அன்புத் தோழர்களுக்கு வணக்கம் கடந்த 24.07.2012 அன்று நடைபெற்ற RJCM கூட்டத்தின் FINAL MINUTES COPY , பல்வேறு கட்டங்களில் நாம் DISAGREEMENT அளித்ததால் மீண்டும் மீண்டும் திருத்தப் பட்டு தற்போது 8 மாதங்களுக்குப் பிறகு இறுதியாக வெளியாகி உள்ளது . இதிலும் சில பிரச்சினைகளுக்கு நாம் ஒப்புதல் தரவில்லை .
ஒப்புதல் இல்லாத பிரச்சினைகளை டெல்லி யில் நடைபெற உள்ள JCM (DC ) கூட்டத்திற்கு எடுத்துச் செல்ல நமது பொதுச் செயலருக்கு அனுப்ப உள்ளோம் . இப்படி RJCM க்கு அதிக அளவில் அதிகாரம் இருப்பதனால் நாம் சரியான பதிலையும் , அதன்மேல் உரிய நடவடிக்கையையும் பெற முடி கிறது என்பது ஒருபுறம் சாதகமே .. ஆனால் அதன் மறுபுறம் , 4 மாதங் களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கூட்டம் தற்போது 8 மாதங்கள் கழித்தே NOTIFY செய்யப் பட்டுள்ளது .
எனவே தோழர்/தோழியர் அனைவரும் மாநில அளவில் தேங்கிக் கிடக்கும் அல்லது தீர்க்கப் படாத , அல்லது இலாக்கா உத்திரவிருந்தும் இது வரை அமல் படுத்தப் படாத எந்த ஒரு பொதுப் பிரச்சினையையும் , (அதாவது தனி நபர் இடமாறுதல் போன்றவை அல்லாமல் ) உடன் மாநிலச் சங்கத்திற்கு E -MAIL மூலம் அனுப்பிட வேண்டுகிறோம்
கோட்ட/ கிளைச் செயலர்கள் தயவு செய்து ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறோம் . எதிர்வரும் 17.04.2013 க்குள் உங்கள் பிரச்சினைகள் மாநிலச் சங்கத்தை வந்து சேர வேண்டுகிறோம்.20.04.2013 க்குள் SUBJECTS CHIEF PMG இடம் அளிக்கப் பட உள்ளது.
பிரச்சினையை அனுப்புபவர்கள் உங்கள் முகவரி/ அலை பேசி என்னுடன் தயவு செய்து அனுப்பவும். அப்போதுதான் அதில் ஏதானும் சந்தேகம் இருப்பின் நாங்கள் விளக்கம் கேட்டு தெளிவு பெற முடியும்.
தற்போது FINAL MINUTES இல் கொடுக்கப் பட்ட 41 பிரச்சினைகளுக்கான பதில்களின் நகலை உங்களுக்கு கீழே அளிக்கிறோம் இது தவிர கூட்டத்தில் பேச நேரமில்லாத இதர 51 பிரச்சினைகளுக்கான ACTION TAKEN REPORT ஏற்கனவே உங்களுக்கு இந்த வலைத்தளத்தில் அளிக்கப் பட்டதை நினைவு கூர்கிறோம்