Wednesday, November 13, 2013

CIRCLE UNION LETTER TO PMG , SR ON ABRUPT CLOSURE OF MELUR SOUTH P.O.

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்த MELUR  SOUTH  அஞ்சலகம் , பொது மக்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் கொடுக்கப் படாமல் ,  திவாலாகும் FINANCE  COMPANY கள்  இரவோடு இரவாக சுருட்டிக் கொண்டு ஓடுவது போல , திடீரென்று மூடப் பட்டதாக  மாநிலச் சங்கத்திற்கு  புகார்  வந்துள்ளது . விபரங்கள் விசாரிக்கையில்  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப் பெற்றன . 

முதலாவது  , இந்த அலுவலகத்தை மூடவேண்டும் என்று CPMG / PMG  எவரிடமும் அனுமதி பெறவில்லை .

இரண்டாவது ,  இந்த அலுவலகத்தை மூடுவதற்கு எந்தவித காரணங்களும் காட்டப் படவில்லை .

மூன்றாவது , திடீரென்று  அலுவலகம் காணாமல் போனபிறகு , பொது மக்களிடம் இருந்து பிரச்சினை எழுந்தவுடன் இரண்டு நாட்கள் கழித்து  இது மூடல் இல்லை  - இணைப்புதான்  என்று கூறப் பட்டது . ஆனால் மேலூர் S .O . வில் தனி  COUNTER  ஆக இயங்கத் துவங்கியது - இடையில் இரண்டு நாட்கள்  ACCOUNT BAG  அனுப்பப் படவில்லை .

இது குறித்து பொது மக்களில் ஒருவர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில்  கேட்டதற்கு , அந்த ஊரின் MLA  வை அணுகி சமாதானம் செய்து  அதன் பிறகு அலுவலகத்தை மூடியதாக  முதுநிலைக் கண்காணிப்பாளரே எழுத்து பூர்வமாக ஒப்புக்  கொண்டுள்ளார். 

தற்போது பொதுமக்களில் பலர் , அந்த அலுவலகம்  வணிகப் பகுதியில்  நம் இலாக்காவுக்காக குறைந்த வாடகையில் இயங்கி வந்ததாகவும் , இதனால்  நஷ்டம் ஏற்படுவதாக  LAND  LORD ,  SSPOS  இடம்  கேட்டுக் கொண்டதாலும் அந்த இடம் அதிக 'PAGADI ' க்கும்  உயர் வாடகைக்கும் பேசப் பட்டதாகவும்  வேறு ஒரு  நபருக்கு  தருவதாக உறுதி அளிக்கப் பட்டதாகவும் 

அதன் அடிப்படையிலேயே , அந்த கட்டிடச் சொந்தக் காரரின் நன்மை கருதி , பொது மக்களுக்கு விரோதமாக  அந்த அஞ்சலகம் , பொதுமக்களுக்கு  ஒரு சிறு முன்னறிவிப்பு கூட அளித்திடாமல் மூடப் பட்டதாகவும்  புகார்  தெரிவிக்கின்றனர். 

இதையெல்லாம்  கவனிக்க வேண்டிய மண்டல நிர்வாகம் கடந்த ஒரு மாதமாக வாய் மூடி மௌனியாக  உள்ளது. சாதாரண ஊழியர் E-POST  பட்டுவாடா செய்திட  ஸ்பீட் போஸ்ட் போல  ACKNOWLEDGEMENT  பெறுவதில்  சுணக்கம் இருந்தால் கூட, அந்த தபால்கள் உண்மையாகவே சரியாக தபால் காரரால் , குறிப்பிட்ட நேரத்தில்பட்டுவாடா   செய்திருந்தாலும் கூட .. அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ ' SUSPEND ' என்று கூறும் அதிகாரிகள் , இப்படி முழுப் பூசணிக் காய்களை சோற்றில் மறைக்கலாமா ?  உண்மை எத்தனை காலத்திற்கு ஊமையாக இருக்கும் . 

பொது மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள் ! இப்போது நம்மிடம் சொல்கிறார்கள் ! நாளை எங்கெல்லாம் சொல்வார்களோ !  உயர் அதிகாரிகள்  நீதியை நிலைநாட்டுவார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம் !