Wednesday, November 20, 2013

MARCH TO PARLIAMENT - STAY FOR T.N. COMRADES AND OTHER DETAILS

அன்பான கோட்ட/ கிளைச் செயலர்களே ! 
 மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !

எதிர் வரும் 11.12.2013 மற்றும் 12.12.2013 தேதிகளில்  நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணியில் கலந்துகொள்வதற்கு ஊழியர்களை தயார்படுத்தும் பணியில் இருப்பீர்கள்  என்று  எண்ணுகிறோம்.  இதுவரை நான்கு கிளைகளில் இருந்து மட்டும்  எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்ற தகவல்  கோட்ட/ கிளைச் செயலர்களிடம் இருந்து வந்துள்ளது. இதர கிளைகளில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை . சரியான தகவல் வந்தால் மட்டுமே  நம்முடைய தோழர்கள் தங்குவதற்கு   டெல்லி மாநகரில் இடவசதி செய்து தர இயலும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் அந்த நேரத்தில் எந்த ஏற்பாடும் செய்திட இயலாது என்பதையும்  கவனத்தில் கொண்டிட வேண்டுகிறோம்.

இருந்த போதிலும்  தற்போது 10.12.2013 மற்றும் 11.12.2013 ஆகிய இரு தேதிகளுக்கு தமிழகத்தில் இருந்து வரும் தோழர்களுக்கு மட்டும் தனியே  திருமண மண்டபம்  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது . 12.12.2013 தேதியில் அதே  இடம் பெறுவதில் சற்று சிக்கல்  உள்ளதாக நமது துணைப் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் 12.12.2013 அன்றும்  அதே மண்டபம் ஏற்பாடு செய்திட நாம் கோரியுள்ளோம்.

இடம் :  சுபம்  திருமண மண்டபம் 
சரோஜினி நகர் அஞ்சல் ஊழியர் குடியிருப்பு வளாகம் 
சரோஜினி நகர் பஸ் டிப்போ  நேர் எதிரில் .
புது டெல்லி .

இந்த குடியிருப்பு வளாகத்தில் தான் நமது துணைப் பொதுச் செயலரும் தங்கியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே  இதர உதவி பெறுவதில் பிரச்சினை எதுவும் நம்  தோழர்களுக்கு இருக்காது .

அவரது அலைபேசி  எண் : 07838019997  
இல்லத் தொலைபேசி எண் : 01124121329

சரோஜினி நகர்  வருவதற்கு  வழிக் குறிப்பு 

புது டெல்லி HAZRAT  NIZAMUDDIN  RAILWAY  STATION  இல் இறங்க வேண்டும் . அங்கிருந்து  சரோஜினி நகர் பஸ் டெப்போ  வுக்கு ஆட்டோ அல்லது வாடகை  காரில்தான் வர இயலும் . மொத்த தூரம் 8.5  கி. மீ. பயண நேரம் 20 லிருந்து 25 நிமிடங்கள் .

அரசு நிர்ணய ஆட்டோ கட்டணம் : 

பகலில்  3 பேருக்கு  ரூ. 77.00   இரவில்   3 பேருக்கு : ரூ. 96.00

அரசு நிர்ணய வாடகை கார்  கட்டணம் : 

பகலில்  4 பேருக்கு  ரூ. 130.00  இரவில்  4 பேருக்கு ரூ. 162.00

CAB  இல்  7 பேர் வருவதற்கு  கட்டணம் :

 பகலில் ரூ. 170.00  இரவில்  ரூ. 200.00

சரோஜினி நகரில் இருந்து JANTAR  MANTAR  வருவதற்கு வழிக் குறிப்பு 

சரோஜினி நகரில் இருந்து  பேரணி நடைபெறும் JANTAR  MANTAR பகுதிக்கான தூரம் 8.5 கி.மீ.  பயண நேரம் 20 நிமிடங்கள் . ஆட்டோ கட்டணம்   3 பேருக்கு  ரூ. 75.00   கால் டாக்ஸி :  4 பேருக்கு  ரூ. 130.00 . 

