அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !
இதன் கீழே நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்த்திட உரிய விண்ணப்ப படிவமும் , மாற்றுச் சங்கத்தில் இருந்து விலகிட ஒரு படிவமும் அளித்துள்ளோம்
அதே போல AIPEU GDS (NFPE ) சங்கத்தில் புதிய உறுப்பினரைச் சேர்த்திட ஒரு படிவமும் , மாற்றுச் சங்கத்தில் இருந்து விலகி சந்தாப் பிடித்தத்தை நிறுத்திட ஒரு படிவமும் அளித்துள்ளோம்.
நம்முடைய கோட்ட/ கிளைச் செயலர்கள் , மற்றும் இதர பொறுப்பாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 க்குள் புதிய உறுப்பினரை சேர்த்திடவும் , இதர சங்கங்களில் இருந்து வரும் உறுப்பினர்களிடம் அதற்கான படிவத்தை அளித்து அவர்களது சந்தா பிடித்ததை நிறுத்திடவும் , அதே நேரத்தில் நம் சங்கத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்துப் பெற்றிடவும் .கோரப்படுகிறார்கள் .
எந்தக் காரணம் கொண்டும் , இரண்டு படிவங்களும் ஏப்ரல் 30 க்கு மேல் DDO விடம் அளித்திடக் .கூடாது . எல்லா படிவங்களையும் சரிபார்த்த பிறகு கோட்ட/ கிளைச் செயலர் படிவத்தில் கையெழுத்திட்டு , அந்தப் படிவங்களுடன் ஒரு பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்து மூன்று நகல் எடுத்து அதனை DDO ( CONCERNED POST MASTER ) விடம் அளித்தபின் , அவரிடம் RECEIVED COPY என்று கையெழுத்து இட்ட ஒரு நகலை பெற்றுக் கொள்ள வேண்டும்
அதே போல புதிய அல்லது மாறி வரும் உறுப்பினரிடம் , உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தில் இரண்டு இடங்களில் கையெழுத்து பெற்றிட மறக்கக் கூடாது .
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிச்சயம் நமது சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை மிக அதிக அளவில் இருந்திட , கடுமையாக உழைக்குமாறு மாநிலச் சங்கம் உங்களை வேண்டுகிறது . உங்கள் உழைப்பின் வெற்றியை மாநிலச் சங்க வலைத்தளத்தில் நிச்சயம் நாம் பகிர்ந்து கொள்வோம் !
உங்களின் அதீத ஈடுபாட்டை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் !
நன்றியுடன் .............. மாநிலச் செயலர்.