Thursday, April 18, 2013

FILLING UP OF ALL VACANT HSG I POSTS BASED ON EXISTING RULES - ORDERS ISSUED TODAY

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். நீண்ட காலமாக  நிரப்பப் படாமல் ADHOC ARRANGEMENT  இல் வைக்கப் பட்டிருக்கும்  GENERAL  LINE க்கு உண்டான அனைத்து HSGI  பதவிகளையும் தற்போது நடப்பில் உள்ள  HSGI  RECTT RULES  அடிப்படையில் நிரப்பிக் கொள்ள இலாக்கா இன்று உத்திரவிட்டுள்ளது.

ஏற்கனவே அனைத்து HSGI  பதவிகளையும்  GENERAL LINE க்கு அளிக்க வேண்டும் என்றும் ,  அதன் மீது புதிய பதவி உயர்வுத்திட்டம் வேண்டும் என்றும்  நாம் கோரிக்கை வைத்து , அதன் அடிப்படையில்  இலாக்கா DOPT  க்கு பரிந்துரை செய்திருந்தது  உங்களுக்கு நினைவிருக்கும்.  பல காலம் இந்த கோப்பு பல்வேறு விளக்கங்கள்  கேட்டு  மீண்டும் மீண்டும் திருப்பப் பட்டதால்  DOPT  ஒப்புதல் கிடைக்கும் வரை HSGI  பதவிகளை நிரப்ப வேண்டாம் என்று இலாக்கா முடிவு எடுத்திருந்ததும் உங்களுக்கு நினைவு இருக்கும்.  

கடந்த 28.12.2012 JCM  இலாக்கா குழு கூட்டத்தில் , இந்தப் பரிந்துரை DOPT யால் மறுக்கப் பட்டதால் , பழைய சட்ட விதிகளின் படி HSGI  பதவிகளை நிரப்பிக்கொள்ள விரைவில் உத்திரவு அளிக்கப் படும் என்று  எழுத்து பூர்வமாக பதிலை இலாக்கா அளித்திருந்தது  உங்களுக்கு நினைவு இருக்கும். 

இதிலும் கூட 50% பதவிகள் ASP  இலிருந்து பதவி உயர்வாக அளிக்கப் பட்டிருந்ததால்,  ASP  யும்  HSGI  உம்  ஒரே ஊதியத்தில் உள்ளதால்  அது பதவி உயர்வாக கருதி  காலிப் பணியிடங்களை நிரப்பிடலாமா என்பதற்கு DOPT  இலிருந்து  விளக்க ஆணை வராத காரணத்தால் , அந்த பதவிகள் நிரப்பப்  படமாட்டாது  என்று உத்திரவு இடப்பட்டுள்ளது .

இதனால் மீண்டும் நம்முடைய தோழர்களே பல IPO  லைன் காலிப் பணியிடங்களில்  வேலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது .   எது எப்படி ஆனாலும் , தற்போது  இந்த உத்திரவின் மூலம்  எதிர்வரும் 30.04.2013 க்குள் DPC  கூட்டப் பட்டு  06.05.2013 க்குள்  50% HSGI  பதவிகள் நிரப்பப் பட வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளதால் , தற்போது HSGII  பணியிடங்களில் இருக்கும் தோழர்களுக்கு HSGI  பதவி உயர்வும் , LSG  பதவியில் உள்ளவர்களுக்கு , புதிதாக  காலியாகும்  HSGII  பணியிடங்களும் , அதேபோல நிலுவையில் LSG  காலிப்   பணியிடங்களுடன் கூடுதலாக காலிப் பணியிடங்களும்  கிடைக்கும் என்பதும் , இதனால்  RESULTANT  ஆக 300 க்குக் குறையாமல்  PA  காலியிடங்கள்  2013 DIRECT  RECTT  இல் கூடுதலாக நிரப்பப் படும் என்பதும் நமக்கு  மகிழ்ச்சியை அளிக்கிறது .  

இவையெல்லாம்  காலதாமதமில்லாமல் முறையாக நிறைவேற நம் மாநிலச் சங்கம் நிச்சயம்  நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி கூறுகிறோம். உத்திரவின் நகலை கீழே உள்ள இணைப்பில் 'கிளிக்' செய்து பார்க்கவும்.

http://www.indiapost.gov.in/DOP/Pdf/Circulars/04-44-2012-SPB.II_18-04-2013.pdf