சரோஜினி நகர்  சுபம்  திருமண மண்டபம்  அமைந்துள்ள  அஞ்சல் குடியிருப்புக்கு நேர் எதிரே ( நமது  துணைப் பொதுச் செயலரின்  வீட்டிற்கு நேர் எதிரே )  சரோஜினி  நகர் பஸ் டெப்போ  உள்ளது . அங்கேயே பேருந்து நிறுத்தமும் உள்ளது . அந்த பேருந்து நிறுத்தத்தில்  இருந்து  பேருந்து நேரிடையாக உள்ளது . அதன் பயண நேரம் 30 - 40 நிமிடங்கள் .

அருகில் AIIMS METRO ரயில்வே ஸ்டேஷன் உள்ளது . அதற்கு சரோஜினி நகரில் இருந்து  நடந்தும்  செல்லலாம். அல்லது  எதிரே உள்ள பஸ் டெப்போ  நிறுத்தத்தில் இருந்து  தடம் எண்  544 என்ற பேருந்தில்  ஏறி அருகில் உள்ள AIIMS  METRO RAILWAY STATION இல் இறங்கி அங்கிருந்து YELLOW LINE METRO ரயில் மூலம் PATEL CHOWK  METRO  STATION  இல் இறங்கி GATE NO  4 வழியே வெளியே வந்தால்  JANTAR MANTAR  வரலாம். 

இது தவிர  பேரணிக்கு முன்னதாகவோ அல்லது  மறுநாளோ தங்கி   டெல்லி நகரை  மற்றும் அதன் அருகாமையில் உள்ள  ஆக்ரா , பதேபூர் சிக்ரி , மதுரா, பிருந்தாவன்  உள்ளிட்ட பகுதிகளை  சுற்றிப் பார்க்க விரும்பும் தோழர்களுக்கு   சுற்றுலா  VAN   அல்லது பேருந்து தினம்  காலை 07.00 மணிக்கு புறப்பட்டு  இரவு 08.00 - 10.00 க்குள் திரும்புமாறு  உள்ளன . 

அவற்றை  நமது  துணைப் பொதுச் செயலர் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் . ஓரளவு நியாயமான கட்டணத்தில்  இந்த வசதியை பெறலாம். நேரிடையாக வரும் AGENT  கள்  மூலம் செல்ல வேண்டாம் . ஏனெனில் அவர்கள்  மொழி தெரியாத நம் தோழர்களிடம்  ஏமாற்றிட வாய்ப்பு உள்ளது .  மேலும் தென்னிந்திய உணவு  கிடைக்கும் இடங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

கோட்ட/ கிளைச் செயலர்களே !

1) நீங்கள்  வரும் போது உங்கள் கோட்டத்தின் BANNER  மற்றும் கொடியுடன் தவறாமல் வருகை  தர வேண்டுகிறோம். 

2)  இது டிசம்பர் மாதமானதால் டெல்லி நகரில் குளிர் அதிகமாக இருக்கும்.எனவே கண்டிப்பாக பேரணிக்கு வரும் தோழர்கள் அனைவரிடமும்  கம்பளி ஆடைகள் , போர்வை , ஸ்வெட்டர் , கம்பளி தலைக் குல்லாய்  கொண்டுவர அறிவுறுத்தவும் .

3) பேரணியில் தமிழகத்தை சேர்ந்த தோழர்கள் அனைவரும் தமிழக அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS  மூன்று , RMS  நான்கு , GDS  தோழர்கள் தமிழகத்தின்  BANNER  இன் கீழ்  வரிசைப் பட்டு  நிற்க அந்தந்த பகுதி தோழர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தவும்.

4) இந்த  செய்திக்  குறிப்பை  நகல் எடுத்து  பேரணிக்கு வரும் அனைத்து தோழர்களிடமும்  கண்டிப்பாக கொடுக்கவும்.