Wednesday, November 13, 2013

GENERAL SECRETARY LETTER TO SECRETARY POST ON LEAKAGE OF REVENUE BY TREATING E-POST LIKE REGD/SPEED LETTER

ஈ -போஸ்ட் எதற்காக இலாக்காவில் அறிமுகப் படுத்தப் பட்டது என்பதையே மறந்து , இலாக்காவின் எந்த வித சட்ட விதிகளையும் சற்றும் மதிக்காமல் , குப்பையில் தூக்கி  எறிந்து , தனக்குத் தானே சட்டங்களை இயற்றிக் கொண்டு, வியாபார அபிவிருத்தி என்ற பெயரில் , வியாபாரம் செய்து ,  லட்சக் கணக்கான ரூபாய்களை இலாக்காவுக்கும் அரசுக்கும் நஷ்டமேற்படுத்தும்  தென் மண்டல / மேற்கு மண்டல நிர்வாகங்கள் !

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது பாடுபடும் அப்பாவித் தொழிலாளர்களுக்குத் தெரியவில்லை !  ஊழியர்கள் கொடுமைப் படுத்தப் பட்டு , இலாக்கா நஷ்டப் பட்டு , சட்டங்கள் குப்பையில்  கொட்டப் பட்டு ... இது என்ன  நிர்வாகமோ  என்று கேட்டு இலாக்கா முதல்வருக்கு நமது பொதுச் செயலரின் புகார் கடிதம் கீழே பார்க்கவும் .