முகரம் பண்டிகையை ஒட்டி , நமது வலைத்தளத்தில் நேற்று அறிவித்தபடி , விடுமுறை தினம் 14.11.2013 க்கு பதில் 15.11.2013 க்கு மாற்றிட நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் மூலம் CENTRAL GOVT. EMPLOYEES WELFARE CO-ORDINATION COMMITTEE யின் செயலரான CHIEF COMMISSIONER OF CENTRAL EXCISE இடம் காலை 11.00 மணியளவில் ஒப்புதல் பெறப் பட்டது.
மதியம் 03.00 மணியளவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசுத் துறைகளுக்கும் இதற்கான CONCURRENCE E-MAIL மூலம் அளிக்கப் பட்டது . நமது CPMG அலுவலகத்தில் இருந்து மாலை 06.00 மணி வரை இதற்கான உத்திரவு இடப்படவில்லை .ஆகவே இது குறித்த தகவல் உங்களுக்கு அளிக்கப்படவில்லை .
அதற்கு மேல் நான்கு மண்டலங்களுக்கும் உத்திரவு அளிக்கப்பட்டதாக உரிய அதிகாரி தற்போது தெரிவித்தார் . தற்போது அந்த உத்திரவின் அடிப்படையில் காலை 10.00 மணிக்கு மேல் அனைத்து கோட்டங்களுக்கும் உத்திரவு அந்தந்த மண்டலங்களில் இருந்து அளிக்கப் படும் .
====================================================================
மத்திய மண்டல / தென் மண்டல
கோட்ட / கிளைச் செயலர்களின் கவனத்திற்கு :-
CBS குறித்த உயர் அதிகாரிகளின் கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 18,19,20 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதால் 18.11.2013 அன்று திருச்சியில் நடை பெறுவதாக இருந்த இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி எதிர்வரும் 21.11.2013 அன்று மாற்றப் பட்டுள்ளதாக தகவல் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது . இது போல தென் மண்டலத்தின் பேட்டியின் தேதியும் மாற்றப்படும் என்று தெரிகிறது . உரிய அதிகார பூர்வ அறிவிப்பு வந்தவுடன் மேல் விபரம் தெரிவிக்கப் படும்.