கும் , நமது கோரிக்கையின் நியாயத்தை ஏற்று உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட AD MAILS திரு. R . பாலச்சந்தர் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் !
நமக்கு அளிக்கப் பட்ட பதிலின் நகலை கீழே பார்க்கவும் :-